Tag Archive: ஒரு கணத்திற்கு அப்பால்

பாவம் என்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இது என்னுடைய இரண்டாவது கடிதம்.. காலையில் என்னுடைய நண்பர் போன் செய்து ‘ஜெயமோகன் பிளாக்கில் ஒரு சிறுகதை போட்டிருக்கிறார் டைமிருந்தா படி’என்றார். கையில் பெரியதிரை செல்போனிருந்தாலும் அதில் படிக்க சிரமமாக தெரிந்ததால். அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த பின் தான் படிக்க முடிந்தது. சமீபத்தில் பல சிற்றிதழ்களில் சிறுகதைகள் படித்து சோர்ந்து போயிருந்த நேரத்தில் சிறு அதிர்வும், துடிதுடிப்பும் ஏற்படுத்தியருக்கிறது ஒரு கணத்திற்கு அப்பால். 1.சொல்லப்படாத கதை.. 2..இன்றைய உலகியல் கொண்ட கதைக்களம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75169

ஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3

அன்புள்ள ஜெ ஒருகணத்திற்கு அப்பால் வாசித்தேன். ஜப்பானிய படம் ‘இகிறு’ வை நினைவு படுத்தியது. மேலோட்டமாக காணின் வயதான கிழவர் ஒருவர், வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க துடிப்பவர் போல் தோன்றும். உண்மை அதுவல்ல. இளமையின் அருகாமை மட்டுமே ஒரு புத்துணர்ச்சி தரவல்லது. வாழ்வின் புதிய கிளைகளை உருவாக்கவல்லது. அந்த திரைப்படத்தில் யாரும் செய்ய இயலாத ஒரு பொதுப்பணி ஒன்றை அவர் செய்வார். ஒரு பூங்காவை ஏற்படுத்துவது என. யயாதியில் இந்த ஒரு புள்ளி உண்டோ என ஐயுற்றிருக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75160

கரடி-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு கதைகளில் உச்சவழு ,முடிவின்மைக்கு அப்பால் ,கடைசி முகம் போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமானவை .பல முறை உங்களுக்கு மெயில் அனுப்ப நினைத்து பயத்தினால் அனுப்ப முடியாமல் தவிர்த்திருக்கிறேன் ..சில மெயில்களை ஒரு சில வரிகள் மட்டும் தட்டச்சு செய்து அனுப்பி இருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75232

உன்னதமானவையும் அவசியமானவையும்

ஆசிரியருக்கு , நீங்கள் கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகள் பின்னல் சென்ற வேகம், ஆயிரம் கால் மண்டபம் தொகுப்பை படித்த அந்த 7,8 ஆண்டுகளுக்கு முந்தைய மனநிலையில் இதை எழுதுகிறேன். மிகச் செறிவான சிறுகதை. காமம் நிறைவதல்ல ஒன்றில் இருந்து அடுத்ததற்கு என தொடர்வது, உயிராற்றலின் இயல்பு அது என்பதே கதையின் மையம். இறுதியில் அப்பெண் நேரில் வந்திருந்தால் அடுத்த பெண்ணைக் கேட்டிருப்பார். இக்கதையைப் படித்து விட்டு sublimation என்பதன் எதிர்ப்பதம் என்ன எனத் தேடினேன் , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75171