Tag Archive: ஒத்திசைவு ராமசாமி

கல்வியில் ஒரு புதிய நகர்வு

  ஒத்திசைவு ராமசாமி எழுதியிருக்கும் இந்தக்குறிப்பு ஆர்வமூட்டுகிறது. மத்திய அரசின் பாடத்திட்டங்களும் சரி, பயிற்சிக்கான வழிமுறைகளும் சரி பெருமளவுக்கு ஆக்கபூர்வமாக மாறியிருக்கின்றன. சூழல் மாறாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஆசிரியர்களின் பயிற்சியின்மை. வேலைகிடைத்தபின் எதையாவது வாசிக்கும், பயிலும் ஆசிரியர்கள் பத்தாயிரத்தில் ஒருவர்மட்டுமே. இன்னொன்று கல்விநிறுவனங்கள் கல்வியை வெறும் வணிகமாகக் கருதி குரங்குகளுக்குக் கொடுக்கும் பயிற்சியை மானுடக்குழந்தைகளுக்கு அளிப்பது    

Permanent link to this article: https://www.jeyamohan.in/88571

வரலாற்றாய்வின் வன்முறை

  ஒத்திசைவு’ ராமசாமி அவர்கள் அவரது வழக்கமான தவளைநடையில் ஏகப்பட்ட சுயபகடி ,பிறகேலிகளுடன் எழுதியிருந்தாலும் இந்தக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று.இர்ஃபன் ஹபீப், ரொமிலா தாபர் போன்ற ‘வரலாற்றாய்வாளர்கள்’ + தஹிந்துத்துவா அரைகுறைகள்: இவர்களைப் புரிந்துகொள்வது எப்படி டி டி கோஸாம்பி மரபைச்சேர்ந்த இந்திய வரலாற்றாய்வு முறைமை மார்க்ஸிய செயல்திட்டத்தின் அடிப்படை விதிகளின்படி முதலில் நிறுவனங்களைக் கைப்பற்றியது. ஆனால் இந்திய அரசியல் வழக்கப்படி ஓர் அதிகாரபீடமாக இறுக்கிக்கொண்டது உயர்கல்வித்துறையில் முழுமையாகவே மாற்றுவிவாதங்களை நிராகரிக்கும். ஒற்றைப்படைப்பிரச்சரமே ஆய்வு என்னும் நிலைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86484

மதங்கள், நடைமுறை இஸ்லாம்

இஸ்லாம் மற்றும் மதங்கள் பற்றிய ஒரு பொதுப்புரிதலுக்காக ஒத்திசைவு ராமசாமி எழுதும் கட்டுரையின் முதல்பகுதி. சமீபகாலத்த்தில் மிகுந்த மனச்சமநிலையுடன் , உண்மையான வாசிப்புப்பின்புலத்துடன் எழுதப்பட்ட கட்டுரை எனத் தோன்றியது மதங்கள் நடைமுறைகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/77714

வீரமணியின் பக்தி

விடுதலை வீரமணி செய்த முட்டாள்தனம் பற்றி ஒத்திசைவு ராமசாமி எழுதியிருக்கிறார். வேடிக்கையாக இருந்தது. திக காரர்களின் வழக்கமான அசட்டுத்தனம். அவர்கள் எப்போதுமே மேலைநாடுகளில் ஞானம் விளைவதாக நம்பும் மூடர்கள். ஆனால் நாசா ராமர்பாலத்தை அடையாளம் கண்டுவிட்டது என்றும் சனீஸ்வரன் கோயில் முன் துணைக்கோள்கள் திசைமாறுவதாக நாசாவே சொல்லிவிட்டது என்றும் நம்பும் இந்துபக்தர்களும் இதே மனநிலைகொண்டவர்கள்தான்

Permanent link to this article: https://www.jeyamohan.in/77206

கர்ட் போராட்டம், ஓரான் பாமுக், ஒத்திசைவு

நேற்று முதல் தொடர்ச்சியாக வாசித்து முடித்த நீளமான கட்டுரைத் தொடர் கர்ட்களின் தேசிய எழுச்சி பற்றியும் அவரது தோழி கில்யஸ் அதில் இறந்ததைப்பற்றியும் ஒத்திசைவு ராமசாமி அவரது இணையதளத்தில் எழுதியது. உண்மையில் நான் முதல்முறையாக இத்தனை விரிவான, தகவல்செறிந்த ஒரு கட்டுரையை இவ்விஷயமாக வாசிக்கிறேன். நுணுகி நுணுகி செய்தியை வாசிப்பவன் இல்லை என்றாலும் ஆங்கில, தமிழ் நாளிதழ்களை தொடர்ந்து வாசிப்பவன். ஏன் இதைப்பற்றி ஒரு குறிப்பிடும்படியான கட்டுரை என் கண்களில் படவேயில்லை என்ற வியப்புதான் எனக்கு ஏற்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74593

நிதிவலை -கடிதம் ஒத்திசைவு ராமசாமி

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நலமா? அண்மையில் பதிக்கப்பட்ட, நிதிவலை சார்ந்த தங்கள் தளத்து கட்டுரைகளைப் படித்தேன். இந்த, இந்தியாவிற்குப் பெரும்பாலும் தேவையேயற்ற வெளி நாட்டு நிதியின் தொடர்ந்த வருகை என்பது ஒரு தொடரும் சோகம்; இது, நம் தேசப் பிச்சைக்காரர்களால் குயுக்தியுடன் யாசிக்கப்படுவதும், இதற்கென்று ஒரு தொடர்ந்து விரிவாக்கப்படும் தொழில்முறை உருவாகியிருப்பதும் – உட்குறிக்கோள் கொண்ட தனவான்களால்/ நிறுவனங்களால் மேட்டிமைத்தனத்துடன் விட்டெறியப்படுவதுமான ஒன்றாகவும் வடிவெடுத்திருப்பது இன்னமும் சோகம். அண்மைக் காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கீழை ஆசிய நாடுகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70826

எழுத்துரு சில எதிர்வினைகள்

காந்தி இந்துஸ்தானியின் வரிவடிவம் தேவநாகரி என்பதில் தெளிவாக இருந்தார். ராஜாஜி மொழிகளின் வரிவடிவங்களை மாற்றக் கூடாது என்றார். பெரியார் தமிழ் ரோமன் வரிவடிவத்தில் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவர். வரிவடிவப் பிரச்சினை நமது அரசியல் சட்டம் எழுதப்படும்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. மசானி போன்றவர்கள், “இந்திய மொழி கள் ரோமன் வரிவடிவத்தில் இருக்க வேண்டும்” என்று சொன்னால், பாபு ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள், “எல்லா மொழிகளும் தேவநாகரி வரிவடிவில் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். பி.ஏ.கிருஷ்ணனின் எதிர்வினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41680