Tag Archive: ஐரோம் ஷர்மிளா

சூரியதிசைப் பயணம் – 11

ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம் ஆகிய ஏழு வடகிழக்கு மாகாணங்கள் ஏழுசகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாகாணங்கள் அனைத்திற்கும் உள்ள பொது அம்சம் என்பது இவை அனைத்துமே பழங்குடிகளுக்குரியவை என்பது. மகாபாரதகாலம் முதல் அறியப்பட்ட ஒரே பழங்குடிப்பகுதி மணிப்பூர்தான். பிற நிலப்பகுதிகள் அப்போது மக்கள் வாழாத அடர்காடுகளாக இருந்திருக்கவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71801

இரு பழைய கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கனிமொழி பற்றித் தொடுக்கப்பட்ட வினாவுக்கு, தாங்கள் அளித்த பதில் மனதைத் தொட்டது. எனக்கும் அவரின் அரசியல் சிந்தனைகள் குறித்துக் கோபம் உண்டு. உங்களின் மனச் சமநிலை பற்றிய பார்வையாளரின் கருத்தை ஆமோதித்த கனிமொழியின் மீது அப்போதைக்குத் தீராத சினம் உண்டானது. பதவியில் இருக்கும்போது எதிர்த்து நின்று எதிர்க் கருத்தைச் சொல்வதுதான் விவேகமானது. அவரின் பதவியும் புகழும் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் உண்டாகும் புண்ணை மேலும் சிதைப்பது விவேகமாகாது. உங்கள் பதிலில் நான் நெகிழ்ந்துதான் போனேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21407

ஐரோம் ஷர்மிளா-கடிதம்

வணக்கம், அற்புதமான கட்டுரை. இதுநாள் வரை comunisam சார்ந்த பத்திரிகைகள் படித்து ஒரு தவறான புரிதலில் இருந்துள்ளேன் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த 24×7 இந்திய ஆங்கில மீடியா இப்படி தொடர்ந்து இந்த நாட்டிற்கு துரோகம் செய்வது மிகவும் கொடுமையான விஷயம். இதைத் தட்டிக் கேட்க  யாரும் இல்லை. எனக்கு மற்றுமொரு கேள்வி. உலக அளவில் இனக் குழுக்கள் என்ற ஒன்று இருந்தால் அந்த இனக் குழுக்கள் இடையே நடக்கும் சண்டையைப் பெரிது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16802

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1

அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது மணிப்பூரின் போராளியான ஐரோம் ஷர்மிளா சானு இங்குள்ள சில இடதுசாரிகளால் அண்ணா ஹசாரேக்கு எதிராக முன்னிறுத்தப்பட்டார். அண்ணாஹசாரேவின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்த சர்மிளா பெயரைப் பயன்படுத்தினார்கள். ஆச்சரியம்தான், அவர்கள் இருவரும் ஒரே மனநிலையைக் கொண்டவர்கள் ஒரே மனிதரை, காந்தியை, ஆதர்சமாகக் கொண்டவர்கள். ஒருவரின் போராட்டத்துடன் இன்னொருவரின் போராட்டம் இணைத்து அல்லவா பேசப்பட்டிருக்க வேண்டும்? என்ன காரணம் என்றால் ஐரோம் ஷர்மிளா எ தற்காக போராடினாலும் இங்கே இந்தியாவின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16714