Tag Archive: ஏ.ஆர்.ரஹ்மான்

நெஞ்சுக்குள்ளே…

கடல் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த பாடல். ரஹ்மான் எம்.டி.விக்காக பாடியது. முதன்முறையாக இதைக்கேட்கையில் முழுமையாகவே இதன் நரம்பொலிகளில் ஈடுபட்டு குரலையே என்னால் கவனிக்கமுடியவில்லை. அதன்பின் குரலை. அப்போது காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன, அவற்றை கவனிக்கமுடியவில்லை. ரஹ்மானின் சாதனைப்பாடல்களில் ஒன்று என நான் இதைச் சொல்வேன். ஒரு சினிமாப்பாடலுக்காக எடுத்துக்கொண்டிருக்கும் உழைப்பும் நுணுக்கமாக சேர்த்துச் சேர்த்து திரட்டிய படைப்பூக்கமும் ஓர் அற்புதம் ஆனால் இந்தப்பாடலை கடல் படத்தின் பாடல்களில் இரண்டாம் இடத்தில்தான் வைப்பேன். இன்னொன்று உள்ளது, ஒரு படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31596/

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையை அகிலன் வல்லினம் இதழில் எழுதியிருக்கிறார். பொதுவாக ரஹ்மானைப்பற்றி எழுதுபவர்கள் அவருக்கு இருக்கும் ஒரு ‘காஸ்மாபாலிட்டன் இமேஜ்’ குறித்துதான் எழுதுவார்கள். அகிலன் நேரடியாக அவர் பழகிய ரஹ்மானைப்பற்றி எழுதியிருக்கிறார். இனிமையான நேரடியான மனிதர் என்று. பெரும்பாலும் உண்மையான கலைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களின் புகழைச் சுமந்துகொண்டிருப்பதில்லை. நான் ரஹ்மானைச் சந்திக்க வாய்ப்பிருந்தது. ரஹ்மானின் நண்பர் பரத்பாலா [வந்தேமாதரம் எடுத்தவர்] 19 ஆவது படி என்று ஒரு படம் எடுப்பதாக இருந்தார். எம்டி வாசுதேவன்நாயர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6651/

இளையராஜா, இ.பா, ஏ.ஆர்.ரஹ்மான்

இந்த வருடத்துக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பத்மபூஷன் விருதுபெறுகிறார்கள். பத்மஸ்ரீ விருது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது.   முப்பதாண்டுகளாக தமிழ்ச்சமூகத்தின் இசையுணர்வு இளையராஜா வையாக உருவாகி வந்திருக்கிறது. ஆனால் அவரது பாடல்கள் இன்னமும்கூட தமிழ்நாட்டில் முழுமையாக ரசிக்கப்படவில்லை என்பதை அவற்றை கேட்கும்தோறும் உணர்கிறோம். இளையராஜா படங்களுக்கு அமைத்த பின்னணி இசைக்கோர்ப்புகள் அப்படங்களில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட்டால் தனியான இசை ஆக்கங்களாக முழுமையான அனுபவத்தை அளிக்கக்கூடியவை. அவ்வாரு பார்த்தால் அவரது இசையுலகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6376/

ரஹ்மான்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ரஹ்மானை சிறபித்து பாராட்ட வேண்டிய இந்த நேரத்தில் நீங்கள் அவரை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியுட்டுகிறது. அனால் அதே நேரத்தில் அவரை பாராட்டும் நோக்கில் சற்றே அதீதமாய் சென்று “தமிழ் சினிமா நவீனத்துவத்துக்கே வராமலிருந்த காலத்தில் இசையை பின்நவீனத்துவ காலகட்டத்துக்குக் கொண்டு சென்றதே ரஹ்மானின் சாதனை.” என எழுதியிருப்பது தமிழ் சினிமாவையோ அதன் இசை மரபையோ  சரியாக உள்வாங்காமல் அவசரத்தில் எழுதி விட்ட த்வனி வருகிறது. தமிழ் சினிமாவின் இசை மரபில் மெல்லிசை மன்னர் MSV …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1951/

ஏ.ஆர்.ரஹ்மான்,ரஸூல் பூக்குட்டி

சில வருடங்களுக்கு முன் நண்பர் வசந்த் இயக்கிய ‘ரிதம்’ என்ற படத்தைப் பார்க்கச் சென்றோம். அது ஒரு இசைபப்டம். ஏ.ஆர்.ரஹ்மானின் மிகச்சிறந்த பாடல்கள் பல கொண்டது. படம் முடிந்து திரும்பும்போது நான் அருண்மொழியிடம் கேட்டேன் ”இதிலே எந்தப்பாட்டு சூப்பர் ஹிட் ஆகும்?” ”காற்றே என் வாசல் வந்தாய்…தான்  ஏன்?” என்றாள். நான் ”அது உடனே ஹிட் ஆகும். ஏன் என்றால் அதில் தெளிவான உச்சரிப்பு இனிய குரல் நல்ல பாடல்வரிகள் மென்மையான மெட்டு எல்லாம் இருக்கிறது. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1894/