Tag Archive: ஏழூர் அய்யாசாமி

மரம் ஓர் அனுபவம்

படித்தவுடனே பதில் போட நினைத்தேன் வேறு வேலைகள் ஆக்ரமித்து விட்டன. முதலில் அய்யாச்சாமி அவர்கள் ஆத்மா சாந்தியடையும் வகையில் இன்னும் பல்லாயிரம் மரங்கள் நடப்படப் பிரார்த்திக்கின்றேன். என்னால் அவருக்கு முடிந்த அஞ்சலி ஒரு நூறு மரங்களை நடுவது மட்டுமே. இவரைப் பற்றியும் இவரைப் போலவே தமிழ் நாட்டில் இருக்கும் இன்னும் ஒரு பத்திருபது உன்னதமான மனிதர்களையும் தொடர்ந்து பசுமை விகடன் மற்றும் மரம் வளப்பதை ஊக்குவிக்கும் இணைய தளங்களில்/கூகுள் குரூப்புகளில் படித்து வருகிறேன். எந்தவித பிரதியுபகாரமும் எதிர்பாராமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13284

மரங்களின் மைந்தர்கள்

திரு. அய்யசாமியைப் போலவே கர்நாடகாவில் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர்தான் திம்மக்கா. அவரும் அவரது கணவரும் குழந்தைப்பேறு இல்லாத வெறுமையை மாற்ற மரம் வளர்க்க ஆரம்பித்தனர். (மாளவிகா சருக்கையின் நாட்டிய நிகழ்ச்சிகளின் மூலம் நான் திம்மக்காவைப் பற்றி அறிந்தேன்.) இவரைப் பற்றிய சுட்டி http://en.wikipedia.org/wiki/Saalumarada_திம்மக்க இம்மாதிரி மனிதர்களால்தான் இன்றும் உலகம் உய்கிறது. இவர்களுக்கு வணக்கங்களுடன், சுதா — ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13268

மரங்களின் மனிதர்-அஞ்சலி

மரங்கள் மேல் கொண்ட காதலால் வாழ்நாளெல்லாம் சாலையோரங்களில் மரங்கள் நட்டு வளர்த்த முதியவர் சத்தியமங்கலம் ஏழூர் அய்யாசாமி அவர்களைப்பற்றி தெரிந்திருக்கலாம். சில இதழ்களில் அவரைப்பற்றி செய்தி வந்திருக்கின்றது. அவரைப்பற்றிய செய்தி இந்த பதிவில் உள்ளது. மரங்களின் தந்தை அய்யாசாமி அய்யாசாமி அவர்கள் நேற்று 86 ஆவது வயதில் மரணமடைந்துவிட்டார். இச்செய்தியை ஈரோடு கதிர் அவரது பதிவில் எழுதியிருக்கிறார் .3000 பிள்ளைகளின் தந்தை அறம் கதைவரிசையில் அசாதாரணமான மனிதர்களை வாசித்த பலர் அத்தகையோரை தாங்கள் சந்தித்ததில்லையே என்பார்கள். சந்திக்கலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13252