Tag Archive: ஏழாம் உலகம்

வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்

எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலையில் ஊட்டி மலைப்பாதையில் நித்ய சைதன்ய யதியும் நானும் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தோம். நான் நித்யாவிடம்  சி ஜி யுங் குறித்து அவரது கருத்து என்ன என்றேன். அதை தன் பல நூல்களில் பலவாறாகச்சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். நான் ஒட்டுமொத்தமாக அவரது கருத்தைக் கேட்டேன். அவர் அதை சொல்வது கஷ்டம் என்றார். பிறகு எதிரே தெரிந்த மலையைக் காட்டி இதன் வடிவம் என்ன என்றார். நான் ஒழுங்கற்ற கூம்பு வடிவம் என்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/757

ஒளியுலகம்

இருட்டு என்பது குறைந்த ஒளி என்று பாரதி சொன்னதை நான் நினைத்துக்கொண்ட தருணம் என்பது சமீபத்தில் ஏழாம் உலகத்தை என் மேஜைமேல் பார்த்தபோதுதான். இருட்டைத்தான் எழுத எண்ணினேன். ஆனால் சூழிருட்டில் ஒளிரும் வெளிச்சத்தையே எழுதியிருக்கிறேன். ஏழாம்உலகம் நான் எழுத எண்ணிய உலகம் அல்ல. மறக்க எண்ணீய உலகம். ஏன் மறக்க எண்ணினேன் என இன்று நினைக்கையில் வெட்கப்படுகிறேன். நான் அந்த மனிதர்களிடமிருந்து என்னை பிரித்துக்கொள்ள பலவருடங்கள் முயன்றிருக்கிறேன். காரணம் நான் அவர்களின் அந்நிலைக்குப் பொறுப்பானவன். நான் அனுபவிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37195

ஏழாம் உலகின் பண்டாரம்

அன்புள்ள ஜெ, தங்களின் ஏழாம் உலகம் படித்தேன். இப்படியும் மனிதர்களை பிய்த்துத் தின்று வாழும் சக மனிதர்களைப் படித்து வெறுத்துப் போனேன். “நான் கடவுள்” படம் ஏற்படுத்தாத அந்த பாதிப்பை இவ்வாசிப்பு ஏற்படுத்தியது. சிறிது நாட்களுக்கு முன்பு வலைத்தளத்தில் “நான் கடவுள்” படத்தைப் பற்றிய ஒரு பதிவைப் படித்தேன். உண்மையில் எனக்குமே அந்தப் படத்தில் பிச்சைக்காரர்களை காட்டியிருந்த விதம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அத்தகைய திரைக்கதையை கொண்டதொரு படத்தில் ஒருவித sadist தன்மையைதான் மனது எதிர்பார்த்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38030

ஏழாம் உலகம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, காடு நாவலைத் தொடர்ந்து தங்களின் ரப்பர், கன்னியாகுமரி மற்றும் ஏழாம் உலகம் நாவல்களைப் படித்தேன். ஏழாம் உலகம், நாவல் என்பதை விட உலகின் இருட்டுப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைப்பதிவு (டாகுமெண்டரி) என்றே நம்புகிறேன். ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் மீதான எனது பார்வையை இந்த நாவல் மாற்றியிருக்கிறது. ஐந்து வருடங்களாக தினமும் நான் பயன்படுத்தும் ரயில் நிலையத்தில், படிகளின் ஓரங்களில் உறைந்து கிடக்கும் மனிதர்கள் திடீரென்று என் கண்களில் தென்படுகிறார்கள். பாதங்கள் இல்லாத கால்களுடனும், விரல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37038

ஏழாம் உலகம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நான் தங்களுடைய “ஏழாம் உலகம்” தற்போதுதான் படித்தேன். “நான் கடவுள் ” ஒரு வித்தியாசமான தளமாக இருக்கிறதே அதன் மூலமான இந்த நாவலை படிக்க வேண்டும் என முன்பே நினைத்திருந்தேன் இப்பொழுதுதான் அதற்கான நேரம் வந்தது. மலைத்து போனேன். நாம் வாழும் இந்த உலகத்தில்தான் இந்த “மனிதர்களும் ” வாழ்கிறார்கள் என்று ஜீரணிக்கவே என்னால் முடியவில்லை. “முத்தம்மை ” என்னை மிகவும் பாதித்த ஒரு பாத்திரப்படைப்பு . தாய்மை உணர்வு உணர கையும் காலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31001

ஏழாம் உலகம்-ஓர் விமர்சனம்

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘ஜெயமோகனின் காடு நாவல் காமத்தைப் பற்றியது. முழுக்க முழுக்க மனிதனின் காதலைப் பற்றிப் பேசிய நாவலாக அவரது ஏழாம் உலகத்தைப் பார்க்கிறேன்’ எனச் சொன்னேன். உண்மையில் இதுதான் எனது அபிப்ராயம். அவரைச் சீண்டுவதற்காகச் சொன்ன வழக்கமான வார்த்தை என எடுத்துக்கொண்டு பயங்கரமாகச் சிரித்தார். நான் முகத்தை சீரியசாக வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ’சும்மா விளையாடாதப்பா, அப்பழுக்கற்ற குரூரம் வெளிப்பட்ட நாவலாகத்தான் எனக்கு ஏழாம் உலகம் தெரிந்தது’ எனச் சொன்னார். ஏழாம் உலகம் பற்றி இன்னொரு விமர்சனம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/31451

ஏழாம் உலகம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு….. உங்களுடைய “ஏழாம் உலகம் ” இப்போதுதான் வாசித்தேன். மனம் “அய்யோ அய்யோ வென்று மிகவும் பதட்டம் அடைகிறது ஒரே மூச்சில் அத்யாயங்களை வாசிக்க முடியவில்லை….. இந்த அவலங்கள் கதை அல்ல அன்றாடம் நிகழும் வாழ்க்கையின் சித்தரிப்பு என்று அறியும் போது மனித வக்கிரத்தை எண்ணி துக்கமும் அவமானமும் நெஞ்சை அடைத்துக் கொள்ளுகிறது. சமூகத்தின் மீது மனிதப்பேய்களின் மீது தாங்கமுடியாத கொலை வெறி தோன்றுகிறது. ஆனால் நாவல் முழுவதும் ஆசிரியர் எந்த வித சார்பும் இல்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29649

ஏழாம் உலகம்- ஒரு பதிவு

அன்புள்ள ஜெ., ஏழாம் உலகத்தைக் கடந்து போக இயலாமல், அதை எழுதிக் கடக்க முயன்றிருக்கின்றேன். எழுதிப் பழக்கம் இல்லாததால் (வாசிப்புப் பழக்கமே சற்றுக் குறைவு), என்னால் இயன்றவரை எனது எண்ணங்களைக் கோர்வையாகக் கொடுக்க முயன்றுள்ளேன். எனது புரிதல் எந்த அளவு உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல். நேரம் கிடைக்கும் போது படிக்கவும். இந்தத் தொந்தரவுக்கு மன்னிக்கவும். நன்றி, -பாலாஜி. ஏழாம் உலகம். ஞாயிற்றுக்கிழமை பின் மதியம். முன்தினம் தொடங்கிய ‘ஏழாம் உலகம்’ நாவலை வாசித்து முடித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27178

ஏழாம் உலகம் இன்று

அன்புள்ள ஜெ, ஏழாம் உலகத்தை ஓசூர் நகரில் நேரில் கண்ட அனுபவம் தங்கமணி மொரப்பூர்

Permanent link to this article: https://www.jeyamohan.in/26884

சந்திப்புகள் – சில கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஏறத்தாழ பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னதாக உங்களோடு பயணிக்கத் தொடங்கினேன் – உங்கள் படைப்புகளின் ஊடாக. என் தந்தை வழியாகத்தான் உங்களை வந்தடைந்தேன். வீட்டில் எங்கு திரும்பினாலும் புத்தகங்கள் என்ற சூழலில் வளர்ந்தேன். அலுவல் முடிந்து மிகத் தாமதமாக படுக்கையில் விழுந்த ஓர் இரவில், விஷ்ணுபுரம் (அகரம் வெளியீடு) புத்தகத்தைக் கையில் எடுத்தேன். தொடர்ச்சியாகப் பல இரவுகள் அந்தப் புத்தகத்தோடு பயணித்தேன். கொந்தளிப்பான இரவுகள் அவை. அன்று உங்களோடு ஆரம்பித்த விவாதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26726

Older posts «

» Newer posts