Tag Archive: ஏழாம் உலகம்- கடிதங்கள்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

  அன்புடன் ஆசிரியருக்கு விடுப்பு முடிந்து செவ்வாய்க்கிழமை அலுவலகம் சென்றேன். அன்றிரவு ஏழாம் உலகம் படித்து முடித்திருந்தேன். முதன்முறையாக  பத்து நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்ததால் ஒரு சிறிய தடுமாற்றம் இருக்கிறதென்றே நினைத்திருந்தேன். ஆனால் அது அப்படியல்ல என இப்போது புரிகிறது. ஏழாம் உலகத்தை மிக விரைவாக படிக்க முடிந்தது. ‘நாரோயிலு’ மொழியும் நன்றாக பழகிவிட்டது. முத்தம்மை அறிமுகமாகும் இடமே மனதை அறைந்துவிட்டது. அப்போதே ஏழாம் உலகம் என்னை வெளியே தூக்கி எறிந்துவிட்டதோ எனப் பயந்தேன். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85161

ஏழாம் உலகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ எழுதவேண்டும் என நினைத்து நீண்டகாலமாகத் தவிர்த்துவந்தபின் இப்போது எழுதுகிறேன். இன்று மீண்டும் ஏழாம் உலகத்தை வாசித்து முடித்தேன். ஒரு பாவமன்னிப்பு சங்கீர்த்தனம் போன்ற நாவல் என்று சொல்வேன். வாழ்க்கைக்கும் கீழே உள்ள மக்கள். ஆனால் அங்கும் உள்ள அன்பும் பாசமும் தன்மதிப்பும் நகைச்சுவையைப்பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. அகமது ‘வெறும் முப்பதுகோடி ரூவா’ என்று சொல்லுமிடத்தில் வெடித்துச்சிரித்தேன். ‘நிரபராதியாக்கும்’ என்று குய்யன் சொல்லுமிடமும் அப்படியே. ஆனால் பின்னர் யோசித்துப்பார்த்தபோது அவை எவ்வளவு ஆழமான அங்கதம் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81146