குறிச்சொற்கள் ஏற்காடு இலக்கிய அரங்கு
குறிச்சொல்: ஏற்காடு இலக்கிய அரங்கு
இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்
சமகாலத்தில் நவீன தமிழ்க் கவிஞர்கள் பெரும்பாலும் சூதுகவ்வும் திரைப்படத்தின் நாயகனைப்போலவே இருக்கின்றனர் மானசீகமாக இல்லாத ஒரு பெண்ணை கற்பனை செய்துகொண்டு, அவளோடு வாழ்வதாக, காதலிப்பதாக, புணர்வதாக, பினங்குவதாக, பின்பு மரிப்பதாக பாவனை செய்கின்றனர்.
சாத்தான்,...
உருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்
பிற்கால இந்தியச் சிறுகதைகள் எனும் பிரிவின் கீழ், இந்த அமர்வில் விவாதிப்பதற்காகத் தேர்வு செய்துள்ள ‘சந்தனுவின் பறவைகள்’ என்னளவில் நான் வாசித்த மாற்று மொழி மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதைகளில் ஒன்று.
இக்கதை...
உலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்
நண்பர்களே!
உலக அளவிலான செவ்வியல் காலகட்டச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த, எனக்குப் பிடித்த ஒரு சிறுகதையினை இங்கே பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றியுடன் தொடர்கிறேன்.
இந்த செவ்வியல் காலகட்டம் என்பதனை 1800-களின் பின்பாதி முதல் 1900-களின் முதல்...
ஏற்காடு – சித்தார்த் வெங்கடேசன்
//இந்திய சிறுகதை வாசிப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை பெருமாள் முருகனின் “நீர் விளையாட்டு”. மிக சாதாரண யதார்த்த கதையாக தொடங்கும் இது ஏதோ ஒரு நுட்பமான கணத்தில் சட்டென்று வேறு ஒரு...
சமகாலத் தமிழ்க் கவிதைகள்-கிருஷ்ணன்
தாண்டவம்
ஒன்றையொன்று தொடாதவாறு
அருகருகே நடப்பட்டிருக்கின்றன
இரண்டு வேல்கள்.
ஒன்று சக்தி
மற்றொன்று சிவம்.
இரண்டின் நிழல்களும்
ஒன்றன்
மீது
ஒன்றாகக்
கிடக்கின்றன தரையில்.
சக்தி குவிந்த தாமரையாக
சிவம் இதழ் பிரியும் மலராக.
வெயிலில்
புரண்டு
புரண்டு
பின்னிக்கிடக்கிறார்கள்.
சூரியன்
சரிய
சரிய.
திடீரென
நீண்டுகொண்டே போகிறாள் சக்தி
துரத்திக்கொண்டே போய் சிவம்
மூச்சிரைத்துக்கொண்டிருக்க
அந்தி வருகிறது
இருளில் மறைகிறார்கள் இருவரும்.
- இளங்கோ கிருஷ்ணன்
லட்சுமி டாக்கீஸ்...
நான் பைத்தியக்காரனா?-மாப்பசான்
நான் பைத்தியக்காரனா? அல்லது பொறாமை பிடித்தவனா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கொடும் துன்பத்திலிருக்கிறேன். நான் செய்தது குற்றம்தான். ஆனால், நான் அனுபவிக்கும் கிறுக்குத்தனமான பொறாமை, காதலில் ஏமாற்றம், தாங்க முடியாத வலி...
ஏற்காடு – வேழவனம் சுரேஷ்
//
முதல்நாள் கூட்டத்தின் ஆரம்பத்தில் மைக் வேலை செய்ய மறுத்தது. அதை சரிசெய்ய முயற்சியும் நடந்தது. ஆனால் அது சரியாகிவிடக்கூடாதே என்று நினைத்தபடி இருந்தேன். அதன் படியே கடைசிவரை அது ஒத்துழைத்தது. விவாதங்களையும் வாசிப்புகளையும்...
சில உலகக்கவிதைகள்-க.மோகனரங்கன்
1. பிரிவு
நான் வந்தேன்
தானியக் குதிர்களின் கிராமம் வரையிலும்
இரவின் வாயில் வரையிலும்
உன்னோடு வந்தேன்.
உனது
பொன்னான
புதிர் போன்ற புன்னகையின் முன்னால்
என்னிடம் வார்த்தைகள் இல்லை.
சிறிது அந்தி வெளிச்சம்
உன் முகத்தில் விழுந்தது.
தெய்வீகக் களை மிளிர்ந்தது
வெளிச்சம் அடைக்கலம் புகும்
மலையின் உச்சியிலிருந்து நான்...
ஏற்காடு – 2
பொதுவாக இரவு நெடுநேரம் விழித்திருந்தால் காலையில் எழுவது கடினம். ஆனால் இத்தகைய தருணங்களில் ஒரு விழாமனநிலை வாய்த்துவிடுவதனால் காலையில் முதல் பிரக்ஞை வந்ததுமே பாய்ந்து எழுந்துவிடுவோம். மேலும் மலைப்பகுதிகளின் காலைநடையை இழக்க முடியாது....
ஏற்காடு
ஏற்காட்டிலிருந்து கோவை, பாலக்காடு ,எர்ணாகுளம், திருவனந்தபுரம் என அலைந்து இன்றுதான் வீடு திரும்பினேன். ஆகவே தாமதமாக ஒரு நினைவுப்பதிவு. நிகழ்ச்சிகளைப்பற்றிப் பங்கெடுத்தவர்கள் எழுதிவிட்டார்கள். இது சில விளக்கங்கள், சில எண்ணங்கள்.
முதலில் இந்நிகழ்ச்சிக்கு வருகைதர...