Tag Archive: ஏகலைவன்.

அசுரர் இன்று

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவ‌னைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு மரபுபோல் இதுவும் தொடர்கிறது போல‌. லூர்து சேவியர் http://www.thehindu.com/news/national/other-states/candidate-from-asur-wants-to-do-his-bit-for-his-tribe/article6631185.ece அன்புள்ள லூர்து இன்றைய ஜார்கண்ட் தான் அன்றைய ஆசுர நிலம் என அழைக்கப்பட்டது. வெண்முரசில் வருவது அதன் விரிவான சிலக்காட்சி [சர்மாவதி தான் இன்றைய சம்பல்] 1986ல் அப்பகுதியில் பயணம் செய்திருக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66375/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35

பகுதி ஏழு : பூநாகம் – 5 விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என் ஆசிரியர் காலடியில் வைக்க அப்போது உயிர் மட்டுமே என்னிடம் இருந்தது. நான் சென்று ஏகலவ்யனை எதிர்கொள்கிறேன் என்றேன். ‘இல்லை, நீ என் பொறுப்பு. என் மைந்தனுக்கும் மேலானவன்’ என்று ஆசிரியர் சொன்னார்” துரியோதனன் தொடர்ந்து சொன்னான். குருநாதர் இமயகுருகுலத்தில் கல்விபயின்றுகொண்டிருந்த இளவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66010/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34

பகுதி ஏழு : பூநாகம் – 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா?” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65993/

குருவின் தனிமை

ஜெ, வண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன இதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான் . ஒரு பண்பாட்டின் ஆன்மாவே குருநாதர்தான். அவர் corrupt ஆகிவிட்டால் அது அங்கிருந்து எல்லா கேடுகளுக்கும் கொண்டுசெல்கிறது. கர்ணன் ஏகலைவன் எல்லாருடைய வன்மத்துக்கும் காரணம் அவர்தான் ஆனால் அவரது குருவான பரத்வாஜர்தான் இன்னும் ஆதிகாரணம். இப்படியே யோசித்துக்கொண்டு போனால் விதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62273/

ஏகலைவனின் வில்

மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். சில விஷயங்கள். 1) இன்றைய வெண்முரசில் (வண்ணக்கடல் – 61) கட்டை விரல் இல்லாமல் வில்வித்தை பழகுவது பற்றி படித்ததும், ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. சந்தால் பழங்குடியினர் இன்றும் கட்டை விரல் உபயோகிக்காமல் வில்வித்தை பழகுகிறார்கள். http://www.outlookindia.com/news/article/Rupantor-speaks-about-the-unknown-part-of-Mahabharat-Sayeed/640497 2) உங்களுடைய சிங்கப்பூர் நேர்காணல் (youtube) காணொளிகளை, http://venmurasudiscussions.blogspot.in/ தளத்தில் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். தாங்கள் அதில் வெண்முரசு மற்றும் அதன் அமைப்பு குறித்து பல விஷயங்கள் சொல்லி இருந்தீர்கள். நன்றி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60310/

கர்ணனின் கண்ணீர்

அன்புள்ள ஜெமோ, இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். பல முறை தங்களின் பல படைப்புகளுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் ‘செயலின்மையின் மது’ தந்த மயக்கத்திலிருந்த படியால் எழுதவில்லை. ஆனால் இன்றைய(ஆகஸ்ட் 9) வண்ணக்கடலைப் படித்த பிறகு என் உணர்வுகளைக் கொட்டாவிட்டால் சாதாரண நிலைக்கு மீள்வது கடினம். வெண்முரசில் கண்களையும், மனதையும் நிறைக்கும் பல பகுதிகள் வந்திருந்தாலும், இன்றைய வண்ணக்கடலின் கர்ணனின் பட்டாபிஷேகம் பகுதி தங்களின் அறம் வரிசைக் கதைகள் தந்த அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60306/