Tag Archive: எஸ்.வையாபுரிப்பிள்ளை

பார்ப்பனன் என்னும் சொல்

அன்புள்ள ஜெயமோகன், ‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது.” சுபவீ ‘பார்ப்பான்’ என்பது வசைச் சொல் அல்ல என்கிறார். உங்கள் கட்டுரையில் நீங்கள் ‘பிராமணர்கள்’ என்றே எழுதியுள்ளீர்கள். மேலும், திராவிட இயக்கத்தினரின்  பார்வையில் வந்து விழும் வசைகளைச் சொல்லும் போது ‘பார்ப்பான்’ என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99998

வையாபுரிப்பிள்ளை குறித்து

எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று என் துறைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தெரிந்து கொள்பவன். என் கருத்துக்கள் ஒரு பொது நோக்கில் அறியக்கிடைத்தவையே. 1] எஸ்.வையாபுரிப்பிள்ளை முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையனவா ? இன்று அவரது இடம் என்ன ? அல்ல. எஸ்.வையாபுரிப்பிள்ளை தன் ஆய்வுகளை நிகழ்த்தி ஏறத்தாழ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63

பேசாத பேச்செல்லாம்

ஃபேஸ்புக்கில் நண்பர் அரவிந்தன் கண்ணையன் நான் சென்னையில் தமிழ்ப்பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ஆற்றப்போகும் உரையைக்கடுமையாகக் கண்டித்து, மறுத்து எழுதியிருப்பதாக ஒரு நண்பரின் தகவல் வந்தது. நான் வரலாற்றாசிரியனோ மானுடவியலாளனோ அல்ல என்றும் வரலாற்றாசிரியர்கள்தான் வரலாற்றைப்பற்றி எழுதவேண்டும் என்றும் அக்கருத்தை நானே எழுதியிருக்கிறேன் என்றும் சுட்டிக்காட்டி நான் புனைவெழுத்தாளன் என்றுதான் அவர் நம்பிக்கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் நான் புனைவெழுத்தாளன்தான். அதை அவ்வளவு ரகசியமாக நான் வைத்திருக்கவில்லை. சந்தேகமிருந்தால் அவர் நேரடியாகவே எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கலாம். என்னால் சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74700

கடிதங்கள்

ஜெ, நான் உங்கள் எழுத்துக்களை விரும்பும் ஒரு வாசகன். எனக்குத் தமிழிலக்கியங்களை (சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பிறகு சங்க இலக்கியம்) உரைகளின் உதவியின்றி சொந்தமாகப் படித்தறிய விருப்பம். இதைச் செய்ய எந்தத் தமிழ் அகராதி சரியாக இருக்கும் என்று தெரிவித்தால் உதவியாக இருக்கும். என்னிடம் கதிரைவேற்பிள்ளையின் அகராதியும், சந்தியா பதிப்பகத்தின் தமிழிலக்கிய அகராதியும் உள்ளது. இவையிரண்டும் போதவில்லை. (பல சொற்களுக்கு இவற்றில் இடமில்லை). இந்த விஷயத்தை உங்களிடம் கேட்பது அசட்டுத்தனமாக இருந்தால் மன்னிக்கவும். அன்புடன் சந்திரசேகர் அன்புள்ள சந்திரசேகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21391

பாரதியின் இன்றைய மதிப்பு

ஜெ, பாரதியின் பாடல்களுக்கு இந்திய சுதந்திரம் என்ற பின்னணி இல்லாமல் பொருள் இருக்கிறதா? நான் பாரதி படித்திருக்கிறேன். சுதந்திரப்பாடல்கள் என்பவை ஒரு பிரிவே. அதைத்தாண்டி அவர் வசனக்கவிதை, கண்ணன் பாட்டு குயில் பாட்டு என பல வகைகளில் எழுதியுள்ளார். நீங்கள் சொல்லுங்கள், அவர் முன்னோடி என்பது ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஆனால் அதையும் தாண்டி சமகால இலக்கிய உலகில் அவரது இடம் என்ன? -ராம் ராம், முதன்முதலாக 1995ல் இலங்கையில் ஹட்டன் நகரில் இருந்து வந்த ஒரு இதழில் பாரதி பற்றிய என் கருத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21383