Tag Archive: எஸ்.ரா.

கடிதங்கள்

ஜெ , உண்மையில் இத்தைகைய ஒரு பகடி (அ) ஒப்புதல் வாக்கு மூலத்திற்காக நான் காத்திருந்தேன் எனலாம். இந்த சுய /பிற பாராட்டுகள் மேல் உங்களுக்கு இருக்கும் மோகம் குறித்து விமர்சிக்கும் நோக்கில் ஏற்கனவே நான் ஒரு கேள்வியோ கடிதமோ எழுதியதாக ஞாபகம். தோற்றாலும் சில இடங்களை பட்டவர்த்தனமாக பொதுவெளியில் தொட்டு விட்டுவது உயர்ந்த செயல். //…..ஞானி தவிர// வரியை மிக ரசித்தேன். வெண் முரசு எழுதுவதன் வழி இதுபோன்ற பல உயர்மதிபீடுகளை அடைய எனது ஆசீர்வாதங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73851

ஆங்கில இந்தியச்சமூகமும் தமிழிலக்கியமும்

அன்பின் அண்ணன் ஜெயமோகன், கடந்த சில நாட்களாக ஆங்கிலோ இந்தியத் தமிழர்களைப் பற்றி நான் அறியும் விசயங்களே இந்தக் கடிதம் எழுதக் காரணம். (பெரும்பாலும் சென்னையை விட்டு வெளியேறிவிட்டார்கள். மற்றவர்களும் கூடிய விரைவில் வெளியேறிவிடுவார்கள். அவர்களின் உணவு மற்றும் ஒழுக்கம் குறித்த பார்வை, நம்மில் இருந்து வேறுபடுவது போலவே, ஆங்கிலேயப் பார்வையிலும் வேறுபடுகிறது. அது அடையாளச் சிக்கல், சமூகப் புறக்கணிப்பு என வேறொரு தளத்தில் இயங்குகிறது) இதுவரை நான் வாசித்த தமிழ் இலக்கியங்களில் ஆங்கிலோ இந்திய மக்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37927

எஸ்ராவுடன் ஒரு உரையாடல்- கெ.பி.வினோத்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாம் வருட விருது மூத்த படைப்பாளி திரு. பூமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க சம்மதித்திருந்தார்.  நானும் அவரும் 16 டிசம்பர் ஈரோடு செல்வதாக ஏற்பாடாகியிருந்தது.  இரவு பத்தேகாலுக்கு நான் ரயில் நிலையம் சென்ற போது, ராமகிருஷ்ணன் சார் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார்.  என்னை நோக்கிப் புன்னகைத்து “வாங்க” என்றார்.  எனக்கு அவரைப் பெரிய பழக்கமில்லை.  எனக்கிருந்த ஆரம்பத் தயக்கம் காணாமல் போக எங்கள் உரையாடல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23477