Tag Archive: எஸ்.பொன்னுத்துரை

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

யாழ் பாணனுக்கு இயல் விருது

2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி போன்றவர்களைத் தொடர்ந்து விருதுக்குரியவராக இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எஸ்.பொ, அறுபது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12680

போலிக்கறுப்பு

இந்த முத்திரையை பிடிவாதமாக நிராகரிப்பதில்தான் ஆசிய-ஆப்ரிக்க எழுத்துக்களின் எதிர்காலமே உள்ளது என்பதே உண்மை. இல்லையேல் சுயமில்லாமல், பிறருக்காக உருவாக்கப்பட்ட சுயம் கொண்ட, இலக்கியத்தையே நாம் நம்முடையதென கொண்டிருப்போம். இது ஒரு வகையான பண்பாட்டு ஆதிக்கம், உளவியல் ஆதிக்கம். இதற்கு எதிரான விழிப்புணர்வு இன்னமும் நம் அறிவுலகில் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/8396

யாழ்நிலத்துப்பாணன் -3

[ 5 ] எஸ்.பொன்னுதுரையின் படைப்புலகில் உள்ள மிகையுணர்ச்சியும் அலங்காரநடையும் கொண்ட கதைகளைப்பற்றி இன்றைய வாசகன் கூர்ந்து அவதானிக்க வேண்டும். இவை அக்கால வாசகர்களில் ஒரு சாராருக்கு கிளர்ச்சியூட்டுவனவாக அமைந்திருக்கின்றன என்று தெரியவருகிறது. லா.ச.ராமாமிருதத்தின் படைப்புலகுடன் இவை ஒப்பிடப்பட்டுள்ளன. அபூர்வமாக மௌனியுடனும். இன்று என் வாசிப்புக்கு இவை மிகுந்த பிரக்ஞையுடன் எழுதப்பட்ட மொழிச்சோதனைகளாக மட்டுமே தெரிகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி தமிழில் இயல்புவாத முன்னோடிகளில் சிலருக்கு இத்தகைய ஒரு நடைமீது ஏனோ மோகம் இருந்திருக்கிறது. நீலபத்மநாபன் பல கதைகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12684

யாழ்நிலத்துப்பாணன் -2

இயல்புவாத அழகியலின் முக்கியமான சிறப்பே அது அளிக்கும் நுண்தகவல்கள்தான். தகவல்கள் மட்டுமே பாரபட்சமில்லாத, புறவயமான உண்மைகள் என்ற நிரூபணவாத அறிவியலில் இருந்து உருவான இலக்கிய முறை என்றே இயல்புவாதத்தைச் சொல்லிவிடலாம். ஆசிரியரின் உணர்ச்சிகள் மட்டுமல்லாமல் கதைமாந்தரின் உணர்ச்சிகளையும் பொருட்படுத்தாத ‘புறவய’ மான எழுத்துமுறை இது. உணர்ச்சிகளைப்பற்றிச் சொல்வதானால்கூட அவற்றையும் ஒருவகை தகவல்களாகவே முன்வைக்கக் கூடியது. இயல்புவாதத்தின் தனித்தன்மை என்னவென்றால் ‘பெரிய’ தகவல்களை மட்டும் முன்வைக்கும் பொதுவான யதார்த்தவாத முறையில் இருந்து அது வேறுபடும்விதம்தான். ஒருதகவலை முக்கியமானதாகவோ அழுத்தமானதாகவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12681

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1

[ 1 ] ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொண்டு ‘அப்படியே சாப்பிடுவேன்’ என்று குரல்கொடுக்கும் குழந்தையைப்போன்றவர்கள் நம் கோட்பாட்டாளர்கள். முற்றிலும் லௌகீகவாதியான ஒரு வணிகரிடம் கூட எப்படியோ கலையைப்பற்றி விவாதித்து சில அடிப்படைப்புரிதல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும், ஒருபோதும் நம் கோட்பாட்டாளர்களிடம் கலையின் ஆரம்ப அடிப்படைகளைக்கூட பேசிவிட முடியாது. உண்மை என்பது தானறிந்த ஒற்றைவடிவில் திட்டவட்டமாக கைக்குச் சிக்குவது என்றும் அதை நேரடியாகச் சொல்லும் எந்த முயற்சியும் கலையே என்றும் அவர்கள் திரும்பத்திரும்ப வாதிடுவார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/485