Tag Archive: எழுத்துருக்கள்

எழுத்துரு விவாதம் ஏன்?

தமிழ் எழுத்துரு பற்றிய விவாதங்களில் பெரும்பாலும் எல்லாக் குரல்களும் ஒலித்துவிட்டன என்று நினைக்கிறேன். இனி இந்த விவாதத்தை நான் ஏன் எழுப்பினேன், இதன் சாராம்சம் என்ன என்று எதை நினைக்கிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன். [ஏற்கனவே அக்கட்டுரை வெளியான அன்று பிரசுரிக்கப்பட்ட எதிர்வினைக்குறிப்பிலேயே இதைக் கோடிகாட்டியிருந்தேன். என்னை வாசிப்பவர்களுக்கு இவ்விவாதத்தை நான் ஏன் முன்வைக்கிறேன் என்பது தெளிவாகவே தெரிந்திருக்கும். தமிழை உடனே ஆங்கில எழுத்துக்களில் எழுத ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லுமளவுக்கோ, உலகமொழிகள் எல்லாம் தனித்தன்மையை உதறிவிடவேண்டும் என்று ஒற்றைப்படையாக வாதிடுமளவுக்கோ நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41612

எழுத்துரு கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, ஜெயமோகன் அவர் களின் கேள்வி சரியானதுதான். அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே தம்முடைய புத்தகம் ஒன்றில் இக்கருத்தினைப் பதிவு செய்துள்ளார்கள்.இன்றுள்ள நிலையில் இது மனங்கொள்ளத் தக்கதுதான். அவசரத் தேவையுங்கூட. உண்மையான தமிழ் அறிஞர்களும் உணர்வாளர்களும் ஆழ்ந்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. செய்வார்களா? தங்கள் உண்மையுள்ள, வடிவேல்.வ வீரபாண்டியன்பட்டினம் திருச்செந்தூர். அன்புள்ள வடிவேல் ஈ.வே.ராவில் ஆரம்பித்து வா.செ.குழந்தைசாமி உட்பட பல முக்கியமான தமிழறிஞர்கள் பல கோணங்களில் சிறிய வேறுபாடுகளுடன் சொல்லி முன்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41510

எழுத்துருக்கள்-எதிர்வினைகள்

த ஹிந்து கட்டுரை [இந்த எதிர்வினைக்கு ஒரு சிறப்பு உள்ளது. இதை ஒருவாரம் முன்பு மூலக்கட்டுரையை எழுதி முடித்ததுமே எழுதிவிட்டேன். ஏனென்றால் என்னென்ன எதிர்வினைகள் வரும் என எனக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த தரத்துக்கு அப்பால் சென்று எவரேனும் மாற்றுக்கருத்துக்களைத் தெரிவித்திருந்தால் எனக்குத் தெரியப்படுத்தலாம்] தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது என்று ஒரு யோசனை எழுதியிருந்தேன். ஏனென்றால் இரண்டு லிபிக்களைக் கற்றுக்கொள்வது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மிகுந்தசுமையாகவே உள்ளது. அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதனால் வெறுமே தேர்வுக்காக மட்டும் எழுத்துக்களைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41494