Tag Archive: எழுத்துப் பயிற்சி

எழுதப்போகிறவர்கள்

வேதசகாயகுமார்தான் முனைவர் வறீதையா கான்ஸ்தன்டீனை அறிமுகம் செய்துவைத்தார்.  தூத்தூர் செயிண்ட் ஜூட்ஸ் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். கடற்கரைச் சூழியல் ஆய்வுகள் சார்ந்து 25 ஆய்வுக்கட்டுரைகளும் ஏழு நூல்களும் படைத்திருக்கிறார். தமிழில் அணியம் என்ற நூலின் ஆசிரியர் [தமிழினி வெளியீடு] இரண்டுவருடங்களாக அவர் கடற்கரைப்பகுதி மக்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும்பொருட்டு நாகர்கோயிலில் ஒரு சிறிய கூடுகையை நடத்திவருகிறார். இப்போது நாகர்கோயில் கார்மல் உயர்நிலைப்பள்ளியில் மாதத்தில் இரண்டாம் ஞாயிறன்று இக்கூடுகை நிகழ்ந்து வருகிறது. இருபதுக்குள் உறுப்பினர்கள் வந்து அதில் பங்கெடுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/556