Tag Archive: எழுத்து

சிற்றிதழ் என்பது…

வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும். இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக உள்ள அரசியல் செயல்பாடுகளின் பகுதியாக ஒலிக்கும் கூக்குரல் உற்பத்தி மட்டுமே. அவற்றுக்கு அப்பால் உள்ள இலக்கியம் சிந்தனை ஏதும் அவர்களுக்கு தெரிந்ததாகவே இருக்காது. விதிவிலக்காக, மலேசியாவில் நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு தொடக்கம் நிகழ்கிறது என்பதை பலவகையாகப் பதிவு செய்திருக்கிறேன். நவீன், யுவராஜ்,பாலமுருகன் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79870

எழுத்தும் சமூகமாற்றமும்

அன்பு எழுத்தாளரே சற்று வாசித்தேன் உங்கள் சிந்தனைகளை ! இலக்கியம் என்பது சமகாலத்தைப் பிரதிபலிக்கும் என்பதில் எமக்கு உடன்பாடு உண்டு. ஆனால் சமூக மாற்றத்தில் எழுத்தாளனின் பங்களிப்பு என்ன என்பதைத் தெளிவுபடுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். இதை ‘ நாலாப்பு ‘ என்று புறம்தள்ளி விடவேண்டாம். நன்றி சி . விக்டர் அன்புள்ள விக்டர், சமூகம் என்பது அதன் சாராம்சமாக உள்ள கருத்துக்களால் கட்டப்பட்டிருக்கிறது. ஆகவே சமூக மாற்றம் என்பது அந்தக்கருத்துக்களில் உருவாகும் மாற்றத்தால் மட்டுமே சாத்தியமாகும். இக்கருத்துக்களில் பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36987

எழுத்தின் வழிகள்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், அண்மையில் ஐந்தாவது மருந்து படித்தேன். அறிவியல் புனைகதை என்ற சொற்றொடரை ஆரம்பித்து வைத்தவர் சுஜாதா என்றுதான் நினைக்கிறேன். அதற்கு முதலும் யாரும் எழுதினார்களோ நானறியேன். அறம் தொகுதி மனிதர்களோடு இணைத்துப் பார்க்கக் கூடியவர் தளவாய். மனிதன் இயற்கையோடு வாழும் வரையிலும் இந்த உலகம் அவனுக்கு சொர்க்கம். அடங்காத பேராசையோடு அவன் முழு உலகையும் சுருட்டிக் கொள்ள நினைக்கும் போது, இதெல்லாம் ஏற்படும். கதையில் கலையம்சம் குறைந்து போனது துரதிர்ஷ்டம்தான். மற்றபடி இந்த உலகுக்கு சொல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30966

எழுத்து வாசிப்பு எழுத்தாளன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், எழதுவதைப் பற்றிய ஒரு கேள்வி. நீங்கள் பல கேள்விகளுக்கு பத்தி பத்தியாக பதில் எழுதுகிறீர்கள். அவை படிக்கும்போது அபாரமான தெளிவுடன் கோர்வையாக இருக்கிறது. இப்பதில்களை நீங்கள் முழுமையாக யோசித்துவிட்டு உங்கள் மனதில் தொகுத்துக்கொண்டு பின் எழுதுவீர்களா அல்லது எழுதும்போதே உங்கள் மனதில் அப்படித் தோன்றுமா? இந்த முறை உங்கள் நாவல்களுக்கும் பொருந்துமா? பின்தொடரும் நிழலின் குரலை படித்த பின்னர் எனக்கு இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் வருகிறது. நான் ஏதாவது எழுத ஆரம்பித்தால் பிரயோகிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27548

பாண்டிச்சேரியில் பேசுகிறேன்

தலித் நூல்வரிசை அறிமுகக் கூட்டம் இடம் : புதுவை தமிழ்ச்சங்கம், வள்ளலார் சாலை, புதுச்சேரி -1 நாள் 30- 10-2011 நேரம்: மாலை 530 பங்கேற்போர் பேரா: மார்க்ஸ் [புதுவை பல்கலைக்கழகம்] பேரா: ராஜ் கௌதமன் பேரா :ஸ்டாலின் ராஜாங்கம் ஜெயமோகன் அமைப்பு ’எழுத்து’பிரசுரம் அயோத்திதாசர் ஆய்வு மையம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/22100