Tag Archive: எழுத்தாளன்

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான். அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26814

எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்

அன்புள்ள ஜெ ,, எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவைப்பற்றி நான் எப்போதுமே சிந்திப்பதுண்டு. நெருங்கிப்பார்த்தால் எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களின் பர்சனாலிட்டிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எழுத்தாளர்கள் ஏன் எழுத்தாளர்களைப்போல இல்லை என்று கேட்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. அதாவது எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு சீரான உறவு உண்டா என்ன? அதாவது ஒரு நாவலை வாசித்து ‘இந்த எழுத்தாளன் இப்படிச் சொல்கிறான்’ என்று நம்மால் நினைத்துக்கொள்ள முடியுமா?  நான் சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது இதுதான். நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19576

வெண்முரசு – விமர்சனங்களின் தேவை

ஜெ சார் நீலம் வெளிவரும்போது வந்துகொண்டே இருந்த விமர்சனங்களை வாசித்தேன். வெண்முரசு விவாதங்கள் என்று ஒரு இணையதளமே இதற்காக இருக்கிறது. இதெல்லாமே வெவ்வேறு வாசகர்கள் நீலத்தை எப்படி வாசிக்கிறார்கள் என்பதைப்பற்றியது. ஒரு வாசகன் இதையெல்லாம் வாசித்தால்தான் நீலம் போன்ற நாவலைப் புரிந்துகொள்ளமுடியுமா? நாவலை மட்டும் வாசித்தால்போதாதா? விமர்சனங்கள் நம்முடைய வாசிப்பைத் திசைதிருப்பிவிடாதா? ஒரு ஆரம்பகால வாசகனாக என்னுடைய சந்தேகம் இது, எம். ஆர்.ராமகிருஷ்ணன் அன்புள்ள ராமகிருஷ்ணன், நான் திரும்பத்திரும்ப இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லிவருகிறேன். இலக்கியவிமர்சனம், இலக்கியக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62517

எழுத்தாளனின் ஞானம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,நலமா? “எந்த எழுத்தாளனும் தன் படைப்பூக்கத்தின் உச்சநிலையில் அவன் ஞானியர் தொடும் உச்சியைத் தானும் தொடுகிறான். ஆனால் உடனே திரும்பி வந்து சாதாரண மனிதனாக வாழவும் செய்கிறான். சாதாரண மனிதனாக அவனிருக்கையில் தன் படைப்பூக்க நிலையின் உச்சிகள் அவனை பிரமிப்படையச்செய்கின்றன. ஆனால் அந்த ஆளுமையைத் தன்னுடையதாக அவனால் கொள்ள முடிவதில்லை, அது அவனைவிட பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அதைத் துறக்கவும் அவனால் முடிவதில்லை, ஏனென்றால் அது அவன் என்பதும் உண்மை. ஆகவே முடிவில்லாத ஒரு ஊசலாட்டத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62307

கனவுபூமியும் கால்தளையும்

சம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். ‘இதோ என் கொள்ளுப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21056

எழுத்து வாசிப்பு எழுத்தாளன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், எழதுவதைப் பற்றிய ஒரு கேள்வி. நீங்கள் பல கேள்விகளுக்கு பத்தி பத்தியாக பதில் எழுதுகிறீர்கள். அவை படிக்கும்போது அபாரமான தெளிவுடன் கோர்வையாக இருக்கிறது. இப்பதில்களை நீங்கள் முழுமையாக யோசித்துவிட்டு உங்கள் மனதில் தொகுத்துக்கொண்டு பின் எழுதுவீர்களா அல்லது எழுதும்போதே உங்கள் மனதில் அப்படித் தோன்றுமா? இந்த முறை உங்கள் நாவல்களுக்கும் பொருந்துமா? பின்தொடரும் நிழலின் குரலை படித்த பின்னர் எனக்கு இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் வருகிறது. நான் ஏதாவது எழுத ஆரம்பித்தால் பிரயோகிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27548