Tag Archive: எழுத்தறிவித்தல்

ஏடுதொடங்கல்

கேரளத்தில் மிகப்பரவலாக உள்ள சடங்கு எழுத்தறிவித்தல். விஜயதசமியன்று நிகழும் இவ்விழா தமிழகத்தில் மிகவும் முக்கியமான ஒரு சடங்காக இருந்து காலப்போக்கில் முக்கியத்துவம் இழந்துவிட்டது. இப்போது விஸ்வகர்மர்கள் [ஆசாரிகள், ஸ்தபதிகள், பொற்கொல்லர்கள்] இடையே மட்டும் சிறப்பாக நீடிக்கிறது. ஏடுதொடங்குதல் என்று அக்காலத்தில் தமிழில் சொல்வார்கள். புதிய ஏடுகளை எழுதத்தொடங்கும் நாளும்கூட. கேரளத்தில் ஏடுதொடங்குவது ஒரு கிராமத்தின் பண்டிதர் அல்லது ஆசிரியரால் செய்யப்படும் சடங்கு. வள்ளத்தோள் நாராயண மேனன் கேரளத்தின் பண்பாட்டு அடையாளமாக உருவாகிவந்தபோது அவர் கையால் எழுத்தறிவிக்கப்படுவதை கேரளமக்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31314