Tag Archive: எரிக் ஹாப்ஸ்பாம்

எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை

1996 காலகட்ட்த்தில் நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதி மீண்டு, அன்று இங்கே பேசப்பட்டு சற்றே ஓய்ந்துவிட்டிருந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை மூலநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றபோது நித்ய சைதன்ய யதியின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் கிடைத்தது. பின்நவீனத்துவச் சிந்தனைகளை வாசிக்கையில் நேர் எதிரான இருவகை சிந்தனைகளை இருபக்கமும் நிறுத்திக்கொண்டு வாசிப்பதே சமநிலையை உருவாக்கும் என்று நித்யா சொன்னார். ஒன்று மார்க்ஸிய இலட்சியவாதம். இன்னொன்று நரம்பியல் தொகுப்புநோக்கு.அவர் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒருபக்கம் எரிக் ஹாப்ஸ்பாம் இருந்தார். மறுபக்கம் ஆலிவர் சாக்ஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22727

இலட்சியவாதம் அழிகிறதா?

  எரிக் ஹாப்ஸ்பாமின் வரலாற்றுச்சிந்தனைகள் பதினேழாம்நூற்றாண்டு ஐரோப்பிய அறிவொளிக்காலத்தை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதும் போக்கு கொண்டவை. மானுட இலட்சியவாதத்தின் ஓர் உச்சகட்ட தருணம் அது என்றே ஹாப்ஸ்பாம் எண்ணுகிறார். இந்த விஷயத்தில் எப்போதும் அவருடன் நான் ஒத்துப்போவதனால் அவர் எனக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று சொல்லலாம்.   ஐரோப்பிய அறிவொளியுகம் தொடங்கிய அந்தக்காலகட்டத்தில்தான ஐரோப்பா உலகளாவிய காலனியாதிக்கத்தை உருவாக்கியது. தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்டமான இனப்படுகொலைகள் வழியாக ஒட்டுமொத்த பழங்குடிகளையும் அழித்தொழித்தது. ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் முழுமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22732

அசிங்கமான மார்க்ஸியம்

திருவாளர் ஜெ, எரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். தெளிவான மொழியிலே உங்களால் எழுத முடிகிறதென்பதனை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எதற்காக எழுதுகிறீர்கள்? இன்றைக்கு ஹாப்ஸ்பாமை முன் வைப்பதன் வழியாக நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்? நீங்கள் மர்க்ஸிய சிந்தனைகளை கூர்ந்து வாசிக்கிறீர்கள் என்று இங்குள்ள மார்க்ஸியர்கள் நம்பவேண்டும் என்பது மட்டும்தானே உங்கள் நோக்கம் இல்லையா? மற்றபடி இதுவரை இங்குள்ள மார்க்ஸிய சிந்தனையாளர்களை நீங்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? அவர்களை எப்போதாவது பேசியிருக்கிறீர்களா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22768

எரிக் ஹாப்ஸ்பாம்-அஞ்சலி

1985ல் காசர்கோடு தபால்தந்தி ஊழியர்களின் கம்யூனில் பேசவந்த பி.கோவிந்தப்பிள்ளைதான் எரிக் ஹாப்ஸ்பாமின் பெயரைச் சொன்னார். ஆனால் அவர் சொல்லிய பெயர்களில் ஒன்றாக மட்டுமே மனதில் பதிந்தது. பின்பு பத்தாண்டுகள் கழித்து தமிழகத்தில் அமைப்புவாதமும் பின் அமைப்புவாதமும் பின்நவீனத்துவமும் அதிகமாகப் பேசப்பட்ட நாட்களில் நித்ய சைதன்ய யதி என்னிடம் ஹாப்ஸ்பாமின் நுல்களைச் சொல்லி வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறுதான் ஹாப்ஸ்பாம் அறிமுகமானார். பெக்கி காம்ப் தொகுத்த தெரிதா ரீடர் நூலை கொடுத்த நித்யா ’இதைப்படித்ததும் கூடவே இதையும் படி’ என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30813

எரிக் ஹாப்ஸ்பாம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, எரிக் ஹாப்ஸ்பாம் குறித்த கட்டுரைகள் ஒரு நல்ல அறிமுகத்தை அளித்தன. ஆனால் அவரின் இலட்சியவாத அழிவு குறித்த கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘வெர்செயில்ஸ் முதல் ஹிரோஷிமா வரை’ நடந்த அந்நிகழ்வுகள் அரசியல் உள்விளையாட்டுகளின் விளைவுகளை அப்பட்டமாக்கின என்றுதான் தோன்றுகிறது. அதாவது, ஒரு நல்ல நோக்கமுள்ள தொடக்கத்திற்குப் பிறகு சுய நலமிகள் தங்களின் சுயலாபத்திற்காக ‘வரலாறு’ என்னும் அதிகாரபூர்வ பொய்யைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது. மாபெரும் ஃபிரெஞ்சு புரட்சி மிக விரைவில் நெப்போலியனிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22882