Tag Archive: எம்.டி.வாசுதேவன் நாயர்

எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…

சமூகத்தின் கூட்டுமனம் ஆளுமைகளைப் புனைந்துகொள்கிறது. அந்த ஆளுமைகளின் உடற்தோற்றத்திற்குச் சமானமாகவே அவர்களின் பங்களிப்பும் அதை அச்சமூகம் எதிர்கொள்ளும் விதமும் அதில் தொழில்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு சென்றகாலங்களில் நாம் புனைந்துகொண்ட ஆளுமைச்சித்திரங்களை நினைவுகூர்ந்தால் இதை எளிதில் வகுத்துக்கொள்ளலாம்.   வள்ளுவர் ஒரு சைவத்துறவியின் சாயலுடன் புனையப்பட்டார். அவருடைய சமணப்பின்புலம் அச்சித்திரம் வழியாக நம் நினைவிலிருந்து மறைக்கப்பட்டது. கம்பன் ஷத்ரியத் தோற்றத்துடன் புலமைமிடுக்குடன் புனையப்பட்டான். அவனுடைய உவச்சர்குலம் அவ்வோவியத்தில் தெளிவாகவே தெரிகிறது.   இவர்களின் தோற்றம் நமக்குத்தெரியவில்லை. இவர்களைப்பற்றிய செய்திகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100964

அம்மாவன்

[எம்.டி] அன்புள்ள ஜெ சார், திரு எம். டி. அவர்களின் புனைவுலகு குறித்த நீள் கட்டுரைக்கு மிக்க நன்றி. என் தாய்மொழி மலையாளமானாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையானதால், எனக்கு பதின்பருவம் வரை மலையாளம் எழுதவும் படிக்கவும் தெரியாது. பின்னர் மவுண்ட் ரோடு தேவநேய பாவணர் நூலகத்தில் ஒரு நாள் எம்.டி யின் வானபிரஸ்தம் குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்து மிகவும் மன எழுச்சியுற்றேன். மூல மொழியிலேயே வாசிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தால், கேரளத்தில் உள்ள உறவினர்களிடமிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63348

வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -3

எம்.டி.யின் புனைவுலகத்தில் வெளியே நிற்பவர்களின் குரல்களில் இருக்கும் அனலை காட்டும் இன்னொரு குறிப்பிடத்தகுந்த நாவல் பாதிராவும் பகல் வெளிச்சமும். முஸ்லிமுக்கும் இந்துவுக்கும் பிறந்த மைந்தனுடைய பண்பாட்டுத் தனிமையைப்  பேசும் நாவல் அது. முஸ்லிம் பெண் இந்து ஆண் ஒருவனிடம் திருமணமாகாமல் உறவு கொண்டு பெற்ற மைந்தன் சுலைமான். அவன் மொத்த முஸ்லிம் சமூகத்தாலும் காஃபிரிண்டேகுட்டி [காஃபிரின் மகன்] என்று ஒதுக்கப்படுகிறான். காஃபிரின்ட குட்டி என்ற வார்த்தை கிட்டத்தட்ட பாஸ்டார்ட் என்ற வார்த்தைக்கு இணையாக அங்கே பயன்படுத்தபடுகிறது. தொடர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61994

வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -2

எம்.டி.யின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அசுரவித்து. அசுரவித்து என்பது பல வழிகளில் முக்கியமான வார்த்தை. ஒரு பெரிய புகழ்பெற்ற, செல்வம் மிகுந்த குடும்பம். அந்தக்குடும்பத்தில் வந்து பிறக்கும் ஒரு குழந்தையினுடைய தீய ஜாதக பலன் காரணமாக அது அழியும் என்றால் அந்தக் குழந்தைதான் அசுர வித்து. அது ஓர் அசுரனின் விதை. துரதிருஷ்டவசமாக ஏற்கெனவே சரிந்துகொண்டிருக்கும் குடும்பத்தில் குழந்தையாக வந்து பிறக்கும் இளைஞனின் வாழ்க்கையை சொல்கிறது எம்.டியின் நாவல். பாட்டி அவனை சின்ன குழந்தையாக இருக்கும்போதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61991

அணிவாயில்

மகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர். மலையாளம் வழியாக சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிடும்படி அறிந்தவர். உலகஇலக்கியத்திலும் தமிழ்-மலையாள நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்புள்ளவர். எழுத்தச்சனின் மகாபாரதத்தை அவர் மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் முறைப்படி பாராயணம் செய்திருக்கிறார். அன்று அதைக்கேட்க ஒவ்வொருமுறையும் ஏழெட்டு பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அம்மா தன் இனிய மெல்லியகுரலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47119