Tag Archive: எம்.டி.முத்துக்குமாரசாமி

பண்பாட்டாய்வும் எம்.டி.எம்மும்

ஜெமோ உங்கள் தளத்தில் வரலாறு பற்றிய விவாதம் பார்த்தேன். எம்.டி.முத்துக்குமாரசாமி உங்கள் திருப்பூர் உரைபற்றி எழுதிய இந்தக்குறிப்பைப் பார்த்தீர்களா? இதற்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களா? அதிலுள்ள கேள்விகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று அறியவிரும்பினேன். ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன், அதை அப்போதே பார்த்தேன். ஒரு புன்னகையுடன் கடந்து வந்துவிட்டேன் முதல்விஷயம் இதைப்பற்றியெல்லாம் ஆய்வாளராக நின்று ‘அதிகாரபூர்வமாகப்’ பேசும் தகுதி எம்.டி.முத்துக்குமாரசாமிக்குக் கிடையாது. அவர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். ஓர் ஆங்கிலப்பேராசிரியர். எண்பதுகளில் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதி சவேரியார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74921/

எம்.டி.எம்மின் நூறுநாவல் பட்டியல்

எம்.டி.முத்துக்குமாரசாமி அவருக்குப்பிடித்த நூறு நாவல்களை பட்டியலிடுகிறார். முதல் ஏழு நாவல்கள் இதிலுள்ளன. தமிழ் வாசகப்பரப்பில் இது ஒரு முக்கியமான முயற்சி என எண்ணுகிறேன். என்னுடைய வாசிப்பு என்பது எவ்வளவு குறுகியது என இந்த சிறிய பட்டியலே காட்டுகிறது. இந்த ஏழில் நான் வாசித்தவை இரண்டுதான். நபக்கோவின் Ada மற்றும் பெரெக்கின் Life A User’s Manual. முதல் நாவல் எனக்குப்பிடிக்கவில்லை. இரண்டாவது நாவல் மிகவும் சிரமப்பட்டு வாசித்தது. ஆனால் பிடித்திருந்தது. முன்பு விமர்சனக்குறிப்புகள் எழுதும்போது தமிழில் வாசிக்கக்கிடைக்காத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73938/

அன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]

[டிரோஜன் குதிரை. டிராய் நகருக்குள்] இந்த இணையதளத்தில் கருத்துலகில் வரும் அன்னிய நிதியையும் அதன் பாதிப்பையும் பற்றி நான் எழுதி சர்ச்சைக்குள்ளான விஷயங்களை ஒருவாறு தொகுத்து முடித்துக்கொள்ள விரும்புகிறேன். ஓர் எல்லைக்கு மேல் இதைப்பற்றிப்பேசினால் வெறும் வம்புகளே எஞ்சும் என்பதனால். சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின், உலகமயமாதல் தொடங்கியபின், தொண்ணூறுகளின் நடுவில் தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலிலும் இலக்கிய-அரசியல் கோட்பாட்டுச்சூழலிலும் ஒரு திட்டவட்டமான மாற்றம் தென்பட ஆரம்பித்தது. பல சிற்றிதழ்சார் எழுத்தாளர்கள் கருத்தியல் தளத்தில் சடாரென்று ஒரு ‘யூ டர்ன்’ அடித்தார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28464/

எம்.டி.எம் விளக்கம்

நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் ‘காமமும் சாத்வீகமும்’ என்ற பதிவில் என்னுடைய தொடர்புடையதும் தொடர்பற்றதுமான மூன்று டிவீட்டுகளை ஒன்றிணைத்து வாசகர் அனுப்பிய கடிதமொன்றிற்கு பதிலளித்திருப்பதை வாசித்தேன். அதில் உங்கள் கட்டுரைக்கு தொடர்புடையது முதல் ஆற்றல் (காமம்) சாத்வீக ஆற்றலாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற என்னுடைய டிவீட் மட்டுமே. எம் டி முத்துக்குமாரசாமி விளக்கம் http://mdmuthukumaraswamy.blogspot.in/2014/07/blog-post_25.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/58354/

கொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி?

அன்புள்ள எம்டிஎம், கொரிய கோழிச்சமையல் வாசித்தேன். சுவாரசியமான பகடி. பகடிசெய்யப்படுவதை கூர்ந்தறிந்து செய்யப்படும் பகடிக்கு உள்ள மதிப்பே தனிதான். வாழ்த்துக்கள் கொரியா மகாபாரதக்காலத்தில் கொரதேசம் என்று அழைக்கப்பட்டது. கொர என்றால் இணைப்பு. ஆகவே கொரியக்கோழிகளை சமைக்கும்போது எலும்பின் மூட்டுகளை முழுமையாகவே விலக்கிவிடவேண்டும். அதை நீங்கள் சொல்ல விட்டுவிட்டீர்கள் ஜெ ஹா ஹா ஜெயமோகன்! இப்படி முதுகு ஒடிய மகாபாரதம் எழுதுகிறீர்கள் அவ்வபோது இப்படி உங்களை சுவாரஸ்யப்படுத்தவிட்டால் எப்படி? ஆனால் பாருங்கள் உங்கள் வாசகர்கள் சிலருக்கு கோபம் தாங்கமுடியவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57995/

நன்றி, முத்துக்குமாரசாமி

அன்புள்ள எம்.டி.எம், மன்னிக்கவும், நிறைய தவித்துப்போய்விட்டீர்கள். இரண்டுநாட்களாக இங்கே ஒருநாளுக்கு இரண்டுமணிநேரம் கூட மின்சாரம் இல்லை. மின்சாரம் அலைபாய்ந்து என்னுடைய கணினி மடிக்கணினி இரண்டுக்குமே மின்னேற்றி பழுதாகிவிட்டது. பணம்செலவுசெய்து வாங்கி எழுதுகிறேன். நீங்கள் நாகர்கோயில்காரர் என்று இப்போதுதான் தெரிகிறது. முன்னரே ஊகித்திருக்கவேண்டும். நீங்கள் சொன்னது சரிதான். உங்கள் பதிலில் நான் சொன்னவற்றுக்கான பதில் ஏதும் இல்லை. பாரதியின் மெய்யியல் சாரம் என்ன என்று விவாதிப்பதாக இருந்தால் நான் அதைத் தனியாகச் செய்திருப்பேன். பாரதி ஒரு நல்ல கவிஞரா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22086/

எலியட்-எம்டிஎம்-எதிர்வினை

அன்புள்ள எம்.டி.எம், எதிர்வினை கண்டேன் நரைத்தகிருதா இருக்கட்டும், ரசனை விமர்சனத்தின் ஒரு பகுதி. கரிபூசிய தலைமயிரென்பது கட்டுடைப்பு விமர்சனத்தின் அடையாளம். ஒரு வேறுபாடு தேவைதானே? தமிழ் மலையாளம் கன்னடம் மூன்றுமொழிகளிலும் எலியட் மொழியாக்கம் வழியாகவே பாதிப்பைச் செலுத்தினார். தமிழில் 1958ல் தேவராஜன் என்பவர் பாழ்நிலத்தை வசனமாக மொழியாக்கம் செய்தார். அந்த வரிகளைப் பலர் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். தேவதேவன் அந்த மொழியாக்கத்தால் பாதிப்படைந்தவர். அப்பாஸ் போன்றவர்கள் பிரம்மராஜன் மொழியாக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் என்பதுடன் அந்த மொழிபெயர்ப்பு நடையையும் எடுத்துக்கொண்டவர்கள்.அவர்கள் ஆங்கிலக்கல்வி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22065/

எட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…

அன்புள்ள எம்.டி.எம், உங்கள் குறிப்பு காட்சிப்பிழை புரிதல்பிழை போன்ற பகடிகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நான் விவாதிக்கும்தளம், கேட்கும் வினாக்கள் அப்படியே பல படிகளாக விரிந்து நீடித்துக்கொண்டே செல்கின்றன. எனக்கு அவற்றின் மறுதரப்பு பற்றி மட்டுமே அக்கறை. ஆக, கடைசியில் நாம் இன்னொரு பொதுவான புரிதலை அடைந்துவிட்டோம். உங்கள் அணுகுமுறை பின்நவீனத்துவ விமர்சனம் என்பதால் நீங்கள் பாரதியைத் தர அடிப்படையில் மகாகவி என வகைப்படுத்தவில்லை. என் விமர்சனம் முழுக்க அதைச் சார்ந்ததாகவே இருந்தது. எலியட்டை பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22048/

ரசனை விமர்சனத்தின் கலைச்சொற்கள்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…

நவீன ரசனைவிமர்சனம் என்பது அதன் அடிப்படையான செயல்பாட்டுமுறையை ஒட்டி செய்யப்படும் மிகப்பொதுவான அடையாளம். அதற்குச் சரியான சொல் அழகியல் விமர்சனம் என்பதே. ஆனால் ரசனைவிமர்சனம் என்ற பெயர் இடுகுறிச் சொல்லாக நிலைபெற்றுவிட்டது. அது எதைக்குறிக்கிறதென்பதும் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. ஆகவே அதை எங்கும் சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள்.மேலும் அழகியல் என்ற சொல் பிற்காலத்தில் மிகவிரிவாக ஆகிவிட்டிருக்கிறது. இந்த முறைக்குள் பல்வேறுவகையான போக்குகள், பலவிதமான அழகியல்கொள்கைகள் உள்ளன. இலக்கிய இயக்கங்கள் உள்ளன. பொதுவாகப்பார்த்தால் ரசனை விமர்சனத்தின் தொடக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு அறிவொளிக்கால பிரிட்டிஷ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22056/

ரசனை விமர்சனமும் வரலாறும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…

அன்புள்ள எம்.டி.எம், பதில் கண்டேன் நீங்கள் எனக்களிக்க விரும்பும் தோற்றத்தைப்பார்த்தால் என்னை ’மகாகவி’ பாரதியாராக ஆக்க நினைப்பதுபோல உள்ளது. ஆனால் கைகால்கள் கட்டிப் பக்கவாட்டில் கிடத்தப்பட்டு, கிடுக்கிப்பிடியால் கதறக்கதறக் கட்டுடைக்கப்பட்டு, decanonioze செய்யப்பட்டமையால் எந்தவித முதன்மையிடமும் இல்லாமல் சும்மா ஒரு இதுக்காக மகாகவி பட்டத்தைச் சுமந்துகொண்டிருக்கும் பாரதி. அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆகவே கண்களில் அந்தப் பேதமையை மட்டும் நீக்கி விடுங்கள். மற்றபடி மீசை வளர்த்துக்கொள்கிறேன். diachronic அணுகுமுறைதான் என்னுடையதென நான் முன்னரே சொல்லிவிட்டேன். இலக்கியப்பிரதியை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22040/

Older posts «