Tag Archive: எம்.சி.ராஜா

எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்

  1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு இதில் இருந்தது. எம்.சி.ராஜா இந்தியாவில் தொழிற்சங்கப் போராட்டங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்க இயக்கமே குழந்தை நிலையில்தான் இருந்தது. மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற ஊர்களில் உள்ள ஆலை ஊழியர் நடுவேதான் அது அரும்பியிருந்தது.   இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அதற்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5516

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

யூஜின் அயனெஸ்கோ எழுதிய காண்டாமிருகம் என்ற பிரெஞ்சு நாடகம் புகழ்பெற்றது [ Rhinoceros –   Eugène Ionesco]. எண்பதுகளில் அந்நாடகத்தின் மலையாளத் தழுவலை நான் திருவனந்தபுரத்தில் மேடையில் முதல் முறையாகப் பார்த்தேன்.பிற்காலத்தில் திரைப்படத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணன்குட்டிநாயர் அதில் சிறப்பாக நடித்திருந்தார். அதில் ஒரு காட்சி வரும். மேடையில் சிலர் பேசிக்கொண்டிருப்பார்கள். குடையை இடுக்கி, வேட்டியை மடித்துக்கட்டி, வெற்றிலைபாக்குக்கடை முன்னால் நின்று சாவகாசமாகக் குதப்பியபடி பீடி பிடித்தபடி கேரள கூட்டணி அரசியலை அலசிக்கொண்டிருப்பார்கள். ஒரு பெரிய காண்டாமிருகம் அவர்கள்நடுவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20835

முதல் எதிர்க்குரல்

இந்த நாவலுக்கான கருவை அளித்தவர் இருவர். முதல்வர், திரு.வி.கல்யாணசுந்தரனார். அவரது சுயசரிதையில் இந்தியாவில் நடந்த முதல் தொழிலாளர் வேலைநிறுத்தமான பின்னி ஆலை வேலைநிறுத்தம் பற்றிக் குறிப்பிடுகிறார். இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகமெங்கும் தொழிற்சங்க இயக்கம் ஆரம்பித்தது இந்தியாவில் 1890ல் அமைந்த மும்பை மின்ஹண்ட்’ஸ் தொழிலாளர் அமைப்பு [Bombay Millhand’s Association] . 1095ல் கல்ககத்தா அச்சகத்தொழிலாளர் சங்கம் அமைந்தது [Printers’ Union formed in Calcutta ] . 1907 மும்பை தபால் ஊழியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38761