Tag Archive: எம். கோவிந்தன்

வாழ்வின் ஒரு கீற்று

முன்பு இருத்தலியல்சிந்தனைகள் வந்து அலையடித்த காலகட்டத்தில் மலையாளச்சிந்தனையாளர் எம். கோவிந்தன் கேட்டாராம் “எல்லாம் சரி, அதற்கெல்லாம் பொன்னானியில் என்ன இடம்?” பொன்னானியில் எந்துகாரியம்? என்னும் அந்தக்கேள்வி புகழ்பெற்ற ஒன்று. கோவிந்தனின் ஒரு புகழ்பெற்ற கவிதை ‘ஒரு பொன்னானிக்காரனின் மனோராஜ்யம் [ஒரு பொன்னானிக்காரனின் பகற்கனவு] அவரை பொன்னானிக்காரனாக மட்டுமே முன்னிறுத்துகிறது. கோவிந்தன் பெரும்பாலும் வாழ்ந்தது சென்னையில் உள்ள ஹாரீஸ்சாலையில் இருந்த அவரது இல்லத்தில். எம்.என்.ராய்க்கு நெருக்கமானவராக இருந்தார். ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியை தென்னகத்தில் செயல்படச்செய்தார். மலையாளத்தில் நவீனத்துவசிந்தனைகள் வேரூன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83945

மின்தமிழ் பேட்டி 4

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73137

மின்தமிழ் பேட்டி -1

[சி சரவணக் கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மின்தமிழ் இதழில் வெளியான பேட்டி] 1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா? பதில். எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தேதான். என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69816

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா? இதன் முழு பின்ணனி என்ன? சிவகுமார் சென்னை அன்புள்ள சிவக்குமார், நானும் யாரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57014

அவர்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, வைரமுத்துவிடம் ஒருமுறை ட்விட்டரில் கேள்வி கேட்கும் வாய்ப்பு வந்தது. தொல்காபியத்தில் திராவிடம் என்ற சொல் இனத்தை குறிப்பதாக எங்குமே சொல்லப்படவில்லையே என்று கேட்ட போது “குழந்தைகள் பெறுவதற்கு முன்பே ஒருத்தியைத் தாய் என்று எப்படிச் சொல்ல முடியும்? திராவிட மொழிக் குடும்பம் பிறக்காமல் தமிழ் கன்னியாய் இருந்த காலம் அது” என்று பதிலளித்தார். நான்,அவை ஐரோப்பியர்களின் வருகைக்கு பின்பு, மெக்கலேயால் போலியாக “உருவாக்கப்பட்டவை” என்று பதில் அளித்தேன். அதற்கு மறுபதில் இன்னும் அவரிடமிருந்து வரவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27533

கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3

நாத்திக இயக்கங்களின் எல்லை என்ன? ஒரு நம்பூதிரி நாவிதரிடம் பந்தயம் கட்டினார். தலையில் மொட்டை அடிக்கும்போது ஒரு கீறலுக்கு பத்துபைசா கழித்துக்கொள்வார். மொட்டைபோட கூலி ஒரு ரூபாய். ஒவ்வொரு கீறலாக விழுந்துகொண்டிருந்தது. நம்பூதிரிக்கு உற்சாகம். ஒன்பது கீறல். பத்து கீறல். காசே கொடுக்கவேண்டாம் என்று நம்பூதிரி நினைத்தார். ஆனால் சட்டென்று தலையில் வலி. ‘ஏன செய்கிறாய்?’ என்றார். ‘எல்லா கீறல்களையும் சேர்த்து ஒரே கீறலாக ஆக்குகிறேன்’ என்றார் நாவிதர். 1988ல் எம் கோவிந்தனை நான் இரண்டாம்முறையாக சந்தித்தபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8655

எம் கோவிந்தன் நினைவு

திரிச்சூர் ஆய்வுமையத்தின் சார்பில் நாளை [10-10-2010] அன்று திரிச்சூர் சாகித்ய அக்காதமி கூடத்தில் நிகழும் ஆய்வரங்கில் ‘தென்னக நாத்திக இயக்கங்கள்’ என்ற தலைப்பின் நான் கோவிந்தன் நினைவுப்பேருரை ஆற்றவிருக்கிறேன்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8594