Tag Archive: எம்.ஏ. சுசீலா.

இரண்டாம் மொழிபெயர்ப்பு

  அன்பின் ஜெ.எம், உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னியுங்கள். எனக்குக் கீழ்க்காணும் கடிதமொன்று அண்மையில் பெயரில்லாமல் வந்தது. அதை நான் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை;காரணம் உங்கள் வழிகாட்டுதலால் இப்படிப்பட்ட ஆட்கள், தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள்..,மற்றவர்கள் ஏதேனும் செய்தாலும் தேவையின்றி வம்புக்கிழுப்பார்கள் என்ற அக அமைதி எனக்கு நிறையவே கிட்டியிருக்கிறது. எனினும் இக் கருத்துத் தொடர்பாக (மூன்றாவது மொழி வழியான மொழிபெயர்ப்புக்கள் பற்றி)-அவையும் நமது சூழலில் ஏற்கப்படக் கூடியனவே என்று ஒரு பதிவை நீங்கள் ஏற்கனவே எழுதியிருப்பதான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8679

குற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு

  அன்பின் ஜெ தங்களிடம் முன்பே பகிர்ந்து கொண்டபடி என் தமிழ் மொழிபெயர்ப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தற்போது சென்னை நற்றிணை பதிப்பகத்தார் தங்கள் சிறப்பு வெளியீடாக செம்பதிப்பாக வெளியிட்டுள்ளனர். தங்கள் பார்வைக்கு முகப்பட்டை படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்… * சென்ற ஆண்டு நான் முடித்திருக்கும் NOTES FROM THE UNDERGROUND இன் மொழியாக்கம் நிலவறைக்குறிப்புக்கள் என்னும் தலைப்பில் விரைவில் நற்றிணை வெளியீடாக வர இருக்கிறது. திருத்தங்கள் முடித்தாயிற்று,ஈரோடு புத்தகக்கண்காட்சியின்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97093

‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா

[வண்ணதாசன் புனைவுலகில் பெண்களின் சித்திரங்கள் : எம் ஏ சுசீலா] 1 வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.. புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மகிழும் பாரதியைப்போல இவரது கதை வெளியிலும் கூடத் தாக்கத்தைச் செலுத்துவது கல்யாண்ஜி என்கிற கவிஞனின் மனமே . எதிர்ப்படும் சின்னச்சின்னப்பொருளும் மனிதர்களின் மிக இயல்பான தோற்றங்களும் பாவனைகளும் கூடப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93150

அறம் – ஒரு விருது

அறம் தொகுதிக்கு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான எஸ் ஆர் எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப் பேராய விருது அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது இந்த விருது. குழும நண்பரான எம்.ஏ.சுசீலா மொழியாக்க விருதை தஸ்தயேவ்ஸ்கியின் அசடன் மொழியாக்கத்துக்காக பெறுகிறார். நான் பெருமதிப்பு கொண்டுள்ள கவிஞர் அபி இவ்விருதின் ஒருங்கிணைப்பாளர். இவ்விருதின் முக்கியமான மகிழ்ச்சி என்பது நான் என் ஆசானாக எண்ணும் கோவை ஞானி அவர்களுக்கு சிறந்த தமிழறிஞருக்கான விருது அளிக்கப்பட்டிருப்பதுதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38210

ஊட்டி முகாம்-எம்.ஏ.சுசீலா

தற்போது தில்லியில் இருப்பதால் விஷ்ணுபுர வட்டம் நடத்தும் காவிய முகாம்களிலும்,இலக்கிய அமர்வுகளிலும் அதன் சார்பில் நடத்தப்படும் விருது விழாக்களிலும் எப்போதும் தவறாமல் கலந்து கொள்வது எனக்குச் சாத்தியமாவதில்லை. இவ்வாண்டில் ஏதோ ஒரு சூழல் எனக்குச் சாதகமாக அமைய,25,26,27 ஆகிய மூன்று நாட்களும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் நிகழ்ந்த இலக்கிய முகாமில் பங்கேற்க முடிந்தது பெரும் மன நிறைவை அளித்திருக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/27732

தமிழில் வாசிப்பதற்கு…

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நலம், நலம் அறிய அவா. (இப்படி எழுதுகையில் எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வந்து என்னைக் குதூகலப்படுத்தும்.) குற்றமும் தண்டனையும் அசடன் கரமசோவ் சகோதரர்கள் போரும் அமைதியும் இவைகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் இவைகளை வாசித்தால் ரஷ்ய எழுத்தாளர்கள் தாங்கள் ஒவ்வொரு வரியிலும் சொல்ல வந்த அசல் கருத்துக்களும், உணர்ச்சிகளும் மற்றும் பல விஷயங்களும் கிட்டுமா என்பதை எனக்குத் தெரியப்படுத்தவும். நீங்கள் கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் வாசித்திருப்பீர்கள். நான் வண்ணதாசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25938

அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அசடன் நூலுக்குத் தங்களின் முன்னுரை பல சிந்தனைகளை கிளறிவிட்டது. ’புனித அசட்டுத்தனம்’  என்ற  கருதுகோள்,நம் மரபிலும் நீங்கள் சொன்னது போலவே ஆழமாக ஊடுருவியுள்ளது. ஆனால் இது சற்று சிக்கலான கருத்து அல்லவா?   விவேகானந்தர் தனது கீதை பற்றிய சொற்பொழிவில்  பரமஹம்சனும் அறிவிலியும் ஒன்று போலவே தென்பட்டாலும் அவர்களிடயே கடலளவு வேறுபாடுண்டு என்று கூறிய கருத்து இதோடு பொருந்திப் போகிறது என நினைக்கிறேன். shankaran e r அன்புள்ள சங்கரன் உண்மை. அறிவழிதல்,அறிவிலாமலிருத்தல் இரண்டும் மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17090

அசடனும் ஞானியும்- கடிதங்கள்

அன்பின் ஜெமோ, நலமா? நீண்ட நாட்களின்பின் எழுத முடிகிறது.உங்கள் கனடா பயணம் நல்லவிதமாக இருந்தும் பயணச் சீட்டு மேலதிக செலவாகியதைச் சொன்னீர்கள்.அதை அப்படியே விட்டு விட்டீர்களா? தண்டமாக விடாமல் எடுத்துத் தானமாகக் கொடுக்கலாம். அசடனும் ஞானியும் வாசித்தேன் தேர்வு செய்யப்பட்ட சிலர் வாசித்து நொந்த மனதுக்கு ஒத்தடம் தந்ததுபோல் உணர்வு.நான் போஸ்ட்மேன் வேலை செய்தபோது ஒரு வீட்டில் மொங்கொலோய் குறைபாடுள்ள ஒருவர் கடந்து போகும்போது கை அசைப்பார், புன்சிரிப்பை இருவரும் பரிமாறுவோம்.ஒருமுறை தெருவில் அவரைக் கண்டேன் எதிர்பாராமல்.கண்டவுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17082

அசடனும் ஞானியும்

ஓர் உரையாடலில் நித்யா சொன்னார், சராசரித்தனத்துடன் இடைவெளியில்லாத மோதலையே ஞானத்தின் பாதை என்கிறோம் என. நம் உடல், நம் மூளை ,நம் சூழல் ஆகிய அனைத்தும் நம்மைப் பிறரைப்போல் ஆக்குகின்றன. ஆகவே அனைவரும் வாழும் சராசரி வாழ்க்கை ஒன்றையே நாமும் வாழ்ந்தாகவேண்டும்.     ஆனால் முமுட்சு என்பவன்,சராசரியில் ஒருவனல்ல. சராசரி மனிதன் வாழ நினைக்கும்போது வாழ்வை அறிய நினைப்பவன் அவன். சராசரி மனிதன் இன்பத்தை நாடும்போது அறிதலின் பேரின்பத்துக்காக அனைத்து இன்பங்களையும் கைவிடத் துணிந்தவன் அவன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16880

கடிதங்கள், இணைப்புகள்

கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும், நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும், உயிர்த் தேனையும், லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது… நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை…. மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்… காண்க; இணைப்பு மீனாட்சியின் பொன்விழா http://www.masusila.com/2010/11/blog-post_28.html — எம்.ஏ.சுசீலா,(M.A.Susila) புது தில்லி (தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை) D II 208 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10073

Older posts «