Tag Archive: எம்.எம்.கல்புர்கி கொலை

எம்.எம்.கல்புர்கி கொலை

மூத்த கன்னட எழுத்தாளரான எம்.எம்.கல்புர்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். எல்லாவகையிலும் இது ஓர் அரசியல்படுகொலை. மற்ற அரசியல்கொலைகளுக்கும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கொல்லப்படுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடுள்ளது. எழுத்தாளர்கள் தனிமனிதர்கள். ஆகவே பாதுகாப்பற்றவர்கள். சமூகமும் அரசாங்கமும்தான் அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கவேண்டும். ஆகவே ஓர் எழுத்தாளன் தாக்கப்பட்டால் அவ்வரசு அதன் கடமையிலிருந்து வழுவிவிட்டதென்றே பொருள். அந்தச்சமூகம் அறமிழந்துவிட்டது என்றே பொருள். இதில் அவ்வெழுத்தாளனின் கருத்து அல்லது செயல் குறித்த விவாதத்திற்கே இடமில்லை. அத்தகைய எந்த விவாதமும அடிப்படையில் இந்த கீழ்மையை மறைப்பதற்கான முயற்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78317