Tag Archive: எம். என் ராய்

வாழ்வின் ஒரு கீற்று

முன்பு இருத்தலியல்சிந்தனைகள் வந்து அலையடித்த காலகட்டத்தில் மலையாளச்சிந்தனையாளர் எம். கோவிந்தன் கேட்டாராம் “எல்லாம் சரி, அதற்கெல்லாம் பொன்னானியில் என்ன இடம்?” பொன்னானியில் எந்துகாரியம்? என்னும் அந்தக்கேள்வி புகழ்பெற்ற ஒன்று. கோவிந்தனின் ஒரு புகழ்பெற்ற கவிதை ‘ஒரு பொன்னானிக்காரனின் மனோராஜ்யம் [ஒரு பொன்னானிக்காரனின் பகற்கனவு] அவரை பொன்னானிக்காரனாக மட்டுமே முன்னிறுத்துகிறது. கோவிந்தன் பெரும்பாலும் வாழ்ந்தது சென்னையில் உள்ள ஹாரீஸ்சாலையில் இருந்த அவரது இல்லத்தில். எம்.என்.ராய்க்கு நெருக்கமானவராக இருந்தார். ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியை தென்னகத்தில் செயல்படச்செய்தார். மலையாளத்தில் நவீனத்துவசிந்தனைகள் வேரூன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83945

அறிவுஜீவி- விவாதம்

“யார் அறிவுஜீவி” என்ற கட்டுரையில் ஜெயமோகன் தந்திருப்பது Public intellectual என்பதற்கான வரையறை என்று தோன்றுகிறது. இதன்படி பார்த்தால் அந்த வரையறையும், அவர் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களும் சரியாகப் பொருந்துகிறார்கள். தமிழில் புழக்கத்தில் உள்ள “அறிவுஜீவிகள்” என்ற கலைச்சொல்லும் பொதுவாக Public intellectual களைக் குறிக்கத் தான் பயன்படுகிறது, intellectual எனப்படுபவர்களை அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே அந்த சொல்லாட்சி சரியானதே. இரண்டு வகையினருக்கும் என்ன வேறுபாடு? intellectual என்றால் எல்லா விதமான அறிவுத் துறைகளிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41741