Tag Archive: எமன்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18

[ 24 ] அர்ஜுனன் மலைகள் இடப்பக்கம் நிரைவகுத்த பாதையில் தென்றிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவனுக்குப் பின்னால் ஓடிவந்த  முதிய அந்தணன் ஒருவன் உரத்த குரலில் “இளைய பாண்டவரே, தங்களை நாடி வந்தேன். தங்களுக்காகவே வந்தேன்” என்றான். அர்ஜுனன் நின்று “யார் நீங்கள்?” என்றான். மூச்சிரைக்க அணுகி “என் பெயர் ஜாதவேதன். வேதம் புரக்கும் தொல்குடியில் பிறந்தவன். என் ஒன்பதாவது மைந்தனை தென்றிசையரசனுக்கு பறிகொடுத்துவிட்டு வாழ்வை முடிக்கக் கிளம்பியவன்” என்றான். “நான் உங்கள் வில்லுக்கு அடைக்கலம். என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91958

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53

[ 8 ] கிருதயுகத்தில் கோசலநாட்டில் சோமகன் என்னும் சந்திரகுலத்து அரசன் ஒருவன் ஆண்டிருந்தான். நூறுபெண்களை மணந்து ஐம்பதாண்டுகள் வாழ்ந்தும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மைந்தரின்மை அவனை நோயென பீடித்தது. தன்னை நோக்கும் எவ்விழிகளிலும் தனக்கு மைந்தரில்லை என்பதே தெரிவதாக அவன் எண்ணினான். சூழ்ந்தவர் சொற்களும் சிரிப்புகளும் நச்சு முள்ளென்றாயின. துயிலின் இருண்ட ஆழத்திலிருந்து தன் மூதாதையர் ஏங்கி அழும் குரல் எழுந்துவரக் கேட்டான். தன் மைந்தரன்றி பிற மைந்தரால் நிறைந்த புவியை வெறுக்கலானான். பிற மைந்தரைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90364

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21

[ 8 ] “அரசே, புழு பறப்பதைப் பார். நெளியும் சிறுவெண்புழுவுக்குள் சிறகு எவ்வடிவில் உள்ளது? அதன் கனவாக. அக்கனவு அதற்குள் பசியென்று ஆகிறது. பசி அதை கணம் ஓயாது நெளியச்செய்கிறது. நெளிந்து நெளிந்து அது இறகுகளை கருக்கொண்டபின் கூட்டுக்குள் சுருண்டு தவமியற்றுகிறது. உடைத்தெழுந்து வண்ணச்சிறகுகளுடன் வெளிவந்து காற்றிலேறிக்கொள்கிறது. மண்ணுடன் மண்ணென்றாகிய புழுவில் விண்ணகம் குடிகொள்ளும் விந்தை இது என்று அறிக!” ஐதரேயக்காட்டின் முதன்மை ஆசிரியர் திவாகரர் சொன்னார். “சிறகென்பது பறக்கத் துடிக்கும் விழைவு ஒரு பருப்பொருளானது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89622

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19

[ 5 ] “மைத்ரேயரைப் பார்க்க அமைச்சர் விதுரர் சென்றபோது கனகரும் அடைப்பக்காரனாக மூங்கில்கூடையுடன் நானும் உடன்சென்றோம்” என்று காலன் சொன்னான். “மைத்ரேய மாமுனிவர் புஷ்பகோஷ்டத்திற்குப் பின்னாலிருந்த குறுங்காட்டுக்குள் முனிவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைக் குடிலில் தங்கியிருந்தார். மாமுனிவரான பராசரரின் வழிவந்தவர் அவர் என்று அறிந்திருந்தேன். அவர்களுக்கு வேதத்தைவிட புராணங்களே மெய்யறிதலின் பெருந்தொகை என்றனர். அவருடன் அவரது எட்டு மாணவர்களும் வந்திருந்தனர்.” நாங்கள் செல்லும்போது அவர் அன்றைய வகுப்பு முடிந்து மாணவர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தார். விதுரர் முனிவரின் தாள்பணிந்து முகமனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89538