Tag Archive: என் பெயர்

என் பெயர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ என் பெயர் கதையை நான் இதுவரை வாசித்ததில்லை. வெளிவந்து 12 வருடங்கள் ஆகியிருக்கின்றன நீங்கள் சமீபத்தில் பொதுவெளியில் பெண்கள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் நீட்சியாகவே இந்தக்கதையை வெளியிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் அத்தகைய உயர் ஆய்வு மையத்தில் ஒரு பெண் பெண் என்ற ஒரே காரணத்துக்காக சுயத்தை இழந்து அடிமையாக நேர்வதும் அதை மறுக்கையில் அவளுக்கு ஏற்படும் அழிவும் தீவிரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் கொஞ்சம்கூடக் குரலை உயர்த்தாமல், பிரச்சாரம் செய்யாமல் கதை எழுதப்பட்டுள்ளது. ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31611

என் பெயர் [சிறுகதை]

’ஆய்வு ஒருங்கிணைப்பு மைய’த்திற்கு மாலை ஏழு மணிக்கு நான் வந்து சேர்ந்தபோது டாக்டர் ஹரிஹர சுப்ரமணியமும், டாக்டர் முகமது ஜலீலும் மட்டும்தான் வந்திருந்தார்கள். வெளியே நின்ற கார்கள் எனக்குப் பரிச்சயமானவை. தாமதமாகி விடவில்லை என்ற ஆறுதல் ஏற்பட்டது. என் அலுவலகத்திலிருந்து காரில் பத்து நிமிடத்தில் இங்கு வந்துவிடலாம். ஆனால், கிளம்புவது தாமதமாகிவிட்டது, வழக்கம்போல. விஞ்ஞானி என்ற பெயரில் நான் செய்வது நிர்வாக வேலை. இந்தியாவில் மிக அதிகமாகச் செய்யப்படும் வேலை. மேற்பார்வை, கண்காணிப்பு, கணக்கெடுப்பு, பதிவு செய்தல்… …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31551