Tag Archive: எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

எண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்

வருக்கை [சிறுகதை] அன்புள்ள ஜெ   வருக்கை கதையை இந்த வரிசைக் கதைகளில் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் கண்டவரை ஒரு சின்ன விஷயம் அதில் உள்ளது. அதவாது பெண்களின் மனம். பெண்கள் ஏன் கள்ளன்களால் கவரப்படுகிறார்கள்? அது ஒரு அடிப்படையான  உயிரின் இயல்புதானா? ஏனென்றால் இப்படி பெண்களைக் கவர்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எவருமே பெரிய உடல்வலிமை உடையவர்கள் அல்ல. அவர்கள் மூளைக்கூர்மைகொண்டவர்கள். நகைச்சுவையாக அதை வெளிப்படுத்துபவர்கள். நன்றாகப் பேசுபவர்கள்   பேசிப்பேசியே ஒருவன் தன்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130436

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-4

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை] அன்புள்ள ஜெ,   எனக்கு எண்ண எண்ணக் குறைவது கதையை வாசித்தபோது ஒன்று தோன்றியது, அந்தத் தலைப்பிலேயே அது உள்ளது. எம்கே மற்றும் அவர்களின் மாணவர்கள் அனைவரிடமும் ஒரு ‘எண்ணி எண்ணி குறைக்கும்’ ரிடக்‌ஷனிச்சம் உள்ளது. எல்லாவற்றையும் ஒரு எல்லையில் கொண்டுசென்று குறைத்துவிடுகிறார்கள். அத்வைதம் மார்க்ஸியம் எல்லாவற்றையும் அப்படி குறைக்கிறார்கள். எம்கேயின் சிந்தனையையே அப்படி சுருக்கிக் குறைக்கிறார்கள்.   அப்படி எண்ணி எண்ணி குறைத்தால் எஞ்சுவது தற்கொலைதான். அதுதான் மிச்சம். நவீனத்துவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130236

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-3

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]   அன்புள்ள ஜெ என் கல்லூரியில் ஓர் உரையாடலில் ராமன் சரயுவில் மூழ்கி உயிரிழந்ததைப் பற்றிச் சொன்னேன். உடனே ஒருவர் தற்கொலைசெய்துகொண்டவர் எப்படி தெய்வமாக முடியும் என்று கேட்டார். நான் கொலைசெய்யப்பட்டவர் தெய்வமாக முடியும் என்றால் இதுவும் முடியும்தான் என்று சொன்னேன்   தற்கொலை என்பதிலுள்ள கொலைதான் பிரச்சினை. நாம் முன்னால் ஜலசமாதி, வடக்கிருத்தல் என்றெல்லாம்தான் சொல்லிவந்தோம். தற்கொலை என்ற வார்த்தையை பயன்படுத்தியதுமே அர்த்தம் மாறிவிட்டது. இந்தச் சொல் தினத்தந்தியால்தான் கண்டுபிடிக்கப்பட்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130208

எண்ண எண்ணக் குறைவது-கடிதங்கள்-2

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை] ஜெ   கதையை வாசித்தபோது அது கதையா இல்லை உண்மையான நிகழ்ச்சியின் நேர்ப்பதிவா என்ற சந்தேகம் வந்தது. அதிலுள்ள முக்கியமான கதாபாத்திரமான சிந்தனையாளரைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டீர்கள். ஆகவே அவரைப்பற்றிச் சொல்லி கதையை காஸிப் ஆக ஆக்க விரும்பவில்லை. கதையின் மையம் ஒன்றுதான், பாஸிட்டீவான தற்கொலை ஒன்று இருக்க முடியுமா?   உண்டு என்றுதான் இந்துமரபு சொல்லும். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதை முதல் நாம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தவாழ்க்கை ஒரு நோக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130207

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-1

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை] அன்புள்ள ஜெ,   நீங்கள் எழுதும் கதைகளில் ஒரு குறிப்பிட்ட வகையான கதைகள் தொடர்ச்சியாக நினைவில் வருகின்றன. பெரும்பாலும் உண்மை மனிதர்கள். பெரும்பாலும் உண்மை நிகழ்வுகள். அந்த சந்தர்ப்பம் மட்டும் கொஞ்சம் பிக்‌ஷனைஸ் பண்ணப்பட்டிருக்கும். அதுகூட டிரமட்டைஸ் பண்ணப்படாமல் ஒரு உண்மையான வாழ்க்கைச் சித்திரத்தை மட்டும் தொட்டுக்காட்டிவிட்டு மேலே முடிவோ கருத்தோ சொல்லாமல் நின்றுவிடும்.   இருவர் அப்படிப்பட்ட ஒரு கதை. தேவதை நினைவுக்குவரும்  இன்னொரு கதை. சமீபத்தில் பேசப்பட்ட நீரும்நெருப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130200

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

ஏ.கே.எஸ்.பாபு வருவதற்காக அவர்கள் காத்திருந்தனர். கண்டத்தில் ரவீந்திரநாத் தன் பெட்டிக்குள் இருந்து சிறிய புட்டியை எடுத்து திறந்தார். அதை ஜான் ஜோசப்பும் அப்துல் ஹமீதும் கங்காதரனும் வெறுமே பார்த்தனர். அவர் அவர்களின் பார்வையை உணரவில்லை. மேஜைமேலிருந்த கண்ணாடி டம்ளரில் எஞ்சியிருந்த நீரை திறந்திருந்த கழிப்பறைக் கதவு வழியாக உள்ளே வீசிவிட்டு புட்டியில் பாதியளவு இருந்த ரம்மில் விரற்கடை அளவு ஊற்றினார். தூக்கி அளவு நோக்கிவிட்டு பிளாஸ்டிக் குடுவையில் இருந்த நீரை அதில் கலந்தார். அவர் அதை குடிப்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130035