Tag Archive: எச்.எஸ்.சிவப்பிரகாஷ்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்-3

    1.இரவு முழுதும் இரவு முழுதும் ஓவென்ற காற்றின் ஊளை உடல்மீது பாய்வதுபோல இருந்தது இந்நேரம் சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம் என் வாடகை வீடு பகல் முழுதும் பொழிந்தபடியே இருந்தது மழைமழைமழை இந்நேரம் கரைந்துபோயிருக்கலாம் என் வாடகை வீடு இந்தக் கோடை முழுவதும் எரிந்தபடியே இருந்தது வானுயர்ந்த நீல அடுப்பு இந்நேரம் எரிந்து பொசுங்கியிருக்கலாம் என் வாடகை வீடு குளிர்காலம் முழுவதும் கவிந்து மூடிக்கொண்டிருந்தது கடுமையான குளிர் உறைந்துபோயிருக்கலாம் என் வாடகை வீடு இன்னும் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93320

வருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ்

எச் எஸ் சிவப்பிரகாஷ் கன்னடத்தின் நவீனத்துவ இயக்கமான நவ்யாவின் எதிர்வினையாக உருவாகி வந்த படைப்பாளி. மேலைநாட்டு வழிபாட்டு நோக்கு கொண்ட நவீனத்துவத்தை மூர்க்கமாக எதிர்த்து கன்னடத்தின் பண்பாட்டுத்தனித்தன்மைகளில் இருந்து தன்னை உருவாக்கிக்கொண்டவர். கன்னட வீரசைவ மரபின் ஆன்மீக சாரம் அவரது எழுத்துக்களில் உண்டு. அன்றாட யோகி என்னும் அவருடைய குறிப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. https://harpercollins.co.in/book/everyday-yogi/ ஆனால் ஆன்மிகம் மதமாக ஆவதற்கு முற்றிலும் எதிரானவர் எச்.எஸ் சிவப்பிரகாஷ். வீரசைவ மரபு வெறும் சடங்குகளில் சிக்குவதை கடுமையாக விமர்சித்த அவரது நாடகமான மகாசைத்ர மிகப்பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93520

மதுரைக்காண்டம் -கடிதம்

  இனிய ஜெயம், எச். எஸ். சிவப்பிரகாஷ்  எழுதிய மதுரைக்காண்டம் மற்றும் ஒரு புதிய அனுபவம். சேர மண்ணின் மனோஜ் குரூர் போல, தமிழ்ப் பண்பாட்டின் சாரமான ஒன்றுடன் பிணைந்த கன்னட நாடக ஆசிரியர் சிவப்ரகாஷ். மொழி வழி மாநிலம் என்ற இன்றைய அரசியல் பண்பாடு விதித்த எல்லைகளை கைப்பற்ற எத்தனை தியாகக் கதைகள்? நிலை நிறுத்த எத்தனை பாசிச அதிகார வெறிக் கூச்சல்கள்? பாரதப் பண்பாட்டு வரலாறே புலம் பெயர்தல் எனும் ஒற்றை சொல்லில் அடங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93203

எச்.எஸ்.சிவப்பிரகாஷ், மதுரைக்காண்டம்

எச்.எஸ் சிவப்பிரகாஷ் விக்கி பக்கம் வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இவ்வருடம் டிசம்பர் 25 அன்று கோவை பாரதிய வித்யாபவன் அரங்கில் நிகழ்கிறது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கன்னட எழுத்தாளரும் கவிஞருமான எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கலந்துகொள்கிறார். சிவப்பிரகாஷ் இருபதாண்டுகளுக்கு முன்னரே எனக்கு அறிமுகமானவர். எப்போதும் அவருடன் நல்லுறவு எனக்கு இருந்தது. அவருடைய நாடகமான மதுரைக்காண்டம் பாவண்ணன் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்துள்ளது அதன் பிடிஎஃப் வடிவம் இணைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் வாசகர்கள் அதை வாசித்திருந்தால் அவருடன் உரையாடமுடியும் என நினைக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93220

நாடகங்கள்

கிரிஷ் கர்னாட்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750