Tag Archive: ஊஷரர்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 20

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 1 குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர்பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல் தேர்ந்தனர். அந்தகக்குலத்தின் பன்னிரு பெருங்குடிகளில் இருந்தும் மூத்த யாதவர்கள் வந்திருந்தனர். கன்றுநலம்சூழும் மருத்துவர் எழுவரும் வான்குறியும் மண்குறியும் தேரும் நிமித்திகர் மூவரும் மூதன்னையருக்கு பலியும் பூசையும் ஆற்றும் பூசகர் பதின்மரும் அமர்ந்திருந்தனர். பிறை நிலவு பட்டுத்திரையை கிழிக்கும் வாள் என சென்றுகொண்டிருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76110

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 6 அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின் மெய்ப்பாடுகள் இணைந்து ஒற்றை பாவனையாக மாறி அவனை சூழ்ந்திருந்தன. அன்றிரவு முழுக்க சிறுவனாகிய பகன் நடுங்கிக்கொண்டும் மெல்லிய குரலில் முனகிக்கொண்டும் இருந்தான். அவனை மார்புடன் அணைத்த முதியவள் “மைந்தா மைந்தா” என அவனை அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் உடலின் வெம்மை ஏறி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68301

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 5 அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற விழிகளில் தயக்கமேதும் இருக்கவில்லை. விதுரர் எழுந்து “வருக சூதரே, இங்கே அவை மையத்தில் அமர்க” என்றார். சூதன் தயங்கி “இது அரசுசூழ் மன்று என்று தோன்றுகிறதே” என்றான். “ஆம், நாங்கள் பகன் வெல்லப்பட்ட கதையை கேட்க விழைகிறோம்” என்றார் விதுரர். “நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68274

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் – 4 சிந்துநிலத்தில் இருந்த மூலஸ்தானநகரிக்கு சகுனியும் அவரது படைகளும் ஒன்பதுமாதம் கழித்துத்தான் வந்துசேர்ந்தார்கள். மருத்துவர் ஊஷரர் சொன்னதுபோல ஒருவாரத்தில் சகுனியின் உடல்நிலை மேம்படவில்லை. அறுவைமருத்துவம் முடிந்தபின் ஒருமாதத்துக்கும் மேல் அவர் தன்னினைவில்லாமலேயே கிடந்தார். அஞ்சிப் பதுங்கியிருக்கும் மிருகம் போல உடம்பு அதிர்ந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது முனகியபடி ஏதோ சொன்னார். அவை சொற்களாக உருப்பெறவில்லை. அவரது உடலில் இருந்து எழுந்த வெம்மையை அருகே நிற்கையிலேயே உணரமுடிந்தது. “புண்மேல் நான் தூவியது பாலைவனத்தின் விஷமணல். ஓநாயின் கடிவிஷத்துடன் அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65790

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் – 3 சிபிநாட்டின் பாலைநிலத்தை கடப்பதற்குள் சகுனியின் கால் மிகப்பெரியதாக வீங்கிவிட்டது. அவரது உடலருகே இன்னொரு சிறிய உடல்போல அது கிடந்தது. கிளம்பிய முதல் நாழிகையிலேயே வலிதாளாமல் பல்லைக்கடித்துக்கொண்டிருந்த அவர் தன்னையறியாமல் முனகத்தொடங்கிவிட்டிருந்தார். காய்ச்சல் கண்டவர் போல அவர் உடல் நடுங்கியது. அவரை நோக்கிய காவலர்தலைவன் அவரது வெண்ணிற உடல் சிவந்து கனல் கொண்டிருப்பதை கண்டான். அவரால் குதிரையில் அமர முடியவில்லை. ஒருமுறை குதிரையிலிருந்து அவர் சரிந்து விழப்போனபோது அதை எதிர்பார்த்திருந்த வீரன் அவரைப்பிடித்துக்கொண்டான். அவரது உடலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65715