Tag Archive: ஊழல்

அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?

பலவருடங்களுக்கு முன்னர் காந்தியைக் கண்டடையும் தேடலில் இருந்த நாட்களில் அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராமத்திற்குச் சென்றிருக்கிறேன். அவரது சாதனைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர் அந்த கிராமநிர்மாணத் திட்டங்களில் இருந்து இயல்பாகக் கிராமத்து ஊழல்களை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு வந்தார். இயல்பாகவே அந்தப்போராட்டம் மகாராஷ்டிர அரசியலில் இருந்த ஊழல்களுக்கு எதிரான போராட்டமாக மலர்ந்து இன்று இந்திய அளவிலான போராட்டமாக மலர்ந்திருக்கிறது. எல்லாவகையிலும் இது ஒரு காந்தியப்போராட்டம் என்பதற்கு அது வந்திருக்கும் வழியே சான்றாகும். காந்தியப்போராட்டத்தின் இயல்புகள் என ஆறு விஷயங்களைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19815

அண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா?

அன்புள்ள ஜெ, முன்பே சிலர் கேட்ட கேள்விகளில் உள்ள ஒரு விஷயத்துக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்தா நடவடிக்கை எடுப்பது? கீழ்மட்டத்திலேதானே ஊழல் உள்ளது? கீழிருந்துதானே நடவடிக்கைகளை எடுக்க முடியும்? மக்கள் ஊழல் நிறைந்தவர்களாக இருக்கும்போது எப்படி மேல்மட்டத்திலே ஊழல் கண்காணிப்புக்காக ஓர் அமைப்பை உருவாக்கி ஊழலை ஒழிக்கமுடியும்? ஆகவே லோக்பாலால் என்ன பிரயோசனம்? நாம் ஒவ்வொருவரும் ஊழல் செய்யமாட்டோம் என்று நினைக்காமல் எப்படி ஊழலை ஒழிக்கமுடியும்? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19924

லோக்பால் போதுமா?

ஜெ, நேரடியாகக் கேள்விகளுக்கே வருகிறேன்: அன்னா அவர்களின் தனிப்பட்ட நேர்மை பற்றி எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. அன்னாவின் நோக்கத்தின் மீதும் எனக்கு எந்த ஒரு கேள்வியும் இல்லை. அவர் பின்பற்றும் அஹிம்சையையும் பரிபூரணமாக மதிக்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, லோக்பால் மூலமாக என்ன சாதிக்கப் போகிறோம் என்பதுதான். ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் ஊழல் செய்பவர்களுக்கு வெண்சாமரமா வீச சொல்கிறது?. அவைகள் தோற்று போவதற்குக் காரணம் என்ன?. மேலும் அந்தக் குழுவில் இப்போதைக்கு அண்ணாவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19914

அண்ணா, இன்றைய பேச்சுவார்த்தைகள்

ஜெ, இன்று லோக்பால் சம்பந்தமான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலே என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அருண் அருண், எற்கனவே நான் சொல்லிவந்ததுதான். எதற்காக இப்படி ஒரு மக்களியக்கம் தேவையாகிறது? இந்திய பாரளுமன்ற ஜனநாயக அமைப்பே ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றை ஒன்று கண்காணிப்பதையும் கட்டுப்படுத்துவதையும்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது இன்று விசித்திரமான ஒரு நிலை. ஊழலில் சிக்கியுள்ள ஆளும்கட்சி ஊழலில் சிக்கிய முக்கிய எதிர்க்கட்சியை சகாவாகப் பார்க்கிறது. இருதரப்பும் ரகசியமாக ஒத்துப்போய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20091

அண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்

நான் இந்த உரையாடல்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தேன் இங்கு சில அடிப்படையான கேள்விகளை எழுப்பி அதன் பதில்களைக் கொடுத்து இருக்கிறேன். இது,இங்கு எழுப்பப்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்ற ஒரு நம்பிக்கையுடன். கேள்வி 1: ஊழல் என்பதோ அதற்குப் போராடுவதோ ஒன்றும் புதிய செய்தி கிடையாது,அப்படி இருக்கும் போது இப்போது அன்னாவிற்கு மட்டும் எப்படி இவ்வளவு ஆதரவு? எனது பதில்: இதற்கு முன்பு நடந்த எல்லாருக்கும் தெரிந்த போபோர்ஸ் ஊழலை எடுத்துக் கொண்டால், அதை நடத்தியது அரசியல் கட்சிகள் அதற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20001

அண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்

இவர்கள் சொல்கிற ஜன்லோக்பால் உண்மையிலேயே சக்தி வாய்ந்ததுதானா?அது பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு கடுமதிகாரசக்தியாக உருவெடுக்கும் என சிலரின் ஐயத்தில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.குறுக்குவழியில் புதிய தலைவீங்கி தலைவர்கள், தலைவலிகளை உருவாக்கும் அமைப்பாக இது மாறிவிடாதா? போகன் அன்புள்ள போகன் இதே கேள்வியை எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் சந்தித்திருக்கிறேன். முக்கியமாக எண்பதுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த மக்களியக்கங்கள் உருவாகி வந்தபோது இந்தக் கேள்வி இப்படியே கேட்கப்பட்டது. ‘இந்த அமைப்புகளை நடத்தும் குழுக்கள் அரசு நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மேல் அதிகாரம்செலுத்தும் தனியார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19989

அண்ணா ஹசாரேவின் அரசியல்

ஜெ, இந்து இயக்கங்கள்தான் அண்ணா ஹசாரே பின்னால் இருக்கின்றன என்பதுதான் அவர் மீது சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்? சிவமணி,சென்னை அன்புள்ள சிவமணி, லோக்பால் மசோதாவுக்கான இந்தப் போராட்டத்தை கூர்ந்து பார்த்தால் அரசியல் கணக்குகள் எளிதில் மாறிக்கொண்டிருப்பதைக் காணலாம். எல்லா அரசியல்கட்சிகளும் இதில் தள்ளாடும் நிலையையே கொண்டிருக்கின்றன. அது புரிந்துகொள்ளக்கூடியதே. அண்ணா ஹசாரே போராட்டத்தை ஆரம்பித்தபோது காங்கிரஸ் அஞ்சியது. அந்தபோராட்டம் காங்கிரஸை ஊழல் அரசாக மக்கள் மத்தியில் சித்தரிக்குமென நினைத்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19973

அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அன்புள்ள ஜெயமோகனுக்கு, திரும்ப திரும்ப அன்னாவைப் பற்றி உங்களிடம் கேள்விகள் வருவதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அநேகமாக உங்களுக்கும்? :). இப்போதைக்கு காந்தியை பற்றி தெரிந்து கொள்ள, இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம பரவலாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்றே நினைக்கிறன். ஆகவே கோபப்படாமல் மேலும் ஒரு சில கேள்விகளுக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். (உண்மையிலேயே உங்கள் கோபம மட்டும்தான் என்னை பயமுறுத்துகிறது அதுவும் எழுத்து மூலமாக மட்டும்!! நேரில் எப்படியோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19896

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

அன்புள்ள ஜெ, அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள். ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19834

அண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்

வணக்கம், உங்களது ப்ளாக் சிறிது நாட்களாக படித்துவருகிறேன். எனது தாய் மொழி தமிழ் ஆகினும், படித்தது K .V இல். இதை பெருமைக்காக சொல்ல வில்லை. பிழை இருந்தால் மன்னிக்க கோரி சொல்கிறேன். உங்களது தெள்ள தெளிவான சிந்தனை அற்புதம். அதை தமிழில் படிக்கையில் ஒரு படி மேலே. விஷயத்துக்கு வருக்கிறேன். அண்ணா ஹஜாரே பற்றிய உங்களது சமீபத்திய கடிதம் ஒரு நெத்தியடி. எனக்கு. பல நாட்களாக யோசித்தும் அண்ணாவின் இந்த போராட்டத்தை முழுமையாக சப்போர்ட் செய்ய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19891

Older posts «