Tag Archive: ஊர்புகுதல்

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், கடந்த பல வருடங்களாகவே கேட்கப்பட்டு வந்த கேள்விதான். புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே வருகிறதே. நல்ல வாசகர்கள் கூட நேரமின்மையாலும் பிற ஊடகங்களினாலும் வாசிக்கும் அளவு மிகவும் குறைந்து விட்டது. இங்கிருந்து எழுத்து எங்கு செல்லும்? எப்போதாவது தெரிந்தவர் வீட்டிற்கு வந்தால் அவர் கேட்கும் கேள்வி, ‘ஓ இதற்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கிறதா?’ அது ஒரு எரிச்சலூட்டும் கேள்வி. சென்ற புத்தக கண்காட்சியின் போது (சென்னை) கையில் 1000 ரூபாய் வைத்திருந்தேன். உள்ளே நிழைந்தவுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8357/

ஊர்புகுதல் 3

3 [சில காரணங்களால் ஊர்புகுதலின் மூன்றாவது பகுதியை வெளியிடமுடியாமலாகியது. அந்த பகுதி எழுத்துரு சீர்கெட்டுவிட்டது. அதை இப்போதுதான் மீட்க முடிந்தது] ஒரு நாளுக்குள் தன் கண்கள் பச்சைக்கு எத்தனை பழகிவிட்டன என்று அனும ரெட்டி எண்ணிக் கொண்டான். பச்சையின் ஆயிரம் நிறங்களாகவே நாஞ்சில்நாட்டில் மண் தென்படுகிறது. அடியிலைகளின் மாவுப்பச்சை, மேலிலைகளின் நரம்போடிய பளபளப்புடன் கடும்பச்சை, வெயில்பட்டுக் கன்றும்போது நீலம்கலந்த பச்சை, தண்டுகளின் புழுப்பச்சை, குருத்துகளின் கிளிப்பச்சை, தளிர்களின் செம்பச்சை, பழுத்திலைகளின் மஞ்சள்பச்சை… எத்தனை பச்சைகள். நிறங்களை யாராவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8215/

ஊர்புகுதல் – 2

இரண்டு நாயர்கள் வண்டியைச்சுற்றி முன்னும் பின்னும் சென்றபடி கமுகுத்தடி பிளந்துசெய்த வாரிக்குந்தங்களை தாளத்துடன் தரையில் குத்தி பாடியபடி நடந்தனர். முன்னால் நடந்த சற்று முதிய நாயர் நல்ல தெளிவான குரலில் பாட பிறர் அதை கலைசலாக ஏற்றுப் பாடினார்கள். ‘பறைச்சி பெற்ற பந்திருகுலமல்லோ- அம்ம பறைச்சியப்பெற்றது நிந்திருவடி. பறைச்சிமுல குடிச்ச மக்களில்- அம்ம பாக்கனாரல்லோ நின்றமூப்பன்! ஆரல்வாய்மொழி கோட்டைக்கு அப்பால் வண்டித்தடத்துக்கு இருபுறமும் பனையோலை வேய்ந்த உயரமில்லாத காவல்வீடுகள் ஒன்றுடனொன்று செறிந்திருக்க நடுவே மேடுமீது சர்வாதிக்கார் தங்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8047/

ஊர்புகுதல் 1

முனிஞ்சிப்பட்டி- மூலைக்கரைப்பட்டி வகையறா அனும ரெட்டியும் நரசிம்மலு ரெட்டியும் ஆனிமாத வியாபாரத்துக்கு பட்டும் கடைச்சரக்கும் ஏற்றிய இரட்டைக்காளை வண்டியுடன் ஆரைவாய்மொழிச் சுரம் தாண்டி கோட்டைமுகத்துக்கு வந்துசேர்ந்தபோது பொழுது விடிந்து மண்தரையில் பாதச்சுவடு தெரிய ஆரம்பித்திருந்தது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8044/