பகுதி மூன்று : முதல்நடம் – 2 மணிபுரத்தின் எல்லைக்குள் நுழையும்போது அர்ஜுனன் ஃபால்குனை என்னும் பெண்ணாக இருந்தான். மலைகளினூடாக செய்யும் பயணத்தில் ஆண் என்றும் பெண் என்றும் உருவெடுக்கும் கலையை கற்று மிகத் தேர்ந்திருந்தான். உருமாறும் கலை என்பது வண்ணங்களோ வடிவங்களோ மாறுவதல்ல, அசைவுகள் மாறுவதே என அறிந்திருந்தான். விழிதொடும் முதல்அசைவு ஆண் என்றோ பெண் என்றோ நல்லவர் என்றோ தீயவர் என்றோ தம்மவர் என்றோ அயலவர் என்றோ சித்தத்திற்கு காட்டவேண்டும். அவ்வெண்ணத்தையே பார்ப்பவரின் சித்தம், …
Tag Archive: ஊர்ணர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/79184
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 15
பகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 5 ] பீஷ்மரை சந்தித்து இரவில் திரும்பியபின் சகுனி துயிலவில்லை. தன் அரண்மனை உப்பரிகையில் நின்றபடி இரவையே நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்கள் செறிந்த பாலைவன வானம் கருங்கல்லால் ஆனதுபோலத் தெரிந்தது. வடக்கே நெடுந்தொலைவில் தனித்த ஓநாய் ஒன்று அடிவயிற்றை எக்கி எழுப்பிய ஊளை மெலிதாகக் கேட்டு மறைந்தது. அந்த ஓநாயை மிக அருகே, கண்ணுக்குக் கண் நெருங்கி, பார்ப்பதுபோல சகுனி உணர்ந்தான். அது தன்னையும் அறிந்துகொள்ளும் என்று தோன்றியது. அதற்கு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/46068