Tag Archive: ஊமைச்செந்நாய்

ஊமைச்செந்நாய்- கடிதம்

  ஊமைச்செந்நாய்– 1 ஊமைச்செந்நாய் -2 ஊமைச்செந்நாய் -3 தங்களின் ஊமைசெந்நாய் குறுநாவலை வாசித்தேன்.குறுநாவல்  செம்மையாய் இருந்தது.நாவலின் தொடக்கமே, “யானை துப்பாக்கி” என ஆரம்பிக்க மொத்த நாவலுமே துப்பாக்கியும் யானையும் தான் ஆக்கிரமிக்க போகிறது என வாசகனுக்கு முன்னறிவிப்பு அளிக்கிறீர்கள்.   கதையின் நாயகனை ஊமைசெந்நாய் என உருவகப்படுத்த அவன் ஒரிரு இடங்களில் மட்டுமே பேசுவது, சிங்கத்தின் வேட்டை மிச்சத்தை செந்நாய் தின்பது போல்,துரையின் எச்ச உணவுகளை தின்பது நிகழ்த்தி காட்டியுள்ளீர்கள்.   நாவலில் பெண் பாத்திரமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122003

ஊமைச்செந்நாய் மலையாளத்தில்…

  ஒவ்வொரு ஆண்டும் மலையாள இலக்கிய இதழான பாஷாபோஷிணியில் மட்டும்தான் நான் மலையாளத்தில் எழுதுகிறேன். முந்தைய ஆண்டுகளில் அறம், வணங்கான், நூறுநாற்காலிகள், யானை டாக்டர் ஆகியவை மலையாளத்தில் வெளிவந்தன. நூறுநாற்காலிகள் , யானை டாக்டர் ஆகியவை சிறிய நாவல்கள் என்று தனிநூல்களாக அங்கே வெளியாயின. அவற்றுக்கு பதிப்புரிமை இல்லை என்பதனால் ஒரேசமயம் பத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டன. ஒவ்வொன்றும் மூன்று லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றுள்ளன. சென்ற ஆண்டு ஊமைச்செந்நாய் சிறுகதையை பாஷாபோஷிணியில் எழுதினேன். இப்போது அது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118522

ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நலம் தானே. உங்களுக்கு ஒரு வாசக கடிதம் எழுதச்சொல்லி என்னை பல முறை வற்புறுத்தியவர் வானவன் மாதேவி அக்கா, எனக்கு தான் உங்களிடம் எழுதுவதில் ஒரு தயக்கம் அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த வாசக கடிதத்தை எழுதுகிறேன். இனி நான் எழுத இருப்பதில் ஏதேனும் இலக்கண, இலக்கிய பிழை இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள். “ஊமைச்செந்நாய்” உங்கள் கதைகளின் தலைப்பே என்னை எப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96102

சாகசம் எனும் தியானம்

      என்னிடம் வரும் புதியவாசகர்களில் கணிசமானவர்கள் அவர்கள் என் புனைவுலகுக்குள் நுழைந்தது ஊமைச்செந்நாய் என்னும் கதைவழியாக என்று சொல்வதுண்டு. இணையத்தில் அக்கதை வெளியானது. ஆகவே தொடுப்புக்கள் வழியாக அதை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள முடிந்தது. இலக்கியமறியாத வாசகர்களையும் அது சென்றடைந்தது அத்துடன் அது ஒரு பொதுவாசகன் உத்வேகமிக்க கதையாக வாசிக்க உகந்த படைப்பு. இலக்கியவாசகன் அதன் நுண்பிரதிகளைத்தேடிக் கண்டடையமுடியும். பொதுவாசகன் தேடும் மாறுபட்ட கதைக்களம், மிகுபுனைவுத்தன்மை, சாகசம் ஆகியவையும் உச்சகட்டப்புள்ளியும் கொண்டது. சாகசம் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85049

கதைகளின் வழி

அன்பின் ஜெயமோகன். வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு ஏழாம் உலகம், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம் என நாவல்கள். சமீபத்தில் எழுதப்பட்ட அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே வருத்தம் உண்டு. ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21353

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software  துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl  Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James  Rollins  ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21252

ஆழ்துயில்நடனம்

ஊமைச்செந்நாய் கதை பற்றி எனக்கு வந்த ஒரு கடிதம் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டது ‘ஊமைச்செந்நாய் கதையில் வெள்ளைக்காரன் பேசும் ஆங்கிலம்கூட சரியாக இருந்தது’ என்றது அது.. ‘வெள்ளையர் அக்காலகட்டத்தில் பேசிய சில வசைச்சொல்லாட்சிகள் நம்முடைய கிராமத்து மக்களின் நினைவில் கூட உள்ளன. அவை இந்திய ஆங்கிலமாகவே நிலைத்துவிட்டன. உதாரணம் கண்ட்ரி புரூட். அத்தகைய சொல்லாட்சிகளை அந்த வெள்ளையன் வாயில் இருந்து கேட்டபோது நீங்கள் எதையெல்லாம் ஆய்வுசெய்திருக்கிறீர்கள் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது’ இம்முறை எனக்கு ஆச்சரியம். ஏனென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37204

ஊமைச்செந்நாய் (சிறுகதைத்தொகுப்பு)

ஊமைச்செந்நாய் சிறுகதைக்கான இணைப்பு    பகுதி 1 பகுதி 2 பகுதி 3

Permanent link to this article: https://www.jeyamohan.in/27953

ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்

அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில் அடங்கும் விதமாக பல துறைகளிலும் எழுதினார். தரமாகவும், வேகமாகவும். அவருடைய வசனம் ஒன்றுண்டு. ‘நான் என்னுடைய தட்டச்சில் அடுத்து என்ன வசனம் தோன்றுகிறது என்பதைப் பார்ப்பதற்காகவே முக்கியமாக எழுதுகிறேன்.’ அவருக்கே அவர் என்ன எழுதப்போகிறார் என்பது தெரியாது. அவர் படைப்பதில்லை, படைப்பின் பின்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27808

ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்

அன்பின் ஜெயமோகன், நான் பா.சரவணன் – ஒரு மென்பொருள் பொறியாளன். கடந்த 4 வருடமாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். தங்களின் அரசியல் என்றும் எனக்கு ஏற்பானது அல்ல என்றாலும், ஒரு உச்சகட்ட கலை வெளிப்பாடு கொண்ட உங்கள் புனைவுகள் மற்றும் அபுனைவுகளில் ஒரு வாசகனாய் மனஎழுச்சி கண்டிருக்கிறேன். அநேகமாக 2007 -இல் இருந்து தொடர்ந்து வாசிப்பதில், உங்கள் எழுத்துகள் வாசிப்புக்கு நேர்மையாய் இருந்துள்ளன(நேர்மறையாகவோ/ எதிர்மறையாகவோ). தங்களின் இயற்கை குறித்த பதிவுகள் எனக்குள் பல திறப்புகளை ஏற்படுத்தி உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22354

Older posts «