Tag Archive: ஊட்டி முகாம் 2012

ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்

உதகை நித்யா ஆய்வரங்கத்தில் பங்கேற்றது குறித்த பதிவு – ஒத்திசைவு ராமசாமி     ’’ஹ்ம்ம்… இருபதாண்டுகளுக்குப் பின் நான் செல்லவிருந்த ஒரு ‘இலக்கியக்’ கூட்டமிது. இருப்பினும் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ‘அந்தக்கால இலக்கியக்கூட்ட நினைவுகளினால்’ ஒரு அடிவயிற்றில் கலவரநிலையுடன் தான் அங்குபோனேன். அங்கு எனக்கு இரண்டு முக்கியமான ஆச்சரியங்கள்: ஒன்று, கூடியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாக இருந்தது; இரண்டு, சில பெண்களும் வந்திருந்தது. … எப்படி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் (அதுவும் நமது பெரும்பாலும் குமட்டுதலுக்குரிய ’கூட்டக்கலாச்சாரப்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27982/

ஊட்டி முகாம்-எம்.ஏ.சுசீலா

தற்போது தில்லியில் இருப்பதால் விஷ்ணுபுர வட்டம் நடத்தும் காவிய முகாம்களிலும்,இலக்கிய அமர்வுகளிலும் அதன் சார்பில் நடத்தப்படும் விருது விழாக்களிலும் எப்போதும் தவறாமல் கலந்து கொள்வது எனக்குச் சாத்தியமாவதில்லை. இவ்வாண்டில் ஏதோ ஒரு சூழல் எனக்குச் சாதகமாக அமைய,25,26,27 ஆகிய மூன்று நாட்களும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் நிகழ்ந்த இலக்கிய முகாமில் பங்கேற்க முடிந்தது பெரும் மன நிறைவை அளித்திருக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/27732/

ஊட்டிமுகாம்-பதிவுகள்

ஊட்டி முகாம் பற்றிய நண்பர்களின் கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. முகாமைப்பற்றி சொல்லப்பட்ட முக்கியமான கருத்தே அங்கே எப்படி இயல்பாகவும் சுதந்திரமாகவும் உணர்ந்தோம் என்பதே. பெரும்பாலான முகாம்கள் டாஸ்மாக் கடையில் சிலமணிநேரங்களைச் செலவிட்டுவிட்டு வந்ததுபோலத்தான் இருக்கும் என்றார் ஒரு நண்பர். ஆர்வத்துடன் கிளம்பிச்சென்றபின் ஏனடா வந்தோம் என நொந்துகொண்டே திரும்பும்படியாக இருக்கும் என்றார். எங்கள் அரங்கைப்போல பெண்கள் சகஜமாக உணர்ந்ததன் இன்னொரு அரங்கைப் பார்த்ததில்லை என்று ஒரு நண்பர் கூறினார். பெரும்பாலான தமிழிலக்கியக் கூடல்களில் பெண்களுக்கு ஒரு பதற்றம் இருந்துகொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27719/

புதுமைப்பித்தனின் மரணங்கள் – ராஜகோபாலன்

நண்பர்களே! 1900க்குப் பின்னர் உருவாகி வந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளில் அதிகமும் பேசப்பட்ட இருவராக பாரதியையும், புதுமைப்பித்தனையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக தமிழின் சிறுபத்திரிகைக் குழுக்களின் சொல்லாடல்கள் மூலமாக மீண்டும் பிறந்து வந்தவர் புதுமைப்பித்தன். தமிழிலக்கியத்தின் புதுயுக எழுத்தாளர்களின் முன்னனோடிகளில் ஒருவரான அவரது எழுத்துக்கள் மீது விமர்சனங்களும், வாசிப்புகளும் உள்ளன. இந்தக் கலந்துரையாடல் புதுமைப்பித்தனின் படைப்புகளை திறனாய்வு நோக்கிலோ, விமரிசகனின் பார்வையிலோ முன்வைக்க முற்படவில்லை. ஒரு வாசகனாக புதுமைப்பித்தனின் படைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி மட்டுமே பேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27656/

ஊட்டி முகாம் 2012 – பகுதி 3

மாலையில் ஜடாயு லா.ச.ராமாமிருதம் பற்றிப் பேசினார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பு என்பது அவர் உருவாக்கும் அகவயமான நடை. அது பலகாலமாக தமிழ்வாசகர்களை போதையாக கட்டிப்போட்டிருக்கிறது. அந்த நடை நனவோடைமுறை என்று திறனாய்வாளர்கள் சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் அதை லா.ச.ரா.வுக்கே உரிய அந்தரங்கமான ஒரு மொழி என்று சொல்வதே சரியாக இருக்கும் என்றார் ஜடாயு. அவரது மந்திர உச்சாடனம் போன்றது என்றார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பாக ஜடாயு சுட்டிக்காட்டியது அவரது எழுத்துக்களில் உள்ள தீவிரமான ஆன்மீகத்தேடலை. பெண்ணை அழகாகவும் அழகை அம்பாளாகவும் உருவகித்துக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27678/

லா.ச.ரா: ஜடாயு கட்டுரை

அன்புள்ள ஜெ, நான் ஊட்டி முகாமில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்: அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1 அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2 அன்புடன், ஜடாயு

Permanent link to this article: https://www.jeyamohan.in/27694/

ஊட்டி – ஒரு பதிவு

முகாமில் நடந்த அனைத்தையும் எழுத்தில் கொண்டுவருவது எனக்குக் கடினமான விஷயம். நான் இங்கு எழுதியுள்ளதை விடப் பன்மடங்கு சிறப்புமிக்க ஒன்றாக முகாம் இருந்தது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன் கோபி ராமமூர்த்தி பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/27647/

ஊட்டி 2012 – புகைப்படத் தொகுப்பு

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – குரு நித்யா ஆய்வரங்கம் ஊட்டி 2012 நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு     ஊட்டி 2012 படங்கள் ஜடாயு

Permanent link to this article: https://www.jeyamohan.in/27587/