Tag Archive: ஊட்டி சந்திப்பு

விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013

ஒவ்வொரு வருடமும் ஊட்டி குருகுலத்தில் நடைபெற்று வந்த விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் இந்த முறை ஏற்காட்டில் நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் 28,29 & 30 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கம் போல் கம்ப ராமாயண அமர்வுகள் திரு.நாஞ்சில் நாடன் அவர்களால் நடத்தப்படும். மற்ற அமர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும். இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்த பழங்கால மாளிகை ஒன்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாசகிகள் தங்குவதற்குத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36442

ஊட்டி முகாம் 2012 – பகுதி 1

ஊட்டியில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நடந்த குருநித்யா ஆய்வரங்கத்துக்கு நான் சென்றுசேரும்போது அது ஏற்கனவே கால்வாசி முடிந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். நிகழ்ச்சி 25 ஆம் தேதி காலையில்தான். ஆனால் தேவதேவன் உள்ளிட்ட பல நண்பர்கள் 24 ஆம் தேதியே வந்துவிட்டார்கள். நான் ஊரிலிருந்து கிளம்பும்போது கிருஷ்ணனை அழைத்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ‘தேவதேவன்கிட்ட சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு வாக்கிங் போறோம்…டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ என்று சொல்லிவிட்டார். நான் உண்மையில் பலவேலைகளில் சிக்கி முன்பதிவு செய்ய மறந்துவிட்டேன். அவசரமாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27579

ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை – கடலூர் சீனு

6-9-2010 இனிய ஜெ.எம்., ஊட்டி சந்திப்பு முடியும்போது, இந்த மாதமத்தியில் நீங்கள் மலேசியா போகப்போவதாக சொன்னீர்கள். இக்கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் நீங்கள் மலேசியாவில் இருக்கக்கூடும். (தலைநகர் பினாங்குதானே?) ஊட்டி உலாவின்போது இயற்கையைப் பருகும் எளிய வழி ஒன்றை சொல்லித் தந்தீர்கள். அப்போது நான் கண்ட காட்சி ஓர் இலை கூட மாறாத துல்லியத்துடன் நேற்று இரவு என் கனவில் மீண்டது. ஊட்டி தினங்கள் முழுக்க முழுக்க எனக்கேயான தினங்கள் என இப்போது உணர்கிறேன். இந்திய சிந்தனை மரபுகளின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23183