Tag Archive: ஊட்டி

புதியவாசகர் சந்திப்புகள்,ஊட்டி,ஈரோடு -அறிவிப்பு

  அன்புள்ள நண்பர்களுக்கு புதியவாசகர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சிகளை முழுமைசெய்துவிட்டோம். இரு நிகழ்ச்சிகள். ஊட்டி, ஈரோடு ஊட்டி முதலில் கடிதம்போட்டவர்களுக்கான நிகழ்ச்சி ஊட்டியில் பிப்ரவரி 13, 14 [சனி ஞாயிறு] நாட்களில் நிகழும். சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன் முடிவடையும். இடம் நாராயணகுருகுலம் ஃபெர்ன் ஹில் மஞ்சணகொரே கிராமம் ஊட்டி தொடர்புக்கு நிர்மால்யா, 09486928998 விஜய்சூரியன் 9965846999 [ஊட்டியில் குளிர் இருக்குமென்பதனால் ஸ்வெட்டர் மப்ளர் போன்றவை கொண்டுவரவும். போர்வை, மெத்தை, ஹீட்டர் நாங்கள் ஏற்பாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83339

ஊட்டி ,பதிவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு குடும்ப திருமண விழாவிற்க்கு 3 நாள் சென்று வந்த அனுபவம்.. மனதிற்கு பிடித்த, மனதிற்கு மிக அண்மையில் உள்ள ஒரு உலகத்தில் 3 நாள் கழித்த அனுபவத்தை தந்தது ஊட்டி முகாம்.. மிக சிறப்பாக அமைந்திருந்தது… விஜயராகவனுக்கும், மற்ற அனைத்து அமைப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்.. ஜடாயு ஜெகெ எழுத்தின் பொது இயல்புகளை முன்வைத்து அளித்த பேச்சில் ஆரம்பித்து 3 நாட்கள் சென்றதே தெரியவில்லை…முதல் முறையாக ஜடாயு உரை கேட்கிறேன்.. மிக சிறப்பாகவும் உணர்ச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75631

ஊட்டி நண்பர்கள் வருகை

இனிய ஜெயம், ஊட்டி முகாம் பதிவுகள் கண்டேன். அதென்ன பள்ளிப் பிள்ளைகள் பள்ளிக்கு டிமிக்கி கொடுத்தால் அவர்கள் பெயரை கரும் பலகையில் எழுதி வைப்பதைப் போல எனது, ஜாஜா, மற்றும் பிரசாத் பெயர்களை எழுதி ஒட்டி விட்டீர்கள்? பிரசாத் , ஜாஜா, சுனில் இவர்கள் அனைவரும் இல்லறமல்லது [அல்லாதது] நல்லறம் அன்று என்று கண்டு அமைந்து விட்டார்கள் என நினைக்கிறேன். சேலம் சதீஷ் [ஆச்சர்யம்] தம்பதி சமேதராக புகைப்படத்தில் கண்டேன். [மகா ஆச்சர்யம்] சிரித்துக் கொண்டு வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75504

ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2

நாஞ்சில் அண்ணாச்சியையும் கவிஞர் தேவதேவனையும் நான் காண்பது இதுவே முதல் முறை.நாஞ்சிலார் எழுத்துக்களில் நதியின் பிழை – கட்டுரை தொகுப்பும் ,இணையத்தில் உள்ள சில கதைகள் மட்டுமே வாசித்ததால் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டு பேசக் கொஞ்சம் தயங்கினேன் .இறுதி நாளில் அவருடனான கேள்வி பதில் அவர் பழகுவதற்கு எத்தனை எளிமையான மனிதர் என்பதை உணர்த்தியது. அதன் பின்பே அவரோடு தயக்கமின்றிப் பேச முடிந்தது.தேவதேவன் – கவிஞனுக்கே உரித்தான அமைதியுடன் இருந்தார்.கிளம்பும் முன் அவர் விற்காமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17253

ஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு

ஆனந்தம் அடைந்தேன் உலகத்தை மறந்தேன் – இது சுவாமி ராஜீவ்  கிருஷ்ணா நிகழ்த்திய  கதகளி ஆட்டத்தில் ஒலித்த  முதல் வரி .இதுவே இந்த மூன்று நாள் ஊட்டி காவிய முகாமுக்குப் பிறகு எனக்கு இருக்கும் மன நிலையாகும் . ஊட்டி பற்றிய அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் அரங்கர் குழுவில் வெளியிட்ட உடனே ,அதாவது ஒரு பத்து நிமிஷத்திலயே உச்ச கட்ட ஆர்வத்தோடு பெயர்கொடுத்த ஆர்வக் கோளாறுகளில் ஒருவன் நான்.  வீட்டில் இலக்கியக் கூட்டம்  ,காவியக் கூட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17252

ஊட்டி காவிய முகாம் (2011) – 1

கம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது. இங்கே சில புகைப்படங்கள். உரைகளின் ஒலிவடிவம் விரைவில் வெளியாகும் முகாம் அரங்கு மாலை நடை மாலை நடை நாஞ்சில் நாடன் கம்பராமாயண உரை கவிஞர் தேவதேவன் உணவு இடைவேளையில் ஒரு உரையாடல் ஜெயமோகன் ஊட்டி காவியமுகாம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/17069