Tag Archive: உலூபி

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13

வடகாட்டில் நாகர்களின் சிற்றூரான ஐராவதீகம் பிறர் அணுகமுடியாததாகவே இருந்தது. அவ்வண்ணம் ஓர் ஊர் இருப்பதை கதைகள் மீண்டும் மீண்டும் கூறின. மாபெரும் புற்றுகளே வீடுகளென அமைந்த நகரம். மூன்று முகம் கொண்டு எழுந்து நின்றிருந்த மலைமுடிக்கு அப்பால், அதன் ஆறுவிழிகளின் நோக்கால் ஆளப்படும் நிலம். அங்கிருந்து ஊர்களுக்குள் வரும் நாகர்கள் அரவுநஞ்சு கொண்டுவந்து விற்பவர்களாகவும் ஊருக்குள் புகும் அரவுகளை பிடித்துச்செல்பவர்களாகவும்தான் சூழ்ந்திருந்த யாதவர்களால் அறியப்பட்டார்கள். நாகநஞ்சு அருமருந்து என மருத்துவர்களால் சொல்லப்பட்டது. நாகக் கடி ஏற்று நினைவழிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116834

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22

பகுதி மூன்று : முதல்நடம் – 5 ஊர்த்தலைவர் மாளிகையின் முகப்பில் நின்ற காவலர்கள் ஃபால்குனையைப் பார்த்ததும் அஞ்சி தலை வணங்கி வழி விட்டனர். அவர்கள் அனைவரின் விழிகளும் மாறிவிட்டிருந்தன. தன் தோளிலிருந்து வில்லையும் அம்பறாத்தூணியையும் கழற்றி அவர்கள் முன் வைத்துவிட்டு அவள் படியேறி மேலே சென்றாள். படைத்தலைவர் வணங்கி “இவர் ஊர்த்தலைவர் சத்ரர்” என்றார். தலையில் அணிந்த பெரிய அணிச்சுருளில் செங்கழுகு இறகு சூடிய ஊர்த்தலைவர் வணங்கி “குருதிப்பெருக்கு இன்னமும் நிற்கவில்லை. பெரும் காயம்” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79257

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18

பகுதி 3 : முதல்நடம் – 1 “கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள் என்று முதுசூதர் பிருஹத்வர் எழுதிய காவியமாகிய ப்ரஸ்ன சம்ப்ரதீகம் சொல்கிறது” என்றாள் மாலினி. “ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும் பின்பும் மட்டுமே அவள் இருப்பை உணர முடியும்.” சுபகை முடிந்த கதையின் மீட்டலில் இருந்து மெல்லிய உடலசைவு வழியாக மீண்டாள். “முதற்சொல் எழுகையிலேயே அவள் கதைகளுக்குள் புகுந்து கொள்கிறாள். கதைகளின் ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும் ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் அவள் இருக்கிறாள். நீள்மூச்சுகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79173

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17

பகுதி இரண்டு : அலையுலகு – 9 ஐராவதீகம் இருண்டு நிழலுருவக் கூம்புப்புற்றுக்களாக தெரிந்தது. மஞ்சள்நிற ஒளி எழுந்த அவற்றின் வாய்வட்டங்கள் இருளுக்குள் மிதக்கும் பொற்தாலங்கள் போல் நின்றன. “எங்கள் மூதாதையர்கள் இங்கு வரும்போது இவ்வில்லங்களில் மாநாகங்கள் வாழ்ந்திருந்தன. மூதாதையருக்கும் அவர்களுக்குமான ஆயிரம் ஆண்டு சமரில் நாங்கள் வென்றோம். இங்கு திரும்பி வருவதில்லை என்று மண்தொட்டு மும்முறை ஆணையிட்டு காட்டைக் கடந்து மலைக்குகைகளின் ஊடாகச் சென்று உள்ளே விரிந்த ஆயிரம் கிளைகொண்ட பிலத்தில் வாழத் தொடங்கினர்” என்றார் கர்க்கர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79132

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16

பகுதி இரண்டு : அலையுலகு – 8 மூன்று நாகர் குல முதியவர்கள் நாகபட முனை கொண்ட நீண்ட குலக்கோல்களுடன் முன்னால் வந்து அர்ஜுனனை கைபற்றி எழுப்பினர். ஒருவர் திரும்பி இரு கைகளையும் விரித்து கூட்டத்தை நோக்க நாகர்களின் சீறல் மொழியில் வாழ்த்தொலிகள் எழுந்தன. பெருமுரசம் மலை பேசத்தொடங்கியது போல முழங்கியது. குறுமுழவுகள் துடித்து பொங்கி யானைக்கு சுற்றும் துள்ளும் மான்கள் என அதனுடன் இணைந்து கொண்டன. அர்ஜுனனை கைபற்றி அழைத்துச் சென்று கௌரவ்யரின் முன்னால் நிறுத்தினர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79105

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 14

பகுதி இரண்டு : அலையுலகு – 6 இளவெயில் பூத்து இலைகளிலிருந்து சொட்டத் தொடங்கிய காலை. நாணம் கொண்டதென பசுமையில் மறைந்து எழுந்து உடல் வளைத்து சென்ற சிறு காலடிப்பாதையில் இருவரும் நடந்தனர். உலூபி அவன் வலக்கையை தன் இடக்கையால் வளைத்துப் பற்றி, விரல்களைக் கோத்து தன் முலை நடுவே வைத்து அழுத்தி கூந்தல் அவன் தோள்களில் சரிய தலைசாய்த்து உடன் நடந்துவந்தாள். அவர்களின் காலடியோசையை ஒலித்தது காடு. அவர்களைக் கண்டு எழுந்த பறவைகளின் ஒலியால் உவகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79034

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 13

பகுதி இரண்டு : அலையுலகு – 5 அணுகும்தோறும் விரிந்து வட்டச்சுழல் பாதையில் பெருவிசையுடன் சுழற்றி தன்னை உள்ளிழுத்த அக்கரிய பெருந்துளை ஒரு வாய் என அர்ஜுனன் எண்ணினான். அங்கு சென்றவை அனைத்தும் முடிவற்ற நீள் கோடென இழுபட்டன. அதன் நடுவே இறுகிச் செறிந்து ஒளியென்றே ஆன இருட்டு முனை கொண்டிருந்தது. மாமலைகளை அணுவென ஆக்கி தன்னுள் ஆழ்த்திக் கொண்டிருந்தது. ஒரு கணமோ நூறு கோடி யுகங்களோ என மயங்கும் காலம் அங்கே புல் நுனிப் பனித்துளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78997

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12

பகுதி இரண்டு : அலையுலகு – 4 அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது. அங்கே மறுவிசும்பெனப் பரவிய வேறு படுகையில் உடல் சுற்றி தொங்கி நெளிந்தாடின முதல் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் பற்றி நெளிந்தன இரண்டாம் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் கவ்விச் சுற்றி மூன்றாம் உலகு நெளிந்தது. ஒன்றிலிருந்து ஒன்றென தொங்கிச்சென்ற அடுக்கில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78979

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11

பகுதி இரண்டு : அலையுலகு – 3 ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை. எனவே கால் வழி என ஏதுமின்றி ஐந்து திசைகளையும் நிறைத்த பசுமை பெருகி விரிந்த அலைவெளியென கிடந்தது அது. தழைந்த பெருங்கிளைகளில் ஒன்றில் இருந்து பிறிதுக்கு கால் வைத்து அர்ஜுனன் அக்காட்டுக்குள் சென்றான். காமம் கொண்டு கண்ணயர்ந்த பெண்ணின் தோளிலிழியும் பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78951