Tag Archive: உலக இலக்கியம்

சாக்கியார் முதல் சக்கரியா வரை

 [ 1 ] மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், நீல.பத்மநாபன், ஆ. மாதவன், சுந்தர ராமசாமி, நிர்மால்யா, ஜெயஸ்ரீ, சுரா, சாலன் என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/462

ஓர் எளிய கூழாங்கல்

பதினான்குவருடம் காட்டில் உழன்றாலும் அவன் சக்ரவர்த்தித் திருமகன். இடையர்குடிலில் வளர்ந்தாலும் அவன் யாதவர்களின் மன்னன். அரசு துறந்து சென்றாலும் அவன் சாக்கிய குலத்தரசு. ஆம், மகதி கோசாலனும் வர்த்தமான மகாவீரனும் கூட பிறப்பால் மன்னர்களே. பெரும் ஜனக்ககூட்டங்களை ஆள்வதற்காகவே அவதரித்தவர்கள். கோடிக்கணக்கான மனிதர்கள் நடுவே கூழாங்கல்வெளியில் வைரமென ஒளிவிடுபவர்கள்…  காஜதான் தேவாலயம்,கோவா ஆனால் தச்சன்மகன் எளியவன். அவனை நெரிசலான சாலையில் ஒருவருமே அடையாளம் காணமுடியாமல் போகலாம். அவன் நம் வீட்டுவாசலில் வந்து நின்றானென்றால் நாம் ஒருவேளை அதிருப்தியுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5280

மணல்மேடுகள் நடுவே ஒரு பெண்

பூச்சிஆய்வாளனாகிய ‘நிகி ஜூம்பி ‘ என்ற அந்த இளம் பள்ளி ஆசிரியன் ஒரு நாள் சற்று தள்ளிச் சென்று விடுகிறான் . மணல் குன்றுகள் நிரம்பிய அப்பகுதியில் மென்மணலில் வாழும் ஓர் அபூர்வ வகையான பூச்சியைத் தேடித்தான் அவன் அங்கு செல்கிறான். அது மணலின் மென்மையான சுழிக்குள் ஒளிந்திருக்கும் . சுழியின் விளிம்புக்கு வரும் பூச்சிகள் மணலில் சரிந்து சுழிக்குள் விழுந்து அதனருகே வருகின்றன. சரியும் மணலில் அப்பூச்சிகள் தப்பச் செய்யும் முயற்சிகள் அனைத்துமே வீணாகி விடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/351

பாவ மௌனம்

1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவ ஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/791

டிரினா நதிப் பாலம்

போஸ்னியாவில் துருக்கிய முஸ்லீம்களும் செர்பியக் கிறித்தவர்களும் சேர்ந்து வாழும் விஷகிராத் என்ற சிறிய நகரத்துக்கு அருகே டிரினா என்ற ஆறு வருடம் முழுக்க நீருடன் பாறைகள் நடுவே நுரைத்துச் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. 1516 ல் அந்த ஆற்றைக் கடந்து ஒரு துருக்கிய முஸ்லீம் படை இஸ்தான்புல் நோக்கிச் சென்றது. அவர்கள் ஆற்றுக்கு அப்பாலிருந்த ஸக்கோலோவீஷி என்ற சிறு கிராமத்தைத் தாக்கி அங்கிருந்த செர்பியக் குடும்பத்திலிருந்து ஒரு சிறுவனைப் பிடித்து இஸ்தான்புல்லுக்குக் கொண்டு சென்றார்கள். அவனைப்போன்று பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/362

ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’

லின் காங் கம்யூனிஸ்ட் சீனாவில் ஒரு டாக்டர். கூஸ் கிராமத்தில் வறிய சூழலில் பிறந்து படித்து ராணுவ மருத்துவமனையில் வேலைபார்க்கும் இருக்கும் அவருக்கு இளவயதிலேயே மணமாகிவிடுகிறது. மணமகள் ஷு யு மிக அழகற்றவள். அவளை பெற்றோரின் கட்டயம் காரணமாக திருமணம் செய்துகொள்ளும்படி நிகழ்கிறது. அவரைக் கேட்காமலேயே உறுதிசெய்யப்பட்ட அத்திருமணத்தை அவரால் சீனக் கிராம வாழ்க்கையின் விதிகளின்படி மறுக்க இயலாது. மேலும் அவரது வயதான தாய்தந்தையரையும் பண்ணையையும் பராமரிக்க ஆள் தேவைப்பட்டது. லின் காங்கால் அவளை சற்றும் நேசிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/350

நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை

[ஒன்று] தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீல பத்மநாபனைப் பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் காட்டப் படுவது இல்லை. அவரது படைப்புகள் பேசப்படுவதுமில்லை. அவரைப் பற்றி பொதுவான கருத்தைக் கேட்டால் கணிசமான சம கால வாசகர்கள் அவர் தமிழிலக்கியத்தின் கடந்த காலத்து நினைவுகளில் ஒன்று மட்டுமே என்று சொல்லவும் கூடும். இன்று அவருடைய படைப்புகள், அவரது பாணி ஏதும் அவ்வளவு முக்கியமில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/363

மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன். உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22089

படைப்பாளிகளின் மேற்கோள்கள்

அன்புள்ள ஜெ. உலக இலக்கியங்கள் – மேற்கோள் குறித்து ஒரு கேள்வி. பல விவாதங்களில், திரிகளில் மேற்கத்திய , உலகப்படைப்பாளிகளையும், படைப்புகளையும் மேற்கோள் காட்டி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன.  உதாரணத்திற்கு – தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செக்காவ் மற்றும் பலர். தற்சமயம் உங்கள் தளத்தில் “இலியட்டும் நாமும்” படித்துக்கொண்டிருக்கிறேன். அவை உலக அளவில் பிரபலமைடைந்ததற்கு அதன் தரமும், பரவலாக்கப்பட்ட முயற்சியும் காரணம். ஒரு அற சிந்தனையின், தத்துவ விவாதத்தின், இலக்கிய அறிவின் தேடலில் நமது (நம் படைப்புகளும், தத்துவவாதிகளும்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17747

உலக இலக்கியச்சிமிழ்

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் காசர்கோடு தபால் தந்தி ஊழியர்சங்கத்தின் கம்யூனில் தங்கியிருந்த காலகட்டம் ஒருவகையில் கேரளத்தின் பொற்காலம். சொல்லப்போனால் பொற்காலத்தின் திரைவிழும் காலம் அது. நான் சென்றிறங்கியபோது கண்டது எல்லாருமே ஏதோ வாசிக்கிறார்கள் என்பதுதான். வட கேரளத்தில் அப்போது வேறு பொழுதுபோக்கே கிடையாது. சினிமா மீது பெரிய மோகம் அன்று மலையாளிகளுக்கு இல்லை. சினிமாவைப்பற்றிப் பேசுவது கொஞ்சம் குறைவான செயல் என்ற எண்ணம் சாதாரணமானவர்களிடம்கூட உண்டு. அரசியலும் இலக்கியமும்தான் விருப்பமான விஷயங்கள். அரசியல்கூட அன்றாட அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6223

Older posts «