Tag Archive: உலகம் யாவையும்

உலகம் யாவையும்-கடிதங்கள்

அறம் வாங்க அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   அறம் தொகுப்பில் உள்ள உலகம் யாவையும் கதையை இப்போது தான் வாசித்தேன்.   மறக்கமுடியாத ஒரு அனுபவமாக அது மாறிவிட்டது. முந்திய கடிதத்தில் சில சிறுகதைகளை குறிப்பிட்டிருந்தேன். (யானை டாக்டர், நூறு நாற்காலிகள், ஊமைச் செந்நாய், புலிக்கலைஞன் என) அந்த வரிசையில் இப்போது உலகம் யாவையும்.   இந்திய பயணங்கள் குறித்த தங்களின் எல்லா கட்டுரைகளிலும், இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் சுதந்திரம் குறித்தான களிப்பை கண்டிருக்கிறேன். இச்சிறுகதையின் முடிவிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127882

ஓருலகம்- கடலூர் சீனு

மழை தரும் விண் என் தந்தை, வளம் தரும் மண் என் தாய், நான் இந்த பூமியின் மைந்தன்… [பழம்பாடல் ஒன்று] இனிய ஜெயம், மிக சமீபத்தில் ஒரு சம்பவம். அவர் ஒரு சாமியார் .இல்லறத் துறவி. நான் அத்து அலைந்து கொண்டிருந்தபோது பழக்கமானவர்களில் ஒருவர். புதுவை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவர் அடிக்கடி ஊழ்கத்தில் ஆழ்ந்துபோவார் அந்நிலை சில சமயம் இரு நாள் கூட நீடிக்கும். பெயர் பரவி. சிறு சிவன் கோவில் ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70799

உலகம் யாவையும், சோற்றுக்கணக்கு

அன்பு ஆசிரியருக்கு, நான் சோற்றுக்கணக்கை முதன்முறையாக படித்தது இரண்டு வருடம் முன்பு. அடிக்கடி மீண்டும் படிக்கலாம் என்ற நினைப்பு வந்தாலும் தவிர்த்து விடுவேன். முடியாமல் படிக்க நேர்ந்தால், மனம் முழுவதும் கனத்து, கண்களில் நீர் நிறைந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு ஒரு வாரம் ஆகினும் சோற்றை பார்த்தால், ஒரு கணம் அதிர்ந்து, இறைவா என்று மனம் சொல்லிக்கொள்வதை தவிர்க்கவே முடியாது. ஆழ்மனதை சென்று தைக்கும் வரிகளும், கதையின் கருவும், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து ஒவ்வொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55518

அறமும் வாசகர்களும்

அன்பின் ஜெயமோகன், உங்களின் அறம் நூலினை மிக கனத்த இதயத்தோடு வாசித்து முடித்தேன். நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்துகளிலும் கதைச் சூழலின் உணர்வுகள் விரவிக் கிடக்கின்றன. நீங்கள் இக்கதைகளை எழுதிய மனச் சூழலும் வியக்க வைக்கிறது. சமூகத்தில் பாழ் போன அற நிலைகளை வாசிக்கும் தருணம் ஏதோ ஒரு கோபம் ஏற்படவே செய்தது. அது சமூகத்தின் மீதான கோபமா அல்லது எனது மீதான கோபமா எனவும் சிந்திக்க வைக்கிறது. நீங்கள் இக்கதைகளில் சொல்லி இருக்கும் அனைத்து நபர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39956

உலகம் யாவையும்-கடிதங்கள்

அன்பு ஜெயமோஹன், வணக்கம். நடராஜகுருவும் காரி டேவிஸும் காணும் கனவு உலகம் அற்புதமானது. சிறுகதை உலகம் யாவையும் அறிவுஜீவிகள் தமது சிந்தனைத் தடத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கும். இசைக் கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் சில எழுத்தாளர்கள் பூலோக எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயங்குவது அந்தக் கனவு உலகின் சாத்தியத்திற்கு அச்சாரமாகும். நன்றி. சத்யானந்தன். அன்புள்ள சத்யானந்தன் ஓருலகம் என்ற கனவு உண்மையில் நவீன ஐரோப்பாவை உருவாக்கிய மாமனிதனின், மகாகவி கதேயின் சிருஷ்டி நன்றி ஜெ அன்புள்ள ஜெயமோகன் சார், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13502

உலகம் யாவையும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ இதுவரை வந்த அறம் வரிசை கதைகள் எல்லாமே ஓவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருந்தன. கதை என்று பார்த்தால் பொதுவான அம்சங்கள் உள்ள கதைகள் சில கதைகள் மட்டும்தான். ஆனால் காரி டேவிஸைப்பற்றிய உலகம் யாவையும் கதை எல்லாவற்றிலும் இருந்து தனித்து நிற்கிறது. கொஞ்சம்கூட உணர்ச்சிவேகத்தைத் தூண்டாமல் வெறும் கவித்துவத்தினால் மட்டுமே சிறந்த கதையாக நிற்கிறது இந்தக்கதை. இதில் உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்கள் உள்ளன. அவைகூட கவித்துவமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. ஒரு சிறு அறையில் உலகை உருவாக்குவதைப்போல உலகத்திலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13450

உலகம் யாவையும் [சிறுகதை] 3

பகுதி [ 3 ] நான் காரி டேவிஸை பார்க்க பின்மதியம் அவரது குடிலுக்குச் சென்றேன். அது திறந்தே கிடந்தது, அவர் இல்லை. அருகில் எங்காவது நிற்பார் என்று நினைத்தேன். கருணாகரன் ‘சாயிப்பு இப்பம் அங்ஙோட்டு போயி’ என்றார். கதவு திறந்து கிடக்கிறதே என்றேன். ‘சாயிப்பினு பூட்டு இல்லா’ என்று சிரித்தார். நான் சாலைக்கு வந்தபோது காரி டேவிஸ் காலையில் அவர் துவைத்து காயவைத்த அந்த காக்கி ஆடையுடன் ஒரு ஜீப்பில் அமர்ந்திருந்தார். ஜீப்பில் வெள்ளை ஆடை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13318

உலகம் யாவையும் [சிறுகதை] 2

பகுதி – 1 [ 2 ] காரி டேவிஸைப்பற்றி வாசித்தபின்னர்தான் அன்று நான் அவரை மீண்டும் சந்திக்கச் சென்றேன். அவர் நியூயார்க் பிராட்வேயில் நடிகராக இருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவரது தெளிவான உச்சரிப்பும் துல்லியமாக முகபாவனைகள் மூலம் தொடர்புறுத்தும் தன்மையும் அங்கே பெற்ற பயிற்சியினால்தான் என்று அப்போது தோன்றியது. அவரது பயிற்சிகளே விதவிதமானவை. பாதிரியாருக்கான படிப்பில் பள்ளியிறுதி. அதன்பின் தொழில்நுட்பக் கல்வி. அதன்பின்னர் நடிகர். அதன்பின் விமானமோட்டி. மிகச்சிறந்த இளம் விமானிக்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13316

உலகம் யாவையும் [சிறுகதை] 1

வெள்ளைத்தோல் கொண்ட எவரிடமும் முதலில் கேட்கும் கேள்வியை நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்?’. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாத முதல் கேள்வியே அதுதான். அல்லது இப்போது தோன்றுகிறது, அவரை உண்மையில் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் கேட்டுப்பார்க்கவேண்டிய கேள்வியும் அதுதான் என. அவருக்கு எழுபத்தைந்து வயதிருக்கும். வாய் நன்றாக மடிந்து உள்ளேசென்று உதடுகளே இல்லாமலிருந்ததும், நேரான ஜெர்மனியமூக்கு வாயை நோக்கி சற்றே வளைந்திருந்ததும், வாய்க்கு இருபக்கமும் இருந்த மடிப்புகளும் மட்டுமே அவரது வயதைச் சொல்லின. ஏழடி வரை உயரமிருப்பார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13312