Tag Archive: உறவு

உறவு பற்றி…

அன்புள்ள தனா கதை நன்றாக வந்துள்ளது. தாம்பத்தியம் என்பதன் இரு எல்லைகளை அவை ஒன்றுடன் ஒன்று பெரிதாக உரசாமலேயே கதையில் சொல்லியிருக்கிறீர்கள். கதைமாந்தரை விவரிக்காமலேயே காட்டிவிடவும் முடிந்திருக்கிறது. சிறுகதையின் இலக்கணம் அதுதான். அது மெல்லிய தீற்றல்களாக மட்டுமே கதையைச் சொல்ல வற்புறுத்தும் கதைவடிவம். அந்த இலக்கணத்தை மீறவேண்டுமென்றால் ஆழமான ஆன்மீக அலைக்கழிப்புகள் அல்லது அபூர்வமான உணர்வெழுச்சிகள் தேவை. இக்கதை உறவுகளின் பின்னலில் ஓர் ஊடும் பாவும் சந்திக்கும் தருணம் மட்டுமே. ஆகவே ஜப்பானிய மூங்கில் ஓவியங்கள் போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36339

வேஷம், உறவு கடிதங்கள்

வேஷம் சிறுகதை குறித்து: பல முடிச்சுகளையும் , யூகங்களையும் விட்டுச் சென்ற நல்ல சிறுகதை. கதையில் சமநிலை கைகூடி வரவில்லை. அதாவது ஆசானின் புலி வேஷம் மீது மக்களுக்கு இருந்த மரியாதைக்கு கதையில் வலு சேர்க்கப்படவில்லை. ஆசானின் வாய்மொழி மூலமாகவோ, அல்லது அவருடைய களியாட்டத்தில் ஏற்படும் மனவோட்டங்கள் மூலமாகவோ அதை இன்னும் விவரித்திருக்கலாம். அதற்கு எதிர்ப்பதமாக வரும் அசல் புலியை குறித்த ஊராரின் பயம் உருவாவது, அதை அவர்கள் சொல்லக் கேட்ட கதைகள் மூலம் வளர்த்தெடுப்பது பின்னர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38477

உறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ., உறவு கதை படித்தேன்..மிக இயல்பாக ஆரம்பித்து ,உச்சம் அடைந்து பின் வடிவது என..உக்கிரமான காமம் போலே.. மிக நுண்ணிய சடாரென மனதின் ஓர் நரம்பை சுண்டிவிடும் “ஆஸ்பத்திரில குடுத்த மாத்திரைய அங்கனக்குள்ளயே முழுங்கிட்டு சரியாப்போயிரும்லன்னு கேட்டு சிரிக்கிறா.. ’ ஒரு சேர செவிட்டில் அறையும் நிலையாமையும், களங்கமற்ற அன்பின் சாந்தத்தையும் கண்முன்னே காட்சி விரித்தது. வேறன்ன சொல்ல .. இணைய வெளி எங்கும் அனானியாக சுற்றி திரிந்து காறி உமிழ்ந்து கலாய்க்கும் என் தலைமுறையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37975

உறவு,தனசேகர்-கடிதங்கள்

ஜெ, உங்கள் பதிலுக்கு நன்றி. நலமாகவே இருக்கிறேன். உங்கள் தளத்தில் உங்களுக்கு வரும் கடிதங்கள், விவாதங்களைப் படித்துவிட்டு கடிதம் எழுத உட்கார்ந்து பின்னர் தவிர்த்திருக்கிறேன் என்பதே உண்மை. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சாமியார் மனோபாவத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். வயதாகிக் கொண்டிருக்கிறது பாருங்கள்! :) ஆம்; தனசேகருக்குள் ஒரு முதிர்ச்சியான கதையாசிரியன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ‘உறவு’ ஒரு சிக்கலான கதை. ஆனால் அதை அவர் சொன்ன விதம் எனக்குப் பிடித்திருந்தது. கதையைப் படிக்கையில் ஏனோ அடூர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37917

புதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்

கையிலிருந்த‌ பெட்டியை எடுத்து வெளியே வைத்துவிட்டு வீட்டின் க‌த‌வைப் பூட்டினேன். பெட்டியைத் தூக்க‌ அது க‌ன‌மாக‌ இல்லை. ஐந்து வருடச் சம்பாத்தியம் க‌ன‌மில்லாம‌ல் இப்பெட்டியில் கிட‌க்கிறது. அவள் சிறுவாடு சேர்த்ததெல்லாம் என்ன செய்தாள் என்று சரியாகத் தெரியவில்லை. சின்னமனூரில் அவுகப்பன் மூலமாக வட்டிக்கு குடுத்திருக்கலாம். ஐநூறு, ஆயிரமென.. அதிகம் போனால் பத்தாயிரத்திற்கு மேல் இருக்காது. ’அதப்பெறக்கி தின்னுட்டு போறா கண்டாரோழி..அந்த மட்டுக்கும் ஒழிஞ்சா செரி’ குளிரில் உடல் வெடவெடத்தது. வாச‌ல் வ‌ழி கீழிற‌ங்கி யூக‌லிப்ட‌ஸ் ம‌ர‌ங்க‌ள் இருப‌க்க‌மும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36328