Tag Archive: உரையாடல்

கெட்டவார்த்தைகள்

  அன்புள்ள ஜெ.  வணக்கம் … பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2196

கல்வியழித்தல்

அன்புமிக்க திரு. ஜெயமோகன் வாசிப்பு பற்றி குமார் முல்லக்கல் அவர்களின் கேள்விக்கு மிக விரிவாகப் பதிலளித்திருக்கிறீர்கள். “கற்றாரை யான் வேண்டேன் ; கற்பனவும் இனியமையும்” என்னும் மாணிக்க வாசகரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்றறிய ஆவல் மரபின் மைந்தன் முத்தையா *** Dear J, ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து… . ”ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை இப்படிச் சொல்கிறார். காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம், இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2553

புரட்சி இலக்கியம்

  ஜெ வெகு நாட்களாய் ஒரு சந்தேகம் – புரட்சி இலக்கியங்கள் மற்றும் போர் இலக்கியங்கள் குறித்து. இது போன்ற படைப்புக்கள் ஒரு குறிப்பிட்டச் சமூகத்தின் ஒரு காலக் கட்டத்தை, அவர்களது பாதிப்பினை, அதன் நிகழ்வுகளை, தாக்கங்களை பிரதி பலிக்கும் விதமாகவே இருக்கும். The creations are an expression of their angst & pain. It is created at an inflection point of a time period. என் சந்தேகம் – ஒரு வலியின், மனவெழுச்சியின், உந்துதலில் உருவாக்கப்பட்டப் படைப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16764

விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…

 ஜெயமோகன் சார், தங்களின் ராஜா ரவி வர்மா பதிப்பை இப்பொழுது தான் படித்தேன். எங்கள் வீட்டில் அதே சரஸ்வதி படம் உள்ளது. மிகவும் அழகாகவும் தெய்வீகமாகவும்    இருப்பதாகவே உணர்கிறேன்.  ஆனால் விவேகனந்தர் அதை பற்றி கூறியது ஞாபகம் வந்தது. தங்களின் பார்வைக்காக பின்வருமாறு. இது  “ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்” கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. As regards ourselves, we need not, of course, at any rate for the present, go in for collecting …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2493

பின் தூறல்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருந்தபோது நானும் ஒரு பெண்ணும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். பிரச்சனைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன‌. எனக்கு சமீபத்தில் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்கு இன்னும் ஆகவில்லை. இந்த மூன்று வருடங்களி்ல் அவள் எனக்கு மாதம் ஒரு முறையாவது மின்னஞ்சல் அனுப்புவாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2403

ஏன் விவாதிக்கிறேன்

இரு வெவ்வேறு நண்பர்கள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் இலக்கியமல்லாத விஷயங்களில் ஏன் ஈடுபடுகிறேன் என்று கேட்டார்கள். ஏன் வாழ்க்கைபற்றி வாசகர் எழுதும் கடிதங்களுக்கு பதில்கள் அளிக்கிறேன்? இதெல்லாம் இலக்கியவாதியின் பணியா? அவர்கள் சென்ற சிற்றிதழ் யுகத்தைச் சேர்ந்தவர்கள். ’வேறு எழுத்தாளர்கள் இப்படிச் செய்வதே இல்லையே’ என்றார் ஒருவர். இந்தக் கடிதங்கள் எல்லாமே கட்டுரைகளும் கூட. இவற்றை எழுதுவதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வினாக்களை எனக்கு எழுதியறிவிக்கும், என்னுடன் விவாதிக்க விரும்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38091

ஒலியும் மௌனமும்

அன்புள்ள ஜெ, இசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த ஞாபகம். உங்கள்மனம் ஒருவேளை பிம்பங்களால் மட்டுமேயானதோ என்றொரு ஐயமும் ஏற்பட்டது. ஆனால்அவ்வாறிருக்க சாத்தியம் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. எந்த ஒரு தத்துவ சிந்தனையும், மரபும், மார்கமும் ஒலிகளுக்குத் தரும்முக்கியத்துவம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. அது ஓங்காரத்தை உலக முதலாய் நிறுத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2304

தத்துவத்தைக் கண்காணித்தல்

அன்புள்ள ஜெ…சார், 1980-90 களில் ரஜ்னீஷ் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருப்போம். ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று ஒரு நாள் மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு வந்தார். ‘நான் இன்றுதான் பிறந்திருக்கிறேன். என்னை நான் diseducate செய்து கொண்டேன்.‘ என்றார்.  (அச்சில் வருவதை…பாடப்புத்தகங்கள் உள்பட…உண்மை என்று என்று நம்பிக்கொண்டுருந்த கால கட்டம் அது)      சிறிது நேரம் கழித்து ‘பசிக்கிறது…மசால் வடை சாப்பிடலாமா‘ என்றார். மற்றொரு நண்பர் ‘மசால் வடையை diseducate செய்யவில்லையா‘ என்று கேட்டார். அவ்வளவுதான்..அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2226

அதே மொழி

சார், சுந்தர ராமசாமி – குரல் கேட்டேன். எனக்கும் இதுவே அவரது குரல் முதல் முறை கேட்கிறேன். அவரது குரல் நான் மிக எதிர்பார்த்திருந்த மாதிரி தான் இருந்தது. நான் கிட்டத்தட்ட அது உங்கள் குரலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். பெரிய ஏமாற்றமில்லை. சிறு மாற்றங்களுடன் அவரது பேசு முறை உங்களது பேசுமுறையோடு மிகவும் ஒத்துப்போகிறது. என்ன, நீங்கள் பேசுவது வேறு விஷயங்கள். :) ஒருவேளை இது நாகர்கோவிலின், திருவிதாங்கூரின் பொது மொழியாக, அக்ஸண்டாக இருகக்கூடும். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66358

இண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும்

அன்புள்ள ஜெ, நேற்று இன்டர்ஸ்டெல்லார் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியில் மானுட நாடகம் ஒன்றை மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். கதை விண்ணியற்பியலின் மிகக் குழப்பமான, மிக நுட்பமான கோட்பாடுகளை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதுபோன்ற தளங்களில் கதை சொல்லப்படும்போது ஒட்டு மொத்த மனித சமூகம் ஒரு உயிரினமாக‌ (Species) பொருள்கொள்ளப்படுகிறது. இந்தப் படத்தில் அது மிகத் தெளிவாக சொல்லப்படுகிறது. வேறெந்த அடையாளமும் அர்த்தமிழந்துபோகிறது. படத்தில் மருந்துக்கும் கூட மதம் இல்லை. அதன் தத்துவங்கள் அனைத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66341

Older posts «