Tag Archive: உயிர் எழுத்து

உயிர் எழுத்து நூறாவது இதழ்

சுதீர் செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் உயிர் எழுத்து மாத இதழின் நூறாவது இதழ் வெளிவந்துள்ளது. வழக்கம்போல நேர்த்தியான வடிவமைப்புடன் அமைந்துள்ளது. இவ்விதழின் மையக்கரு எஸ்.வி.ராஜதுரைக்கும் உயிர் எழுத்துக்குமான உறவு. எஸ்.வி.ஆரின் அழகிய புகைப்படம் இதழின் அட்டையில் இடம்பெற்றிருக்கிறது. எஸ்.வி.ஆரும் உயிர் எழுத்தும் என்ற தலைப்பில் சுதீர் செந்தில் எழுதிய உணர்ச்சிமிகுந்த கட்டுரை அவருக்கும் இதழுக்குமான உறவை விவரிக்கிறது. எஸ்.வி.ஆர் இவ்விதழில் மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மாய யதார்த்தவாதத்தின் அரசியல்முகத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட மாயமும் மாந்த்ரீகமும், டிம்பக்டூ என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79351

அச்சிதழ்கள்

அச்சு இதழ்கள் முன்னைவிட இப்போது நிறைய வருகின்றன. மின்னூடகம் வந்தபின் அச்சு ஊடகங்கள் குறையும் என்னும் எண்ணம் பரவலாக இருந்தது, ஆனால் அது பொய் என இவை காட்டுகின்றன. ஆனால் இவை தற்காலிகமாக நிகழ்பவையா என்றும் ஐயமாக இருக்கிறது. கல்குதிரை, சிலேட் ,மணல்வீடு போன்ற சீராக வெளிவராத சிற்றிதழ்கள் ஒருவரிசை. உயிர்மை , காலச்சுவடு, தீராநதி போன்ற நடுத்தர இதழ்கள் இன்னொரு பக்கம். அமிர்தா, அந்திமழை, ஆழம், நற்றிணை, உயிர் எழுத்து போல மேலும் ஜனரஞ்சகமாக, மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78538

வண்ணதாசனின் சினேகிதிகள்

வண்ணதாசன் எழுதிய ‘சினேகிதிகள்’ சமீபத்தில் தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. விசித்திரமான மௌனம் நிறைந்த கதை இது. ஒழுக்கத்தின் இந்தக் கரையில் நின்றுகொண்டு அந்தக்கரையைக் குறுகுறுப்புடன் எட்டிப்பார்க்கும் ஒருவனின் நோக்கில் எழுதப்பட்ட இக்கதையில் ஒரு நல்ல வாசகன் உய்த்தறியவேண்டிய பல நுண்ணிய தளங்கள் உள்ளன. ஒழுக்கமுறைக்குக்கு வெளியே வாழ்கிறவர்களுக்குள் ஏற்படும் ஆழமான நட்பு, அவர்களின் தனித்துவம் கொண்ட உறவுகள் மற்றும் பிரியங்கள் என.[உயிர் எழுத்து மாத இதழ்] வண்ணதாசனின் ‘சினேகிதிகள்’ கதை

Permanent link to this article: https://www.jeyamohan.in/23157