Tag Archive: உயிர்மை

அச்சிதழ்கள்

அச்சு இதழ்கள் முன்னைவிட இப்போது நிறைய வருகின்றன. மின்னூடகம் வந்தபின் அச்சு ஊடகங்கள் குறையும் என்னும் எண்ணம் பரவலாக இருந்தது, ஆனால் அது பொய் என இவை காட்டுகின்றன. ஆனால் இவை தற்காலிகமாக நிகழ்பவையா என்றும் ஐயமாக இருக்கிறது. கல்குதிரை, சிலேட் ,மணல்வீடு போன்ற சீராக வெளிவராத சிற்றிதழ்கள் ஒருவரிசை. உயிர்மை , காலச்சுவடு, தீராநதி போன்ற நடுத்தர இதழ்கள் இன்னொரு பக்கம். அமிர்தா, அந்திமழை, ஆழம், நற்றிணை, உயிர் எழுத்து போல மேலும் ஜனரஞ்சகமாக, மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78538/

போகனுக்கு அன்புடன்

போகன் சங்கர் கவிதைகள் பற்றி எழுதிய குறிப்புக்கு அவர் வழக்கமான சாணிபூசும் மொழியில் பதிலளித்திருக்கிறார். நான் அவரை முன்பு பாராட்டினேன், இப்போது வசைபாடுகிறேன் என்பது அவரது புரிதல். அவரது கதையைப்பாராட்டி இந்த இணைய தளத்தில்தான் வெளியிட்டேன். அறிமுக எழுத்தாளராக. இப்போதும் ஓர் எழுத்தாளராக அவர் தன்னுடைய இடத்தைக் கண்டடையமுடியும் என்றும் நினைக்கிறேன். அவருக்கு எழுதுவதற்குரிய அடிப்படையான அவதானிப்புகள் உள்ளன அவர் உயிர்மை இதழில் எழுதிய மீட்பு என்ற சிறுகதை சமீபத்தில் வாசித்ததில் குறிப்பிடத்தக்கது என்று தோன்றியது.அழகியல் ரீதியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74574/

சுஜாதா விருதுகள்

ஜெ, சுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறீர்கள். சுஜாதா விருதுகளைப்பற்றிய உங்கள் வாழ்த்துக்களை காணவில்லையே? சித்ரன் அன்புள்ள சித்ரன். முதல் கடிதம். புரிகிறது. ஆனாலும் சீரியஸாகவே பதில் சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல இளையதலைமுறையினர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74452/

கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தவருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். உங்கள் வாசகி நான். முக்கியமாக உங்கள் புத்தகத்தை வாங்கத்தான் போனேன். இந்தப்புத்தகக் கண்காட்சியில் உங்களுடைய ஒரு படம்கூட இல்லை. உங்கள் புத்தகங்களை நான் தமிழினி, உயிர்மை ,நற்றிணை ,கிழக்கு, வம்சி, கயல்கவின் எல்லா பதிபக்கங்களிலும் வாங்கினேன். அவர்கள் எவரெவரோ எழுத்தாளர்களின் படங்களெல்லாம் வைத்திருந்தார்கள். உங்கள் படம் மட்டும் இல்லை. தமிழினியில் கேட்டேன். அவர் எங்க எழுத்தாளர் இல்லை, அவர் புக்கை போடுறோம் அவ்வளவுதான் என்று ஒருவர் சொன்னார். நற்றிணையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71480/

எஸ்ரா அனைத்துச்சிறுகதைகளும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/69444/

உயிர்மைகூட்டம் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெமோ ஜடாயுவுக்கு நீங்கள் அளித்த பதிலின் மாற்று சாத்தியங்களைச் சிந்தித்திருப்பீர்கள் எனினும் எனக்கென்னவோ பூசலை நிறுத்த ஒரு கரம் தரப்பட்டால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்வதில் எந்தவித தவறும் இருப்பதாக தோன்றவில்லை.இதற்கான தர்க்கத்தை நீங்கள் எழுதிய காந்தி கட்டுரைகளிலிருந்தே நான் பெற்றேன்.எவ்வளவு கீழ்மையான வெறுப்புடனும் உரையாட முனைவதுதான் காந்திய அணுகுமுறை அல்லவா.பகையைவிட பகையாகத் திரிந்த நட்பு மிக அபாயகரமானது என்பது கண்டிருக்கிறேன்,ஏனெனில் எதிரிகளை விட அவர்கள் நம்மை நன்கு அறிவார்கள்.நமது மென்மையான இடங்களை நோக்கி அம்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8255/

உயிர்மை நிகழ்ச்சி

அன்புள்ள ஜெ.மோ, நலமா? எஸ் ரா தளத்தில் நீங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறீர்கள் என்று இருக்கிறதே – http://sramakrishnan.com/view.asp?id=452&PS=1 நீங்கள் உண்மையிலேயே கலந்து கொள்கிறீர்களா? உங்களை மிகவும் இழிவுசெய்து அவமதித்த உயிர்மை/ஹமீது/பிரபஞ்சன் கும்பல் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சி இது. உங்கள் நண்பர் ஷாஜிக்காக நீங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறீர்கள் என்று சமாதானம் சொல்லப் பட்டால் கூட, அது உங்கள் வாசகர்கள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும், வருத்தமளிக்கும் விஷயமாக இருக்கும், நான் உட்பட :((( அன்புடன், ஜடாயு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8193/

மனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்

அன்புள்ள ஜெ, 25.12.2009 அன்று சென்னையில் நடந்த உயிர்மை கூட்டத்துக்கு போனேன். அங்கே ஒரு புத்தகத்தில் நீங்கள் மனுஷ்யபுத்திரனின் உடலூனத்தைப் பற்றி எழுதிவிட்டீர்கள் என்று சாரு நிவேதிதா உங்களை மிக அவமரியாதையாக ‘டேய் முட்டாள், வாடா போடா’ என்றெல்லாம் பேசினார் . சாரு நிவேதிதா அன்று மிகக்கேவலமாக பேசினார். நாகரீகவரம்புகளுக்குள் நிற்கவில்லை. சாரு நிவேதிதா உயிர்மை வெளியிட்ட அந்தப்புத்தகத்தை அந்த மேடையில் கிழித்து வீசி அதை அனைவரும் காறித் துப்ப வேண்டும் என்று சொன்னார். பிரபஞ்சன் உட்பட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6079/

உயிர்மை இந்த இதழில்…

மனுஷ்யபுத்திரனுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன், ”புதிய உயிர்மையில் பாரதிமணி எழுதிய கட்டுரை மிக முக்கியமானது. மகாபாரத காலத்திலிருந்தே இந்திரபிரஸ்தத்தில் ஊழல், பாரபட்சம், காக்காய்பிடித்தல், அடுக்களைச்சதிகள், படுக்கையறைப் போராட்டங்கள் எல்லாம் இருந்துவந்திருப்பது தெரியும்….ஆனால் வழிப்பறியிலும் ஆட்சியாளர்கள் ஈடுபடுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது” என. வாய்விட்டுச் சிரித்தார். க.நா.சுப்ரமணியத்தின் மருமகனான பாரதிமணி எங்கள் ஊர் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் உயர்பதவிகள் வகித்தவர். ஞான ராஜசேகரனின் பாரதி படத்தில் பாரதிக்கு அப்பாவாக நடித்தமையால் அப்பெயர் பெற்றார். டெல்லியில் பல பயில்முறை நாடகங்களை நிகழ்த்தியவர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/496/