அலஹாபாத் என்னும் பிரயாக்ராஜுக்கு அந்திக்குள் சென்றுசேர்வதென்று திட்டம். ஆனால் அதற்கு இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவு. ஐந்துமணிநேரத்தில் போய்விடலாம்தான். ஆனால் காலை என்பது பன்னிரண்டு மணி என கணக்கு. ஒருவழியாக ஒன்பது மணிக்கு எழுந்து சொக்கிய கண்களுடன் பார்த்துவிட்டு பொழுது விடிய இன்னும் கொள்ளைநேரம் இருக்கிறது என்று திரும்பப்படுத்துக்கொள்ளும் மனநிலை. ஆனால் உச்சிப்பொழுதிலும் இதமான இளவெயில்.கொஞ்சம் நிழல் இருந்தால்கூட அங்கே குளிர். வட இந்தியாவிற்கு பொதுவாக இருக்கும் ஒரு வெறிச்சிட்ட தன்மையை சாலையில் பார்த்துக்கொண்டே சென்றோம். மஞ்சள்மலர்கள் நிறைந்த …
Tag Archive: உத்தரப்பிரதேசம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/117995
நீர்க்கூடல்நகர் – 2
இன்று காலை ஆக்ராவிலிருந்து கிளம்பினோம். காலை என்றால் குளிர்காலக் காலை. கிளம்புவதற்கு பெரும்தடையே போர்வைதான். குழந்தையை வெளியேற விடாமல் கருப்பை கடைசிநேரத்தில் கவ்விப்பிடித்துக்கொள்ளுமாம். அதை காலாலும் கையாலும் உதறி தலையால் கிழித்துத்தான் குழந்தை வெளியே வரவேண்டும். கருப்பை வடிவில் சூழ்ந்திருப்பது சென்றகாலத்தின் பிராப்தம் என்று சொல்லப்படுவதுண்டு. போர்வைக்குள் இருப்பவை இனிய கனவுகள். ஒருவழியாக எழுந்து கீழே சென்று அவுன்ஸ் கிளாஸில் தரப்படும் டீயை நாலைந்து வாங்கிக் குடித்து மீண்டும் மேலே வந்து காலைக்கடன்களைக் கழித்து குளியல். எருமையை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117924