குறிச்சொற்கள் உத்தரன்

குறிச்சொல்: உத்தரன்

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79

போர்முரசு கொட்டும் கணம் வரை என்ன நிகழ்கிறது என்பதையே உணராதபடி பலவாகப் பிரிந்து எங்கெங்கோ இருந்துகொண்டிருந்தான் உத்தரன். இளமைந்தனாக விராடநகரியின் ஆறுகளில் நீந்திக் களித்தான். அரண்மனைச் சேடியருடன் காமம் கொண்டாடிக்கொண்டிருந்தான். அறியா நிலமொன்றில்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76

கரிச்சான் குரலெழுப்பிய முற்புலரியிலேயே சங்கன் விழித்துக்கொண்டான். முந்தையநாள் முன்னிரவிலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒளியறா மாலையிலேயே உணவு பரிமாறப்பட்டுவிட்டிருந்தது. பன்றியிறைச்சித் துண்டுகள் இட்டு சமைக்கப்பட்ட ஊனுணவை தொட்டியில் இருந்து பெரிய...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72

அவை மெல்ல தளர்ந்தமையத் தொடங்கியது. பெருமூச்சுகளும் மெல்லிய முணுமுணுப்புகளும் ஒலித்தன. அதுவரை அந்தச் சொல்லாடல் செல்லும் திசை எது என்பதே அவர்களை முன்னெடுத்துச் சென்ற விசையாக இருந்தது. அது கண்ணுக்குத் தெரிந்ததும் முதலில்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71

உத்தரன் அர்ஜுனனின் முகத்தை மட்டுமே நோக்கினான். அருகே இருந்த மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபன் உத்தரனிடம் “என்ன சொல்கிறான் நாகன்?” என்றான். “படைகளை தூண்டும்பொருட்டு அவன் தற்கொடை அளிக்கவிருக்கிறான்” என்றான் உத்தரன். அவன் வாய்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70

யுதிஷ்டிரரின் அவைக்குள் நுழைகையில் உத்தரன் தன் உடல்முழுக்க எடைமிக்க களைப்பை உணர்ந்தான். உள்ளே யுதிஷ்டிரரும் பிறரும்கூட அத்தகைய களைப்புடன் இருப்பதாகத் தோன்றியது. மதுக்களிப்பில் அகம்குழைந்து நாக்குழறி பேசிக்கொண்டிருப்பவர்களின் கூட்டம்போல அங்கிருந்த பேச்சொலிகள் முதற்செவிக்கு...

வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 69

உத்தரன் வெளியே நடந்தபோது சகதேவன் அவனுக்குப் பின்னால் வந்து தோள்தொட்டு “என்னுடன் வருக, விராடரே” என்றான். உத்தரன் அத்தொடுகையால் நெகிழ்வடைந்து “ஆம், ஆணை” என்றான். “கௌரவகுல மூத்தவர் என்னை பார்க்க வருகிறார். அவர்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68

புலரி எழத்தொடங்கியபோது உத்தரன் தன் படைமுகப்பிலமைந்த சிறுமுற்றத்தில் வில்பயின்றுகொண்டிருந்தான். நூறு அகல்சுடர்கள் நிரையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்க அவன் அம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுடர்களை அணைத்தன. எட்டாவது அம்பு குறிபிழைத்ததும் வில்லை தரையில் ஊன்றி...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67

பீஷ்மரின் குடில் முற்றத்துக்கு வந்ததும் சகதேவன் “நாம் மாதுலர் சல்யரை சந்திக்கவேண்டும். பிதாமகர் பால்ஹிகரையும் இன்னும் சந்திக்கவில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அவர்களிடம் நம் எண்ணத்தை நாம் முழுமையாக சொல்லவில்லையா?” என்றார். சகதேவன்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66

கௌரவப் படையின் முகப்பு அஸ்வத்தாமனால் ஆளப்பட்டது. தொலைவிலேயே அவனும் இரு படைத்தலைவர்களும் படை முன்னணிக்கு வந்து கைகூப்பியபடி நிற்பதை பார்க்கமுடிந்தது. யுதிஷ்டிரரும் இளையோரும் ஏறிய தேர்கள் செருகளத்தின் செம்மண் பூழியில் சகடத்தடம் பதித்தபடி...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 65

துணைப்படைத்தலைவனாகிய கஜன் குனிந்து கூடாரத்திற்குள் நுழைந்து முழந்தாளிட்டு அமர்ந்து தலைவணங்கி “மாமன்னர் யுதிஷ்டிரரின் அவைக்கு தங்களுக்கு அழைப்பு வந்துள்ளது, இளவரசே” என்றான். தரையிலிட்ட மரவுரிக்கு மேல் அமர்ந்து சிறுபீடத்தில் ஓலைகளை வைத்து படித்துக்கொண்டிருந்த...