Tag Archive: உதய்புர்-நகடா

அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா

சமணர்களுக்கு முக்கியமான புனிதத்தலமான மிர்பூர் ஒரு காலத்தில் ஒரு ஊராக இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அங்கே ஒரு குடியிருப்புகூட இல்லை. கச்சிதமான லாடவடிவில் மலை சூழ்ந்திருக்க நடுவே ஒரு வெண்பளிங்கு ஆலயம். பார்ஸ்வநாதரின் சன்னிதி. அதனருகே இரு சிறிய ஆலயங்கள். ஒரு தர்மசாலை. தர்மசாலையை அந்த ஊருக்கு பெரியது என்றே சொல்லவேண்டும். இருநூறு பேர் தங்கும் வசதி உடையது. அதை கவனித்துக்கொள்ளவும் கோயில் பூசைக்குமாக நான்குபேர். அவர்கள் தனியாக அங்கே தங்கியிருக்கிறார்கள். பத்து கிமீ தூரத்தில்தான் கிராமம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24721