Tag Archive: உதங்கர்

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-44

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் உதங்கர் முதலான முனிவர்களிடம் சொன்னார். “வேதமுடிபின்மீது கேட்கப்படும் அனைத்து வினாக்களுக்கும் அடிப்படை ஒன்றே. இங்கு இவ்வுலகின் இப்பொருட்களைக்கொண்டு அதை எப்படி அடைவது? அதை எவ்வகையில் நிறுவுவது?” அவர் கையை அசைக்க அவ்வசைவுக்கேற்ப நாகம் மெல்ல தலைதூக்கியது. அதன் படம் விரிந்து செதில்கள் அசைந்தன. “எல்லா அவைகளிலும் வேதமுடிபு பருவடிவான வினாக்களையே எதிர்கொள்ளும். ஏனென்றால் அது நுண்வடிவானது. இனிவரும் காலங்களிலும் அவ்வாறே. முனிவரே, என்றும் வேதமுடிபுநிலையின் எதிர் என அதுவே நின்றிருக்கும்.” அவருடைய கையசைவுக்கேற்ப …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108964

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-43

பகுதி பத்து : பொருள் நைமிஷாரண்யத்திற்கு வெளியே காலதேவனின் ஆலயத்திற்கு வந்து அமர்ந்த யமனுக்கு அருகே அகோரன் என்னும் காலன் வந்து வணங்கினான். அவர் விழிதூக்கி நோக்க “குசேலரின் இறுதிக்கணத்தில் உடனிருந்தேன். அவர் உயிரை கீழுலகுக்கு கொண்டுசேர்த்துவிட்டு வருகிறேன், அரசே” என்றான். யமன் தலையசைத்தார். “எளியவர், அவர் கணக்கு முற்றிலும் ஒழிந்திருக்கிறது என்றார் சித்திரபுத்திரன்” என்றான் அகோரன். யமன் பெருமூச்சுவிட்டார். “எஞ்சுவதென்ன, அரசே?” என்று அகோரன் கேட்டான். “இன்னும் எவர்?” என்று யமன் திருப்பி கேட்டார். “காசியிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108962