Tag Archive: உச்சவழு

கரடி-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு கதைகளில் உச்சவழு ,முடிவின்மைக்கு அப்பால் ,கடைசி முகம் போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமானவை .பல முறை உங்களுக்கு மெயில் அனுப்ப நினைத்து பயத்தினால் அனுப்ப முடியாமல் தவிர்த்திருக்கிறேன் ..சில மெயில்களை ஒரு சில வரிகள் மட்டும் தட்டச்சு செய்து அனுப்பி இருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75232

உச்சவழு- இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெ, இன்று மூன்றாவது முறையாக உச்ச வழு சிறுகதையைப் படித்தேன். மொத்த கதையும் அதன் தலைப்போடு சேர்த்துப் படிக்கும் போது மட்டுமே திறந்து கொள்கிறது. உச்ச வழு, “top slip” என்பதன் மொழியாக்கம் என்றிருந்தீர்கள். top slip என்பது உயரத்திலிருந்து வழுக்கி விட ஏதுவான இடம் என்றே நினைத்திருந்தேன். அவ்விடமும் ஆங்கிலேயர் காலத்தில் மரங்களை வெட்டி வழுக்கி விட ஏதுவாக இருந்ததால் தான் அப்பெயர் வழங்கப் பட்டது என்றும் கேட்டிருக்கிறேன். (இது போன்ற தகவல்களை ஆதாரப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72042

உச்சவழு-கடிதம்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, “உச்சவழு” பலமுறை வாசித்தேன். நான் புரிந்துகொண்டவற்றை எழுதுகிறேன். மலை அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும் வரையிலான இடைவெளியில் மரம், காடு, யானை முன்சித்திரமாகத் தீட்டப்படுகின்றன. அப்பொழுது அது சாதாரண வர்ணனையாகத் தோன்றினாலும் கதை முழுக்கப் பரவியிருக்கும் அவை உணர்த்துவது மெல்ல மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது. கதையின் முடிவில் ஏற்படுத்தும் அதிர்வை மீண்டும் மீண்டும் படித்து உணர்ந்து கொண்டே இருந்தேன். இருக்கிறேன். தங்குவதற்கு அனுமதி கிடைத்தபின் அவன் காட்டை நோக்கி நடக்கிறான். பங்களாவை அடைந்தவுடன் அவனுடைய மனக்குழப்பம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72040

உச்சவழு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உச்சவழு கதையை வாசித்தேன். ஒரு மனிதனின் மரணத் தேடல் அவன் மனதை காட்டை நோக்கி ஈர்க்கிறது. இத்தனை வருடங்களாக சிந்தையைக் கவராத காடு இன்று அவனுள் உறைவதை உணர்கிறான். காட்டின் அடர்த்தியும், இருளுமே அவனுக்குப் புலப்படுகின்றன. நினைத்தாலே நெஞ்சை உலுக்கும் பெரிய கரிய உருவை எதிர்கொள்ள விழைகிறான் அதற்காக அவன் காத்திருக்கிறான் அதுவும் அவனுக்காக காத்திருப்பதாக உணர்கிறான். அதன் அருகாமையை ஏனோ அவன் மனம் நாடுகின்றது. புலப்படும் ஒவ்வொன்றும் தங்களின் பிம்பங்களை எல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70943

புனித துக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பனிமனிதன். நான் படித்த முதல் தமிழ் நாவல். இதனால், சிறு பிள்ளையாகவே இலக்கியத்தினுள் நுழைவதாக உணர்கிறேன். இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். தங்களுக்கு எழுத வேண்டுமென்று பல நாட்களாக நினைத்துகொண்டிருந்தேன். அதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்ற பயமும் தயக்கமும் என்னை தடுத்துக்கொண்டிருந்தன. நேற்று உச்ச்வழு வாசித்ததின் அனுபவத்தை எழுதியே ஆகவேண்டுமென்று எழுதினேன். தங்கள் பதில் தயக்கத்தை உடைத்து என்னை ஊக்குவித்துவிட்டது. நன்றியைக் தங்களுக்கு கூற இல்லை என்னிடம் வார்த்தைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71297

உச்சவழு -கடிதம்

அன்புள்ள ஜெ, உச்சவழு கதையைப்பற்றி எழுதியிருந்ததனை வாசித்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான். அதேசமயம் ஒருவிஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். உணர்சிகரமான கதைகளை வாசிக்கக்கூடியவர்கள் உடனே தங்களுடைய உணர்ச்சிகரமான எதிர்வினையை எழுதிவிடுவார்கள். அதேபோல சிந்தனைகொண்ட கதைகளை வாசிப்பவர்கள் அதைப்பற்றிய எண்ணங்களை எழுதுவார்கள். பார்த்தீர்கள் என்றால் எந்தக்கதைக்கு மாற்றுக்கருத்து இருக்கிறதோ அதற்குத்தான் வாசகர்கடிதம் அதிகம் வரும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுமாதிரி படிமங்களால் எழுதிய கதைக்கு உடனடியாக வாசகர்கள் எதிர்வினை கொடுக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் உங்கள் கனவை பகிர்ந்துகொண்டாலும் கூட அந்த அனுபவத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42931

உச்சவழு ஏன் வாசிக்கப்படவேயில்லை?

ஜெ, நான் உச்சவழு கதையை இரண்டுமுறை வாசித்தேன். கதை என்ன சொல்லவருகிறது என்று எனக்குப்புரியவில்லை. அதைப்பற்றி வழக்கம்போல ஏதாவது வாசகர்கடிதங்கள் வருகிறதா என்று பார்த்தேன். வாசகர்கள் எவரும் எதுவும் எழுதவில்லையா? ? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன், உச்சவழு பற்றி எந்த வாசகர்கடிதமும் வரவில்லை.உச்சவழு பற்றி நான் வாசக எதிர்வினைகளை எதிர்பார்க்கவுமில்லை. காரணம், அக்கதையின் அமைப்பு பற்றி எனக்குத்தெரியும். அதைப்போன்ற பல கதைகளை முன்னரும் எழுதியிருக்கிறேன். அவையும் வாசிக்கப்படாத கதைகளே பொதுவாக கதைகள் மூன்றுவகையில் வாசகனுடன் தொடர்புகொள்ள முயல்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42736

உச்சவழு [சிறுகதை]

ஆனைமலை என்று பெயர் இருந்தாலும் அது சமநிலத்தில்தான் இருந்தது. அதிகாலையில் அந்த ஊரில் கார் நின்றபோது அவன் வினோதமான ஒரு பறவைக்குரலை முதலில் கேட்டு, அது என்ன என்ற உணர்வுடன் விழித்துக் கொண்டு, அதை நின்றுகொண்டிருந்த காருக்கு வெளியே ஒரு பால்காரரின் சைக்கிளின் ஊதல் ஒலியென அறிந்தான். உட்கார்ந்து தூங்கியதனால் தோள்கள் இறுகி வலியெடுத்தன. கால்களை இதமாக நீட்டி சோம்பல் முறித்தபின் கொட்டாவிவிட்டபடி இறங்கி கதவைச்சாத்திய ஒலிகேட்டு டிரைவர் திரும்பி ”டீ குடிக்கிறிங்களா சார்?” என்றார். ”இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40788