Tag Archive: உசிநாரர்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 7 “ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இருக்கவில்லை” என்று அஸ்தினபுரியின் பேரவையில் மதுகரம் என்னும் யாழை மீட்டி பிரமதன் சொல்லலானான். “உசிநாரர்களின் எல்லை முடிந்துவிட்டிருந்தது. கோசலத்தின் எல்லை தொடங்கவில்லை. அங்கிருந்து சரயு வழியாக கோசலத்தின் பிரகதம் என்னும் முதல்துறைமுகத்திற்குள் நுழைகையில் அவர்கள் கோசலனுக்குரிய வரியை அளித்தனர். பிரகதத்திற்கு முன்னால் ரௌத்ரமுகம் என்னும் இடத்தில் சரயுவின் பெருக்கு பாறைகள் வழியாக நுரைத்து பொங்கிச் சரிந்தது. கோசலத்தின் படகுகள் அதை அடைந்து நின்றுவிடவேண்டியிருந்தது. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68312

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 6 அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின் மெய்ப்பாடுகள் இணைந்து ஒற்றை பாவனையாக மாறி அவனை சூழ்ந்திருந்தன. அன்றிரவு முழுக்க சிறுவனாகிய பகன் நடுங்கிக்கொண்டும் மெல்லிய குரலில் முனகிக்கொண்டும் இருந்தான். அவனை மார்புடன் அணைத்த முதியவள் “மைந்தா மைந்தா” என அவனை அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் உடலின் வெம்மை ஏறி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68301

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 5 அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற விழிகளில் தயக்கமேதும் இருக்கவில்லை. விதுரர் எழுந்து “வருக சூதரே, இங்கே அவை மையத்தில் அமர்க” என்றார். சூதன் தயங்கி “இது அரசுசூழ் மன்று என்று தோன்றுகிறதே” என்றான். “ஆம், நாங்கள் பகன் வெல்லப்பட்ட கதையை கேட்க விழைகிறோம்” என்றார் விதுரர். “நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68274